வரைந்து சிதைத்த
எல்லா பின்னமான பிம்பமும்
சொல்லிப் போகிறது
அதன் அழகான துவக்கத்தை ...
உளிபட்டு சிலையான
பாறைகளனைத்திற்கும்
மழைநீர் தழுவி மகிழ்ந்த
வசந்த காலங்களுண்டு..
சுவர் இடிந்து
பழுதான கோட்டைக்கும்
தாங்கி நிற்க வலுவான
அஸ்திவாரமுண்டு...
நினைவுகளை துணைக்கழைப்பது
நினைவுகளோடு வாழ்வது
இன்னபிற இயற்பிழைகள்
மனோவியாதிகள்
இயல்பாய் சாத்தியமாகிறது
கனவுகளை கவிதையாய்
வடிக்கும் போதும்
நேற்றைய வலியை மறைத்து
இன்று கவிதை
வரையும் போதும்...
மெல்லப் பனிக்கும் கண்ணீரும்
கனக்கும் இதயம் மறைக்க
இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!
22 comments:
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
//இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!//
அருமை. வாழ்த்துக்கள்
//கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!//
கல்லை கொண்டு எறிந்தாலும்
கசியும் ரத்தம்
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்!
கவிதை நல்லாயிருக்குங்க...
நினைவில் தளும்பியவையை
அள்ளிக் கொண்டேன்.
கனக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும்போதே நல்ல கவிதையுடன்...
வாழ்த்துக்கள் கயல்.
//மெல்லப் பனிக்கும் கண்ணீரும்
கனக்கும் இதயம் மறைக்க
இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!//
சூப்பர்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
கவிதை நன்று.
நல்லாருக்கு கயல்...
கவிதையோட வடிவம் ரொம்ப பிடிட்சிருக்குங்க.
Nice.. Especially the last lines..
//
மதுரை சரவணன் said...
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
//
நன்றிங்க
//
நசரேயன் said...
//கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!//
கல்லை கொண்டு எறிந்தாலும்
கசியும் ரத்தம்
//
இது தளபதிக்கு அழகா? :)
ஒரு குதிரைப்படை, ஒரு விற்படை இல்ல குறைந்தபட்சம் ஒரு ஆட்டோ இப்படி யோசிங்க தல!
//
எஸ்.கே said...
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்!
//
நன்றிங்க!
//
வெறும்பய said...
கவிதை நல்லாயிருக்குங்க...
//
நன்றி
// Madumitha said...
நினைவில் தளும்பியவையை
அள்ளிக் கொண்டேன்.
கனக்கிறது.
//
:(அப்படியா? அப்ப ஒரு கவிதையா இறக்கி வச்சிடுங்களேன்.
//
RVS said...
//மெல்லப் பனிக்கும் கண்ணீரும்
கனக்கும் இதயம் மறைக்க
இதழிடைப் பூக்கும் புன்னகையும்
சொல்லித்தான் போகிறது
கல்லுறை நீர்போல்
கசியும் காதலை!//
சூப்பர்...
அன்புடன் ஆர்.வி.எஸ்.
//
நன்றி
//
நிலாரசிகன் said...
கவிதை நன்று.
//
ஆச்சரியமிக்க நன்றி கவிஞரே!
//
கலகலப்ரியா said...
நல்லாருக்கு கயல்...
//
நன்றி பிரியா
//
கமலேஷ் said...
கவிதையோட வடிவம் ரொம்ப பிடிட்சிருக்குங்க.
//
வடிவம் வடிவங்கறீங்களே அது எங்க தென்பட்டுச்சுன்னு சொல்லுங்கண்ணா!
//
பால் [Paul] said...
Nice.. Especially the last lines..
//
நன்றி பால்!
Post a Comment