Thursday, June 24, 2010

கடவுளின் குழந்தை

சாத்தான்களும் பிடாரிகளும்
சகஜமாய் புழங்கும் கானகத்தில்
குழந்தையொன்று மந்திரகவசத்தோடும்
உருவேற்றப்பட்ட தாயத்துக்களோடும்
களமிறக்கப்பட்டது கடவுளின் பெயரால்...

ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்
அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்
எப்போதும் இறக்கைகள் முளைத்த
தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன

சாத்தான்களின் பாசறையை
கடவுளின் அரண்மனையாய்
மாற்றுவதாய் ஏற்பாடு!

ஈட்டிகள் துளைக்கையிலும்
மரண அவஸ்தை உச்சத்திலும்
உதவி வேண்டி குழந்தையின் கதறல்
விண்ணைப் பிளந்தும்
தேவதைகள் வரவேயில்லை!

பார்த்தது குழந்தை!
இவ்விடம் வாழ இன்னது ஏற்பு
பகுத்தறிந்து பாந்தமாய் உறவாடியது

இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி!

22 comments:

கலகலப்ரியா said...

படிக்கிறப்போ ஏதோ ஒரு சங்கடம்.. ஏன் கயல்..

க.பாலாசி said...

நல்லாவே இருக்குங்க... ப்ப்ப்ச்.. காட்டேரி நல்லதா கெட்டதா?

பழமைபேசி said...

அரண்மணையாய்
துளைக்கயிலும்

கமலேஷ் said...

/// இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி ////

அப்பாடி...
ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு சொல்ல வந்தது..
இந்த கடைசி வரிகளே மொத்த கவிதையையும் கட்டியாள்கிறது..
வாழ்த்துக்கள் தோழி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்
அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்
எப்போதும் இறக்கைகள் முளைத்த
தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன//
நல்லா இருக்குங்க..

கார்க்கிபவா said...

உதவ வராதது தேவதைகள் தவறா? அல்லது கடவுளின் தவறா?

ம்ம்..நல்லா வந்திருக்கு

//மரணவஸ்தை// //மனந்தளராவண்ணம் //

இதெல்லாம் வேண்டுமென்றே சேர்த்தெழுதப்பட்டாதா? அல்லது தட்டச்சும்போது ஒட்டிக்கொண்டதா? காட்டேரியோடு குழந்தை சேர்ந்தது போல!

அன்புடன் அருணா said...

அய்யோ .......கொலைவெறிக் கவிதை

VELU.G said...

//இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி!
//

அருமை

ezhilan said...

நல்லா இருக்கு கவிதை.அழுத்தமானது. அழ்கானது.வாழ்த்துக்கள். எழிலன்,

Madumitha said...

இதை உங்களிடம்
எதிர்பார்க்கவில்லை.

அன்புடன் நான் said...

வித்தியாசமான சூழலில் கவிக்குழந்தை!

துரோகி said...

// இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி! //

கவிதை...! கவிதை...!

கயல் said...

//
கலகலப்ரியா said...
படிக்கிறப்போ ஏதோ ஒரு சங்கடம்.. ஏன் கயல்..

//

ம்ம்! தவறிப்போன குழந்தையா பிழைக்கத் தெரிந்த குழந்தையான்னு தெரியாம... எனக்குந்தான் பிரியா!

கயல் said...

//
க.பாலாசி said...
நல்லாவே இருக்குங்க... ப்ப்ப்ச்.. காட்டேரி நல்லதா கெட்டதா?
//
கடவுளுக்கு எதிரி ... குழந்தைக்கு நண்பன்.. அப்போ ..? நீங்களே பாத்துங்குங்க!ம்ம்

கயல் said...

//
பழமைபேசி said...
அரண்மணையாய்
துளைக்கயிலும்
//

மாத்திட்டேன். சரி பண்ணிக்கிறேன் ஆசானே!

கயல் said...

//
/// இப்போது கடவுளை வரவேற்க
குழந்தை தயார்
ஒரு காட்டேரியின் மடியில்
குருதியை சுவைத்தபடி ////

அப்பாடி...
ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு சொல்ல வந்தது..
இந்த கடைசி வரிகளே மொத்த கவிதையையும் கட்டியாள்கிறது..
வாழ்த்துக்கள் தோழி..
//
நன்றி கமலேஷ்

கயல் said...

//
கார்க்கி said...
உதவ வராதது தேவதைகள் தவறா? அல்லது கடவுளின் தவறா?

ம்ம்..நல்லா வந்திருக்கு

//மரணவஸ்தை// //மனந்தளராவண்ணம் //

இதெல்லாம் வேண்டுமென்றே சேர்த்தெழுதப்பட்டாதா? அல்லது தட்டச்சும்போது ஒட்டிக்கொண்டதா? காட்டேரியோடு குழந்தை சேர்ந்தது போல!
//

நீங்க ரொம்ப கேள்வி கேக்குறீங்க இப்பல்லாம்.... லேசா ஒரு டவுட்டு... கார்க்கி தானே இது?

கயல் said...

//
முத்துலெட்சுமி/muthuletchumi said...
\\ஆபத்துக்களில் மனந்தளராவண்ணம்
அசரீரிகளின் வழி நம்பிக்கைச்சுடர்
எப்போதும் இறக்கைகள் முளைத்த
தேவதைகள் குறித்தே ஓதப்பட்டிருந்தன//
நல்லா இருக்குங்க..

//

நன்றி தோழி

Katz said...

கவிதை அருமை !

Unknown said...

சாத்தான்களின் உலகம் இது கடவுளுக்கு இனி இங்கு இடமில்லை ..
நல்ல பார்வை... பாராட்டுக்கள் ..

கயல் said...

@ அன்புடன் அருணா said...

நன்றி தோழி! ஆனா பயப்படக்கூடாது இதுக்கெல்லாம் சரியா? :))
முதல் வருகைக்கு நன்றி!

@ VELU.G said...
நன்றி ஜி!

@ ezhilan said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@ Madumitha said...
//
இதை உங்களிடம்
எதிர்பார்க்கவில்லை.
//

ஏங்க? என்னாச்சு?

@ சி. கருணாகரசு said...

//
வித்தியாசமான சூழலில் கவிக்குழந்தை!
//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

@ துரோகி

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கயல் said...

@ வழிப்போக்கன் said...
//
கவிதை அருமை !
//

நன்றி வழிப்போக்கன்

@ கே.ஆர்.பி.செந்தில் said...
//
சாத்தான்களின் உலகம் இது கடவுளுக்கு இனி இங்கு இடமில்லை ..
நல்ல பார்வை... பாராட்டுக்கள் ..
//
நன்றி செந்தில்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!