திருவாய் மலர்ந்து
மடக்கிய நாக்கில்
இருவிரல் அழுத்தி
பூவிதழ் அணைப்பில்
சிறைசெய்த காற்றை
விடுதலை செய்ய...
ஏதும் நிகழாத தடுமாற்றத்தில் நான்
ஏதாவது நிகழாதா என்றேங்கியபடி அவன்
எண்ணிலடங்கா தோல்விக்குப்பின்
நான் மொழிந்ததை அவன் நடத்த
அன்றேயென் பாலகுருவானான்
நான் பயின்றபடியேயிருக்க
வகுப்பில் என்னைப் போல்
இன்னும் சில மாணவிகள்!
18 comments:
அட அட அட! விசில் அடிக்கறதை எவ்ளோ அழகா கவிதை ஆக்கி இருக்கீங்க!
ஊய் ஊய் ஊய்!
எந்திரன் படம் பார்த்த பாதிப்பா ?
இது எனக்கு இன்னமும் வசப்படல கயல்..
கை தட்டியே சமாளிக்கறேன்..
ஹேய்.. புது வீட்டுக்கு ஒரு //சீழ்கை//
:))
சீழ்க்கை cīḻkkai
, n. cf. sītkāra. [K. siḷḷu] Whistle, whistling; நாவின் நுனியை மடித்துச்செய் யும் ஒலி. கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பி னார் (சீவக. 447, உரை).
பூவிதல் ??
வாழ்த்ததோ??
//நசரேயன் said...
எந்திரன் படம் பார்த்த பாதிப்பா ?
//
உம்மோட இடுகைய வாசிச்ச பாதிப்பு போல இருக்கு? ஒரே எழுத்துப் பிழை!!!
வெள்ளோட்டம்
சீழ்க்கைக்கு உற்சாகமாய்
ஒரு விசில் என்னிடமிருந்து.
//
என்.ஆர்.சிபி said...
அட அட அட! விசில் அடிக்கறதை எவ்ளோ அழகா கவிதை ஆக்கி இருக்கீங்க!
ஊய் ஊய் ஊய்!
//
நன்றி!
//
நசரேயன் said...
எந்திரன் படம் பார்த்த பாதிப்பா ?
//
:))
//
சுசி said...
இது எனக்கு இன்னமும் வசப்படல கயல்..
கை தட்டியே சமாளிக்கறேன்..
//
நானும் தான்பா!வெறும் காத்து தான் வருது... நன்றி சுசி
//
பழமைபேசி said...
சீழ்க்கை cīḻkkai
, n. cf. sītkāra. [K. siḷḷu] Whistle, whistling; நாவின் நுனியை மடித்துச்செய் யும் ஒலி. கொக்கரிப்பையும் சீழ்க்கையையு மெழுப்பி னார் (சீவக. 447, உரை).
October 5, 2010 3:14 AM
// கூகுளாண்டவர் கைவிட்டுட்டார். தவறெல்லாம் திருத்தப்பட்டது.:)) அரசியல்ல இதெல்லாம் சகசமப்பா!
இதுக்குப் போய் அண்ணாச்சிய.. :))
பிழைகளை திருத்தியமைக்கு நன்றி!
need of the hour...ஹி..ஹி...தலைவரோட ‘எந்திரன்’ படம் பார்க்கும் போது விசிலடிச்சு, கை தட்டி பாத்த்தா தானே ஒரு ‘கிக்’.......
அந்த செய்கையைக் கூட இவ்வளவு அழகான கவிதையாக....
நல்லா இருக்கு
Cheers
நன்றி மதுமிதா!
//
sundar said...
need of the hour...ஹி..ஹி...தலைவரோட ‘எந்திரன்’ படம் பார்க்கும் போது விசிலடிச்சு, கை தட்டி பாத்த்தா தானே ஒரு ‘கிக்’.......
அந்த செய்கையைக் கூட இவ்வளவு அழகான கவிதையாக....
நல்லா இருக்கு
Cheers
//
சுந்தர் எனக்கு விசிலடிக்க வராது. ஆனா என் அக்கா பையன் அழகா விசிலசிக்கிறான் 4 வயசிலேயே. அதான் இப்படி பொலம்பியிருக்கேன்! :)) .
சத்தியமா நான் விசில் அடிக்கறத எல்லாம் கவிதையா எழுதுவாங்க-னு நினைக்கல...
//
Prem said...
சத்தியமா நான் விசில் அடிக்கறத எல்லாம் கவிதையா எழுதுவாங்க-னு நினைக்கல...
//
:)).ஒரு முயற்சி தானே நண்பா!
Post a Comment