Wednesday, August 11, 2010

கேள்வியும் அது சார்ந்ததும்

நம்ம சுசி என்ன பதிவுலகத்தில் நான் என்கிற தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருத்தாங்க.நன்றி சுசி.சரி அவங்களால சில வரிகள் எழுதியிருக்கேன்.பேத்தல் தான் இருந்தாலும் பொறுத்துக்கோங்க.சமூக கோவத்த காண்பிக்க எத்தனையோ வழியிருக்க ஏன் நீங்க வலைப்பதிவ தேர்ந்தெடுக்கறீங்கன்னு சில நல்லாதரவாளர்கள்(!) கேட்ட கேள்விகான பதில் இதில ஒளிஞ்சிட்டுருக்கு. தூங்காம படிச்சா கிடைக்கும். பாத்துக்குங்க உலகம் போற போக்குல நானெல்லாம் எங்க இருக்கேன்னு!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

கயல்

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாங்க! தானா அமைஞ்ச ஒரே நல்ல விசயம் இது தான்னு நினைக்கிறேன்!

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

எந்த சுவராஸ்யமான துவக்கமும் பல கசப்பான அனுபவங்களை அடியாய் கொண்டே ஆரம்பிக்கும்.ஒரு தங்கிலிஷ் கோர்வையை கவிதை எனப் படித்தபின் நாமும் கத்தி எடுக்கலாமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த வலைப்பதிவு. எண்ணங்களின் வடிகாலாய் கவிதை எழுத ஆரம்பித்து, நல்ல கவிதை எழுதக்கத்துக்கிட்டேனோ இல்லையோ எப்படி எழுதக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.தவிரவும் என் வலைப்பதிவு என்பது என் படைப்புகளை நிராகரிக்காத பத்திரிக்கை என்கிற எண்ணத்தில் துவங்கப்பட்டது.கிறுக்கலோ குப்பையோ நண்பர்கள் பார்வைக்கு... ஆனால் இந்த பயிற்சி காலம் எனக்கு மிகவும் முக்கியம் நல்ல வளமான இலக்கிய பயணத்தின் துவக்கத்திற்கு![நசரேயன் இந்த பதில் முழுக்க முழுக்க உங்கள் மேலான
பின்னூட்டத்துக்கு.. :)) ... நெம்ப அலப்பலா இருக்கு அண்ணாச்சி குட்டு வச்சாத்தான் சரிப்படும்]

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணுமே செய்யல. அதனாலயே இன்னும் பிரபலமடையலை. புகழ் மேல எல்லாம் ஆசை இல்லப்பா![சோம்பேறி.. சோம்பேறின்னு யாரோ திட்டுறாங்க பாருங்க]

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஓ! நிறைய தடவை பகிர்ந்திருக்கேன். என்னப் பத்தி சொல்லப் போக, அதனாலயே பல நண்பர்கள்,சில எதிரிகளை சம்பாதிச்சிருக்கேன். அந்த சில எதிரிகளையும் நண்பர்களாக்க முயற்சிக்கிறேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஏங்க நீங்க வேற! ஆயிரம் பேர கொன்னா அரை வைத்தியனாகலாம்ங்கிற மாதிரி நானே ஏதோ இப்பத்தான் எழுதிப் பழகுறேன்.அவங்கவங்க படிச்சிட்டு உசுரோட போறதே பெரிசு. சம்பாதிப்பதெல்லாம்.......

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இப்போதைக்கு ஒரு வலைப்பதிவு மட்டும் தான். இன்னும் சில விரைவில் ஆரம்பிக்க இருக்கிறேன்.[அழக்கூடாது!]

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

நல்லா கவிதை எழுதுற எல்லாரு மேலயும் பொறாமை இருக்கு. ஆனா எனக்கு கஷ்டம் தராத யாரு மேலேயும் கோவம் இல்ல.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

என் ஆசான். ஒரு சில மணி நேரம் எனக்கெனவே செலவு செய்து நிறை குறைகளை திருத்திச் சொன்ன மாண்பு இன்னும் சிலிர்க்க வைக்குது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

கடைசியாவா? என்னப்பா இது ! நானும் என் கவிதைகளும்(?) இன்னும் ரொம்ப... நாளைக்கு உசுரோட பதிவுலகத்துல இருக்கணும். குறைந்த பட்சம் எழுத்துப்பிழை இல்லாம கவிதை(?) எழுதணும்.

