”அப்பா அந்த மிட்டாய்
வாங்கித்தாங்கப்பா”
ஆசையாய் கேட்டான் மகன்
”பல்லு சொத்தையாயிரும்
பூச்சிப்பல் வந்துரும்
அதுக்குப் பதிலா ...”
வெறும் சட்டைப்பையை
தடவியவாறே...
”இல்ல...
வீட்டுக்குப் போய்
சாப்பிட்டுக்கலாம் வா”
ஏமாற்றமாய் நிமிர்ந்தவன்
”காசு வந்ததும் வாங்கித்தாங்கப்பா
பரவால்ல”
என்றான்
இப்போது அந்த மிட்டாயும்
இடம்பிடித்து விட்டது
சம்பளம் வந்ததும் நிறைவேறும்
திட்டங்களின் பட்டியலில்...
6 comments:
என்னமா ஜோசிகிறான் பயபுள்ள
ஏழ்மையின் பட்டியல்
கொஞ்சம் நீளமானதுதான்.
பொறுப்பான அப்பாவா இருந்தா!
ஏழையின் பட்டியல் நீளமானலும் சில நேரங்களில் பட்டியலாய் மட்டுமே நின்றும் விடும் என்பதே வருத்தமான விஷயம்...
Very nice indeed...
Cheers
மகன் விடாக்கண்டன்
அப்பன் கொடாக்கண்டன்
Post a Comment