Wednesday, May 19, 2010

காதல் மழை ஏந்திழை

வசீகரிக்கப்பட்ட வார்த்தைகளெல்லாம்
வரவு வைத்திருக்கிறேன் நாட்குறிப்பில்!
நீ எதிரில் நிற்கையில் மௌனம் மட்டுமே
சாத்தியமாகிறது என்ன செய்ய?

***************************
குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்துப் போனது மழை!
காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்கச் சாம்பலானது
நாகரிக முகமூடி!

***************************

தோட்டத்துப் பூக்கள்
மழையில் குளித்தன
காய்ச்சல் வந்ததெனக்கு
என் பார்வையில்
அவையெல்லாம் நீயானதால்!

***************************

பளீரென்ற மின்னல் வெளிச்சத்தில்
மனதில் வந்து போகிறதுன் முகம்
சபிக்கிறேன் மின்னலை
சற்று நீடித்தாலென்னவென்று?

***************************

உன் இதழ்களை கவனித்தவாறே
உரையாடுகிறேன் இப்போதெல்லாம்
உதிர்க்கும் சொற்களில் எப்போதாவது
எனக்கான காதல் உதிராதாவென்று?

***************************

நீயும் நானும் தனித்திருந்த நேரத்தில்
நமக்குள் நிலவிய அசைவுகளற்ற மவுனம்
சொல்லாமல் சொல்லிப் போனது
நம் கண(ன)ம் பொருந்திய காதலை!

***************************

ஆழியில் வசிக்கும் சிப்பியானது
வானிலிருந்து மழைத்துளியொன்றை
உள்வாங்கி முத்தாக்குமாம்!
நீ தந்த முத்தமும் அதுபோலவே
வெட்கத்தைத் தின்று நம்முள்
காதலை கருவாக்கியது!

***************************


19 comments:

கார்க்கிபவா said...

அட அட அட

நடக்கட்டும்.. கடைசிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது

Ungalranga said...

கவிதைகள் இனிமை..
அழகான வரிகள்..
அதணூடே பின்னும் உணர்வுகள்..

உண்மையில் இது காதல் மழைதான்..!!


வாழ்த்துக்கள்!!

Unknown said...

மழையைப் போலவே ஈரம் துளிர்க்கும் வார்த்தைகள். கவிதைகள். :)

Unknown said...

"Neenga yean Patathukku Paattu elutha koodaathu !?.."

கயல் said...

//
கார்க்கி said...
அட அட அட

நடக்கட்டும்.. கடைசிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது
//
நன்றி கார்க்கி! ரொம்ப சந்தோசமா இருக்கு. நக்கலடிக்காம நல்லாயிருக்குன்னு சொல்லுறது!:)

கயல் said...

//
ரங்கன் said...
கவிதைகள் இனிமை..
அழகான வரிகள்..
அதணூடே பின்னும் உணர்வுகள்..

உண்மையில் இது காதல் மழைதான்..!!


வாழ்த்துக்கள்!!
//

நன்றி ரங்கா!

கயல் said...

//
இசை said...
மழையைப் போலவே ஈரம் துளிர்க்கும் வார்த்தைகள். கவிதைகள். :)
//
நன்றி நண்பரே! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

கயல் said...

//

Nallakumar said...
"Neenga yean Patathukku Paattu elutha koodaathu !?.."

//

இதெல்லாம் ரொம்ப ஓவரு! ஊருப்பக்கம் வருவீகல்ல அப்ப இருக்கு உங்களுக்கு!

கமலேஷ் said...

எல்லா கவிதைகளுமே மிகவும் ரசிக்க தக்கதாக இருக்கிறது...


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!

காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!///

இந்த கவிதை எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது..

அருமை..

Madumitha said...

ஜில்லென்று
கவிதைகள்
தந்தமைக்கு
நன்றி.
குறிப்பாய்
சாம்பலான நாகரீக
முகமூடி கவிதை.

கயல் said...

//

கமலேஷ் said...
எல்லா கவிதைகளுமே மிகவும் ரசிக்க தக்கதாக இருக்கிறது...


குடையின் ஆதரவில்
நம்மை விட்டு விட்டு
அத்தனையும்
நனைத்து போனது மழை!

காதலினால் கனன்ற காமம்
தீப்பிடிக்க சாம்பலானது
நாகரீக முகமூடி!///

இந்த கவிதை எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது..

அருமை..

//

நன்றி கமலேஷ்!

கயல் said...

//
Madumitha said...
ஜில்லென்று
கவிதைகள்
தந்தமைக்கு
நன்றி.
குறிப்பாய்
சாம்பலான நாகரீக
முகமூடி கவிதை.
//
நன்றி மதுமிதா! அடிக்கடி வாங்க! மீண்டும் நன்றி முதல் வருகைக்கு!

கயல் said...

கணக்குப்படி பார்த்தா இது என்னோட 100வது இடுகை.எத்தனை கிறுக்கினாலும் மனசு நோகாம ஊக்கமளிக்கும் நண்பர்களின் பெருந்தன்மைக்கு கோடானு கோடி நன்றி!மேலும் தொடர உங்கள் வாழ்த்துக்களையும் ஆதரவையும் எதிர்நோக்கியபடி....

அன்புடன்
கயல்

பழமைபேசி said...

100 - வாழ்த்துகள்!

வார்த்தைகளெல்லாம்
மவுனம்
நாகரீக

====================

கடைசித் திரள் அருமையோ அருமை!!

======================

நிறைய ஒற்றுப் பிழை.... இஃகிஃகி!!

Madumitha said...

முதல்ல பிடிங்க
நூறு பூங்கொத்துக்களை.
ஆயிரமாப் பெருகட்டும்.

VELU.G said...

அழகான வரிகளில் காதலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்

கயல் said...

//
பழமைபேசி said...
100 - வாழ்த்துகள்!

வார்த்தைகளெல்லாம்
மவுனம்
நாகரீக

====================

கடைசித் திரள் அருமையோ அருமை!!

======================

நிறைய ஒற்றுப் பிழை.... இஃகிஃகி!!

//

நன்றி ஆசானே! உங்க கிட்ட குட்டு வாங்கலையினா என்ன நூறாவது பதிவு? அதான் .... இஃகி

கயல் said...

//
Madumitha said...
முதல்ல பிடிங்க
நூறு பூங்கொத்துக்களை.
ஆயிரமாப் பெருகட்டும்.
//

மிக்க நன்றிங்க!

கயல் said...

//
VELU.G said...
அழகான வரிகளில் காதலை வெளிப்படுத்தியுள்ளீர்கள்
//

நன்றி நண்பரே!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!