இந்த பதிவ தொடர இவர்களை அழைக்கிறேன்

வயலான் குமார்
சங்கவி
கமலேஷ்
மதுமிதா

வாழ்த்துக்கள்.

15 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பதில்கள்..

வாழ்த்துக்கள்...

Madumitha said...

பதில்களில் நீங்கள் இருக்கிறிர்கள்.

தொடர் பதிவிற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி.
தொடர் பதிவிட்டுள்ளேன்.
பார்க்கவும்.

கார்க்கிபவா said...

பதிலை மட்டும் வேறு நிறத்தில போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் படிக்க.

இப்ப இது கூட உங்க கவிதை மாதிரி இருக்கு. ஐ மீன் படிக்க கஷ்டமா..ஹிஹிஹி

sathishsangkavi.blogspot.com said...

உங்க அழைப்பை ஏற்று தொடர் பதிவ போட்டாச்சுங்கோ....

'பரிவை' சே.குமார் said...

Nalla pakirvu...

manathil ullathai solli irukkireerkal.

azahippukku nanri... ezuthukirean.
appuram athu ennanga vayalaan kumar. naan s.kumarnnuthaane poduvean.

valai mugavari enakku mugavari ayachchu pola.
ok.

kumaraka thodarkirean.

nanri.

சுசி said...

அடடடடா.. அநியாயத்துக்கு ஒரு ஃப்ளைட்ட அனுப்பிட்டேனே கயல்.. :))

நல்லாருக்கு.

கயல் said...

//
வெறும்பய said...
நல்ல பதில்கள்..

வாழ்த்துக்கள்...
//

நன்றிங்க

கயல் said...

//
Madumitha said...
பதில்களில் நீங்கள் இருக்கிறிர்கள்.

தொடர் பதிவிற்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி.
தொடர் பதிவிட்டுள்ளேன்.
பார்க்கவும்.
//
நன்றி மதுமிதா!

கயல் said...

//
கார்க்கி said...
பதிலை மட்டும் வேறு நிறத்தில போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும் படிக்க.
//

ம்ம்! ஏதோ ஆசப்படுறீக புரிஞ்சுகணுமின்னு... மாத்திட்டேன் மாத்திட்டேன்.
//
இப்ப இது கூட உங்க கவிதை மாதிரி இருக்கு. ஐ மீன் படிக்க கஷ்டமா..ஹிஹிஹி
//
இங்க தானே இருக்கீக... இருங்க இருங்க என் ரசிக பெருமக்கள் கிட்ட சொல்லி உங்க வீட்டுக்கு வந்து வூடு கட்டச் சொல்றேன்!

கயல் said...

//
சங்கவி said...
உங்க அழைப்பை ஏற்று தொடர் பதிவ போட்டாச்சுங்கோ....
//

நன்றிங்கோ!

கயல் said...

//
சே.குமார் said...
Nalla pakirvu...

manathil ullathai solli irukkireerkal.

azahippukku nanri... ezuthukirean.
appuram athu ennanga vayalaan kumar. naan s.kumarnnuthaane poduvean.

valai mugavari enakku mugavari ayachchu pola.
ok.

kumaraka thodarkirean.

nanri.
//

ஆஹா! ஒரு அடையாளத்துக்கு போட்டேன்.தப்புன்னா மன்னிச்சிடுங்க!

நசரேயன் said...

//கவிதை எனப் படித்தபின் நாமும் கத்தி எடுக்கலாமேன்னு ஆரம்பிச்சது தான் இந்த வலைப்பதிவு//

அதான் கூர்வால்(ள்)?

நசரேயன் said...

//தவிரவும் என் வலைப்பதிவு என்பது என் படைப்புகளை நிராகரிக்காத பத்திரிக்கை என்கிற எண்ணத்தில் துவங்கப்பட்டது.கிறுக்கலோ குப்பையோ
நண்பர்கள் பார்வைக்கு//

நாங்க பின்னாடியே வந்து குப்பை அள்ளனுமா?

கயல் said...

@ நசரேயன் said...

ஆஹா! இவிங்க அவிங்களே தான்...

குப்பை எல்லாம் நாங்களே அள்ளிக்குவோம் நீங்க குப்பையா இல்லையான்னு தீர்ப்பு சொன்னா போதும் நாட்டாமை!

கமலேஷ் said...

இயல்பான பதில்கள்.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!