"என்ன இது? இப்படிப் பார்க்கிறாய்?”
“காதலெனக்கு உன் மீது”
“என்னிடமா?என்னிடம் மட்டுமா?”
“உன்னிடம் அதிகம்?”
“ஏன் அப்படி?
“சில நேரம் நீ மட்டும் இருந்தால் போதுமெனத் தோன்றும்.உலகை வெல்லும் தைரியம் பிறக்கும்.”
“ம்ம்ம்! குருட்டு தைரியம்.உலகில் எத்தனையோ இருக்க, என் மீது மட்டும் ஏன்?”
“அது அப்படித்தான்... ஏன் என்று தெரியவில்லை....”
சில மணித்துளி மௌனம்.
“என்னை நிச்சயம் இருவருக்கு பிடிக்கும். அந்த இருவருமே புறக்காரணிகளை களையெடுக்க நினைப்பவர்கள்.ஒருவன் வீரன், மற்றொருவன் என் தயவில் தன்னை மறைக்கும்/மறக்கும் கோழை. இதில் நீ யார்?”
“போராளி!”
”ஓ!எதைக் குறித்துன் போராட்டம்?”
“ஆதிக்கமும் அடக்குமுறையுமில்லாச் சமுதாயம் வேண்டி ...”
“வெல்வாயா?”
“சத்தியம். துணையாய் நீ என்னுடனிருந்தால்........”
“சம்மதமெனக்கு”
“மகிழ்ச்சி.... மற்றுமொன்று..... உனக்குப் பிடித்தால்.........”
”பிடித்தால்......?”
“உன்னை முத்தமிடவா ஒருமுறை?”
“என்ன......?என்ன கேட்டாய்? பயமில்லையா உனக்கு? எத்தனை துணிச்சல்? நான் முகம் திருப்பிக் கொண்டால் என்னவாகும் தெரியுமா?”
”தெரியும் தெரியும்! சத்தத்திற்கு பதில் இரத்தம்....போராளி நான்! இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா?”
“முட்டாளே! உன் கை பிடிக்குள் திமிர முடியாமல் இருக்கிறேன் நான்! சம்மதம் கேட்கிறாய் நீ!”
”இசையாத மனதை அசைப்பது கடினம்!சம்மதமா சொல்....”
“நீ வீரன் மட்டுமல்ல! பண்பாளனும் கூட.. ஒருமுறை என்ன? ஆயிரமுறை முத்தமிட்டுக் கொள் என்னை!”
ஒரு வீரனுடன் கூர்வாள் காதல் பேசியதாம் இப்படி.....
************
13 comments:
சூரமொக்கையே தான்
சொன்னீங்க.... கேட்டுக்கறோம்...
வீரனுடன் கடைசி வரை
வருவது போர்வாள் தானே.
கூர்வாளின் காதல் மிக
வித்தியாசமான சிந்தனை.
மொக்கை எனச் சொல்வது
தகுமோ?
//
நசரேயன் said...
சூரமொக்கையே தான்
//
ஆமா! ஆமா!
//
பழமைபேசி said...
சொன்னீங்க.... கேட்டுக்கறோம்...
//
நல்ல கற்பனை தானே ஆசானே?
//
Madumitha said...
வீரனுடன் கடைசி வரை
வருவது போர்வாள் தானே.
கூர்வாளின் காதல் மிக
வித்தியாசமான சிந்தனை.
மொக்கை எனச் சொல்வது
தகுமோ?
//
அதீத கற்பனை மொக்கை தானுங்களே!
உஷ்.. எனக்கு மட்டும் சொல்லுங்க.. யாரது..
செல்லாது செல்லாது..இதெல்லாம் மொக்கைல வராது வராது
//
கலகலப்ரியா said...
உஷ்.. எனக்கு மட்டும் சொல்லுங்க.. யாரது..
//
இஃகி....
//
கார்க்கி said...
செல்லாது செல்லாது..இதெல்லாம் மொக்கைல வராது வராது
//
என்ன இப்படி?:((
இதை மொக்கை என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
//
கமலேஷ் said...
இதை மொக்கை என்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
//
சூர மொக்கை என்பதே சரி....
பதிவு அருமை.. :)
Post a Comment