வேகமாய் வீட்டுக்குள் நுழைந்தான்
வீசியெறிந்தச் செறுப்பின் வேகத்தில்
பாதிப் புரிந்திருக்கும் அவளுக்கு!
உள்ளக் கொதிப்பை
உதட்டுக்குள் ஒழித்து
தலைகவிழ்ந்தாள்
கறிகாயோடு கைவேலையும்
தொடரலானாள்
போக்குவரத்து நெரிசல்
வெகுஜனக் கோவம்
மேலாளர் வசவு
மாதக்கடைசி
அம்மாவின் ஆஸ்துமா
பிள்ளையின் பள்ளிக்கட்டணம்
வெளியேறத் தருணம் பார்த்து
குமுறிக் கொண்டிருந்தது
இயலாமை இல்லாமை
இரண்டும் சேர்ந்து
எரிமலையாய் அவனுள்!
பென்சில் கேட்டு
அழுத மகனின் முதுகில்
இடியென இறங்கியபின்
ஆரம்பித்தது கச்சேரி!
எப்போதோ வார்த்தையில்
கூடிய சுருதி -அவள்
செவி நிறைந்ததில்
சிந்திய இருதுளிக் கண்ணீரோடு
முற்றுப்பெற்றன அத்தனை
அபஸ்வரங்களும்!
ஆவேசம் ஆத்திரம்
அத்தனைக்கும் காரணம்
தெரியுமவளுக்கு!
இங்கேனும் ஜம்பம் பலித்தது
கொட்டிவிட்டுப் போ
என்பதானப் பாவனையில்
அவன் நாடகம் நித்தமும்..
“பசியாயிருப்பீங்க!
தோசை வார்க்கறேன்
வாங்க சாப்பிடலாம்!”
கனத்த மௌனமும்
மகனின் விசும்பலும்
நின்றுபோயின
சகஜமானது வீடு
அவளுக்குள்ளும்
ஆயிரெத்தெட்டுத் தலைவலி
அதற்குள்
அலுவலகமும் அடக்கம்
பெருமூச்செறிந்தபடி
பாத்திரங்களைத் துலக்க
துவங்கியிருந்தாள் அமைதியாக!
18 comments:
செறுப்பின்
ஒழித்து
Nalla kavithai.
யதார்த்தம் நிறைந்த வரிகள்..
நீட்டு கவிதை நெஞ்சை தொட்ட கவிதை
அட...
என்னை நானே உற்று பார்த்த உணர்வை தந்தது கவிதை-வெற்றி பெற இது போதுமே
இதைப் போல் எத்தனையோ பெண்கள் மவுனம் காத்து.
கடைசி வரிகள் நிறைய சொல்கின்றன.
தினசரி யதார்த்தத்தின் சுவையான வரிகள்.
சொல்லாமல் விட்ட விஷயங்களை வாசகனை அசை போட வைத்திருப்பதே இக்கவிதையின் வெற்றி...
நல்லா வந்திருக்கு
Cheers
//
பழமைபேசி said...
செறுப்பின்
ஒழித்து
//
பேச்சு வழக்கு கவிதையில் இழுத்து எளிமையான மொழியியலோடு இருப்பதே நவீன இலக்கியம் எனப்பட்டது. நானும் முயன்றதில் இப்படி. மிதியடி/காலணி சரியாயிருக்குமெனில் அது செந்தமிழ் கவிதையாயிருக்கும்.
//
சே.குமார் said...
Nalla kavithai.
//
நன்றி குமார்.
//
சுசி said...
யதார்த்தம் நிறைந்த வரிகள்..
//
நன்றி சுசி
//
யாதவன் said...
நீட்டு கவிதை நெஞ்சை தொட்ட கவிதை
//
நன்றி நண்பரே!
//
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
அட...
//
அட + “டா” வா இல்ல
அட + “சீ” யா?
இப்படி குழம்ப விட்டுட்டீங்களே? :)
நன்றி. முதல் வருகைக்கும். கருத்துக்கும்.
//
தமிழ்ச் செல்வன்ஜீ said...
என்னை நானே உற்று பார்த்த உணர்வை தந்தது கவிதை-வெற்றி பெற இது போதுமே
//
மகிழ்ச்சிங்க. நன்றி!
//
அம்பிகா said...
இதைப் போல் எத்தனையோ பெண்கள் மவுனம் காத்து.
கடைசி வரிகள் நிறைய சொல்கின்றன.
//
நன்றிங்க. அடிக்கடி வாங்க
//
அப்பாதுரை said...
தினசரி யதார்த்தத்தின் சுவையான வரிகள்.
//
நன்றிங்க
//
sundar said...
சொல்லாமல் விட்ட விஷயங்களை வாசகனை அசை போட வைத்திருப்பதே இக்கவிதையின் வெற்றி...
நல்லா வந்திருக்கு
Cheers
//
நன்றிங்க. அடிக்கடி வாங்க.
Post a Comment