ஒரு பெருங்கதறலை உள்விழுங்கி
சிலதுளிக் கண்ணீரை விசும்பலற்று
உகுக்கலாயிற்று உதாசீனப்பட்ட மனம்
அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில்
மரணித்த ஒரு மனிதன் மீதும்
எறும்போ வண்டோ எதோவொரு
உயிரினம் அடைக்கலமாகத்தான் செய்கிறது
நீண்ட வாக்கியத்தின் கடைசியில்
பதியப்பட்ட முற்றுப்புள்ளியொன்றின்
தனித்திருத்தலை முன்னிட்டு
நடப்பட்டன சில புள்ளிகள்
முடிந்துவிட்ட வாக்கியத்தின் நீட்சியாக
அலைவரிசை சிதறிய பின்னும்
கரகரக்கிறது என் வானொலி
பசுமையான துவக்கங்களை
நடுநிசியில் அசை போட்டபடி...
நட்பு பொய்ப்பதில்லை போலும்
நண்பர்கள் உதிர்ந்த பின்னும்
17 comments:
வாசித்து இன்புற்றோம்!
நன்றி ஆசானே!
அடடா.. அருமை கயல்..
///நட்பு பொய்ப்பதில்லை போலும்
நண்பர்கள் உதிர்ந்த பின்னும்! ///
ம்ம்...பயணத்தின் திசையை தான் மட்டும் தீர்மானித்து கொண்டு நடக்க துவங்கும் கவிதை,
இலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு
தெரிவிக்கிறது..
வலி நிறைந்த கவிதை..
வாழ்த்துக்கள் கயல்.
முற்றுப் புள்ளிக்குத் துணை.
இது புதிய சிந்தனை.
வாழ்த்துக்கள்.
//
கலகலப்ரியா said...
அடடா.. அருமை கயல்..
//
நன்றி ப்ரியா!
//
கமலேஷ் said...
///நட்பு பொய்ப்பதில்லை போலும்
நண்பர்கள் உதிர்ந்த பின்னும்! ///
ம்ம்...பயணத்தின் திசையை தான் மட்டும் தீர்மானித்து கொண்டு நடக்க துவங்கும் கவிதை,
இலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு
தெரிவிக்கிறது..
வலி நிறைந்த கவிதை..
வாழ்த்துக்கள் கயல்.
//
இலக்கை அடைந்த உடன் தன் இருப்பை சத்தமாய் வாசகனுக்கு
தெரிவிக்கிறது..
இந்த கிறுக்கலையும் இத்தனை நுட்பமாய் பார்க்கமுடிகிறதே தாங்களால்! நன்றி கமலேஷ்!
//
Madumitha said...
முற்றுப் புள்ளிக்குத் துணை.
இது புதிய சிந்தனை.
வாழ்த்துக்கள்.
//
எதுவுமே முற்றுப் பெறுவதில்லை! உறவோ அன்போ நீட்சியடையத் தான் செய்கிறதில்லையா?
//முற்றுப்புள்ளியொன்றின்
தனித்திருத்தலை முன்னிட்டு
நடப்பட்டன சில புள்ளிகள்
முடிந்துவிட்ட வாக்கியத்தின் நீட்சியாக!//
wow..... sorry no tamil font..
romba pidichu irukkunga.. superb
//
கார்க்கி said...
//முற்றுப்புள்ளியொன்றின்
தனித்திருத்தலை முன்னிட்டு
நடப்பட்டன சில புள்ளிகள்
முடிந்துவிட்ட வாக்கியத்தின் நீட்சியாக!//
wow..... sorry no tamil font..
romba pidichu irukkunga.. superb
//
நன்றிங்க!
natpu mattum alla nallavaiyum poikkathu.....kavithai ungalai matureda katti eruku..thodarattum ippadi patta iniya kavithaigal.....
அலைவரிசை சிதறிய பின்னும்
கரகரக்கிறது என் வானொலி
பசுமையான துவக்கங்களை
நடுநிசியில் அசை போட்டபடி...
chancesey illai puthiya karpanai...
நல்கவிதை. வாழ்த்துக்கள்
//
கலாநேசன் said...
நல்கவிதை. வாழ்த்துக்கள்
//
நன்றி!
ரொம்ப அருமை..
//நீண்ட வாக்கியத்தின் கடைசியில்
பதியப்பட்ட முற்றுப்புள்ளியொன்றின்
தனித்திருத்தலை முன்னிட்டு
நடப்பட்டன சில புள்ளிகள்
முடிந்துவிட்ட வாக்கியத்தின் நீட்சியாக!//
இந்த வரிகளை நான் ரொம்ப ரசித்தேன்.. காரணம் பல நேரங்களில் ஒரு புள்ளி மட்டும் தனித்திருக்குமே என்று மேலும் சில புள்ளிகளை என் வாக்கியங்களில் அவ்வபோது சேர்க்கும் பழக்கம் எனக்குண்டு..
நன்றாக வந்திருக்கிறது. ரசித்தேன்.
//
பால் [Paul] said...

நன்றி பால்!
//
மாதவராஜ் said...
நன்றாக வந்திருக்கிறது. ரசித்தேன்.
//
நன்றி!
Post a Comment