நம்பமுடியாமல் மீண்டுமொருமுறை
கண்மூடித் திறக்கிறேன்
அட இது என்ன?
இமைகளில் மிச்சமான கனவா?
விரல் கொண்டு தீண்டிப் பார்க்கிறேன்
உயிர் கொண்டெழுந்த உரோமங்கள்
உண்மை தான் என்கின்றன.
பல்வித சுகந்தமும் வண்ணமும்
வாடினும் வளமாய்ச் சிரிக்கும்
பூபந்து குவியலுமாக...
நான் உலவக் கிடைத்த
புல்வெளி தோறும்
பரவிக் கிடந்தன மலர்கள்
மரங்கள் செடி கொடிகள்
எல்லாவற்றிலும்
இலைகள் தவிர்த்து
மலர்கள் மலர்கள்!
கதம்ப மணமும் கண்ணுக்கு
விருந்துமாக கூடிக்குலவிய
பூக்கள் யாவும் கவிதை பேசுவதாய்...
சூடியும் தூவியும் மலரோடு
குதுகலிக்கிறேன் நான்
நெடுநாட்களுக்குப் பின்!
பாதைகள் மறைத்த மலர்களை
கடக்க பாதுகை தவிர்த்தேன்
பூவோடு முள்ளையும்
நேசிக்க தவறியதால்
சட்டென தைத்த முள்ளில்
உயிர் தொட்ட வலி
உறிஞ்சிப் போனது இதுவரை
பூக்களுடனான என் காதலையும்
அதன் ஆழ்நிலை மகிழ்வையும்!
12 comments:
//உயிர் தொட்ட வலி
உறிஞ்சிப் போனது இதுவரை
பூக்களுடனான என் காதலையும்
அதன் ஆழ்நிலை மகிழ்வையும்!//
கவிதை மட்டுமில்ல.. தலைப்பும் நல்லா இருக்கு.
கவிதை நன்று.
பாராட்டுக்கள்.
ஒரு மாதிரியாதான் இருக்கிங்க..
//விரல் கொண்டு தீண்டிப் பார்க்கிறேன்
உயிர் கொண்டெழுந்த உரோமங்கள்
உண்மை தான் என்கின்றன./
இது நச்
அழகான கவிதை..
//பூவோடு முள்ளையும்
நேசிக்க தவறியதால்//
ரொம்ப அழகு..!!
அருமை கயல்..
கவிதை நன்று !!!
:)
//பாதைகள் மறைத்த மலர்களை
கடக்க பாதுகை தவிர்த்தேன்
பூவோடு முள்ளையும்
நேசிக்க தவறியதால்
சட்டென தைத்த முள்ளில்
//
நெகிழ்வான வரிகள்
எல்லாம் கவிதை பூக்கள்
எல்லா சந்தோஷத்திற்கு
பின்னாலும் ஒரு துயரத்தின்
நிழல் படிந்திருக்கக்கூடும்.
சட்டென தைத்த முள்ளில்
உயிர் தொட்ட வலி
உறிஞ்சிப் போனது இதுவரை
பூக்களுடனான என் காதலையும்
அதன் ஆழ்நிலை மகிழ்வையும்!
intha varigalai thavirthu vittu kavithai padithen malar thottathil irunthadhu pondra unarvu.....nalla eruku kayal innum neraiya ezhuthunga...
கவிதையை முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை
என்றாலும் வரிகள் சுவையாக இருக்கிறது.
Post a Comment