Thursday, September 23, 2010

விழியால் பேசுகிறேன் - II

"போ” என்கிற இதழசைவும்
“வா” என்பதான விழியசைவும்
இன்னதென்று விளங்காமல்
நீள்கிறது பயணங்கள்
நாள் தவறாமல்...
புலம்பிக் கொண்டிருந்தது காதல்!

----

சிந்திய வார்த்தைகளில்
எது இதயத்தினது
எது இதழினது என்று
பகுத்தறியாத பாமரன்
நாத்திகனாவது எப்படி?
அலுத்துக் கொண்டது மனது!

----

ஏதோவொரு விழிகுத்திய வலி
திரும்பிய நொடியில்
காதலாய் சிரித்தாய் நீ!

திருமணப் புள்ளியில்
நிறுவிய அரசு கவிழ்ந்த போது
காணாமல் போயிருந்தன
நின் தன்மானமும் அது குறித்த
சகல பிதற்றல்களும்...
பார்வை பருகி இதயம் வருடிய
சில்லிட்ட நினைவுகள்
கல்வெட்டாய் போயின

பணத்துக்கு விலை போனவன்
பிணமென எட்டி விலக்கியும்
எப்போதோ சொல் தைத்த வலி -அன்று்
என் பாதையில் முட்களை
சொல்லாய் விதைத்தவன் நீயென...

இப்போதும் நினைவிருக்கிறது
இதயம் முழுக்க முழுக்க
துக்கத்தை தந்துவிட்டு
தூக்கத்தின் அவசியம் உரைத்தது.

என்ன செய்தாய் எனக்கு நீ
நான் இத்தனை பாசத்தை
மழையென பொழியுமளவிற்கு?
சிந்தித்தபடி சிரித்துவிட்டுப் போகிறேன்
பதில் தெரியாமல்...

----

நிலை கொள்ளாத மனதுடனும்
வெறித்த பார்வையுடனும் - நீ
வெளியேறுகையில்
தெரிந்திருக்கவில்லை - பிரிவு
இத்தனை கொடுமையென்று!

----

8 comments:

'பரிவை' சே.குமார் said...

//நிலை கொள்ளாத மனதுடனும்
வெறித்த பார்வையுடனும் - நீ
வெளியேறுகையில்
தெரிந்திருக்கவில்லை - பிரிவு
இத்தனை கொடுமையென்று!//

Super Kayal.

நசரேயன் said...

//பிரிவு
இத்தனை கொடுமையென்று!//

இப்படி எல்லாம் கவுஜ எழுதினா என்ன செய்வான் ஓடாமா ?

நசரேயன் said...

//என்ன செய்தாய் எனக்கு நீ
நான் இத்தனை பாசத்தை
மழையென பொழியுமளவிற்கு?//

குவாட்டர் அடிக்க காசு கொடுத்து இருப்பாங்க

நசரேயன் said...

//"போ” என்கிற இதழசைவும்
“வா” என்பதான விழியசைவும்
இன்னதென்று விளங்காமல்
நீள்கிறது பயணங்கள்//

ஓடிப்போ ன்னு சொல்லணும்

Madumitha said...

இதழ்கள் புத்தியைக் கேட்டு பேசும்.
விழியோ இதயத்தை கேட்டு பேசும்
என்பது காதல் சூத்திரம்.
பிரிவு நிரந்தர நரகம்.

கயல் said...

//
சே.குமார் said...
//நிலை கொள்ளாத மனதுடனும்
வெறித்த பார்வையுடனும் - நீ
வெளியேறுகையில்
தெரிந்திருக்கவில்லை - பிரிவு
இத்தனை கொடுமையென்று!//

Super Kayal.
//
நன்றி குமார்

கயல் said...

//
நசரேயன் said...
//பிரிவு
இத்தனை கொடுமையென்று!//

இப்படி எல்லாம் கவுஜ எழுதினா என்ன செய்வான் ஓடாமா ?

//

ஹா ஹா ஹா! எழுதறப்போ நெனச்சேன் உங்க கண்ணுல மாட்டுனா என்னாகும்முன்னு. ஆனா யோசிச்சதுக்கு மேல ... சிரிச்சி இன்னும் முடியல.
அண்ணாச்சி இப்பத்தான் கும்மி கலைகட்டியிருக்கு.:))

கயல் said...

//
Madumitha said...
இதழ்கள் புத்தியைக் கேட்டு பேசும்.
விழியோ இதயத்தை கேட்டு பேசும்
என்பது காதல் சூத்திரம்.
பிரிவு நிரந்தர நரகம்.
//
ஆமாங்க நீங்க சொல்லுறது நிஜம்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!