Sunday, June 27, 2010

சிதறிய பருக்கை


இராப்பிச்சை ஒருவன்
எல்லோர் வாசலிலும்
இரைந்து கூச்சலிட்டான்
சத்தமிடும் வயிறை
சட்டை செய்யாமல்..

யாசித்து முடிக்கையில்
நள்ளிரவு கடந்திருந்தது

சொற்பமான உணவு
சூரப்பசிக்கு அவல்பொரி

ஒருவாய் இறங்கியிருக்கும்
வழக்கமான ஈனக்குரல்
ஒட்டிய வயிறோடு
வாலைக் குழைத்து
ஓலமிட்டது விசுவாசத்தில்..

உள்ளதில் பாதி போனாலும்
மெல்ல முனங்கினான்
“நாங் கேட்டே இம்புட்டு தான்
இந்தா சாப்பிடு பரவால்ல”
சிதறிய பருக்கைகளைச் சுற்றி
நாய் ஈ எறும்பு இன்னும் சில...




8 comments:

Madumitha said...

ஐயமிட்டு உண்.

Swengnr said...

வறுமையை சித்தரித்த விதம் அருமை! அப்படியே கொஞ்சம் பிச்சை காரர்களை கண்டாலும் இரக்க படுவோம்! பகிர்வுக்கு நன்றி!

பழமைபேசி said...

பொரி pori : (page 2929)

n. < பொரி²-. [K. puri, M. pori.] 1. A fry, anything fried; பொரிக் கப்பட்டது

பழமைபேசி said...

அசுகத்தைக் குழைத்து ஒரு கவிதை... நன்று!

அன்புடன் நான் said...

கூர்மையான சிந்தனைத்தான்.... கவிதைக்கு பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் said...

சிந்தனைக்கவிதை. வாழ்த்துக்கள்

Katz said...

Nice

Anonymous said...

pasiyin kodumai pasithavanuku thaan theriyum good one kayal....

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!