Monday, September 20, 2010

நிறம் மாறும் தேவதைகள்

கடவுளர்களின் ஆசிகள்
நிரப்பிய போதையில்
உறங்கிக் கொண்டிருந்தனர்
தேவதைகள்
சாகுந்தலங்கள் மறைத்த
கதிரவ சிதறல்களாய்
வெண்ணிற இறக்கைகள் போர்த்தி!

உற்சவர் பள்ளியறை உபயத்தில்
உலகை மறந்திருந்தார்
மானுடப் புலம்பல்களை
பலமுறை மறுதலித்தவண்ணம்

நடுநிசியிரவில்
பல்லக்கு தூக்கிகள் ஓதுவோர்
மடப்பள்ளி சேவகர்கள்
எவர்காதுக்கும் எட்டாத லயத்தில்
முனங்கிக் கொண்டிருந்தது
கோவில் தொழுவத்தில் சினைப்பசு
சிறு குரங்கொன்றின் குதறலில்
பெருங்காயம் பட்ட வலி

பசுவின் பிதற்றலில் பரிந்து
பதமாய் மருந்திட துணிந்தான்
சாமிக்கு சாமரம் வீசும்
சாமான்ய சிறுவனொருவன்

மருந்திட ஏதுவாய் இறகு தேடி
கிடைத்ததை பறிக்க
விதிர்த்தெழுந்தது தேவதையொன்று
வழக்கம் மாறி சாபமாய்
விழுந்தன வார்த்தைகள்

சபிக்கப்பட்டவன் ஏக்கமாய் நோக்கினான்
அசதியில் தூங்கும் அத்தனை பேரையும்!

பசுவின் முனங்கல் தொடர்ந்தபடியிருக்க
வலியின் மிச்சத்தை சாபமாய்
கொட்டியபடி தேவதையும்....

மெல்ல மெல்ல விடிந்துகொண்டிருந்தது
கடவுளர்கள் தேவதைகள் தவிர்த்து
யாராவது மருந்திடக்கூடும்

11 comments:

'பரிவை' சே.குமார் said...

//உற்சவர் பள்ளியறை உபயத்தில்
உலகை மறந்திருந்தார்
மானுடப் புலம்பல்களை
பலமுறை மறுதலித்தவண்ணம் //

Super kayal.

Neenda natgalukkup piragu pathivittalum arumaiyana kavithaiyudan...

adikkadi ezuthungal.

கார்க்கிபவா said...

ரொம்ப நாளா சொல்ல நினைச்சது. கவிதையின் பொருள்தான் பிரதானம். இவ்வளவு சிக்கலான மொழி கவிதைக்கு அவசியமென்று தோன்றவில்லை. எளிமையான வார்த்தைகளால் தான் நவீனக் கவிதைகள் அழகு பெறுவதாக நினைக்கிறேன்.

இன்னும் எளிமையாய் முயற்சித்து பார்க்கவும்.









பிகு: உஸ்ஸ்ஸ்>.புரியலன்றத எப்படியெல்லாம் சொல்ல வெண்டியிருக்கு

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமை

Madumitha said...

நிறைய யூகங்களுக்கு
இடம் கொடுக்கிற கவிதை.
மனசு தளும்புகிறது.

நசரேயன் said...

//கடவுளர்களின் ஆசிகள்
நிரப்பிய போதையில்
உறங்கிக் கொண்டிருந்தனர் //

என்ன சரக்கு ?

//நடுநிசியிரவில்
பல்லக்கு தூக்கிகள் ஓதுவோர்
மடப்பள்ளி சேவகர்கள்
எவர்காதுக்கும் எட்டாத லயத்தில்
முனங்கிக் கொண்டிருந்தது //

கயல் தொல்லை தாங்க முடியலை என்று ?

நசரேயன் said...

//அடக்கம்: க‌விதைகள்//

சந்தேகமே இல்லை

கவி அழகன் said...

வலிகளின் வரிகள்
அருமையான படைப்பு

கலகலப்ரியா said...

||நிறம் மாறும் தேவதைகள்||

நல்லாருக்கே இது...

கயல் said...

அனைவருக்கும் நன்றி!

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[தென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!]]

உங்க கவிதை அருமை.. அதைவிட இதை மிக ரசித்தேன் . எனக்கும் ஏற்றதாய் இருக்கிறதால்...

J S Gnanasekar said...

நல்லாருக்கு

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!