Saturday, March 13, 2010
ஓரறிவே!
சின்னஞ் சிறு நீர்ப்பரப்பு
காற்று முக்குளித்து
மீண்டுவரும் நீர்க்குமிழி
தாகம் தீர்ந்த பெருமகிழ்வில்
இசைந்தாடும் கோரைப்புற்கள்!
வெக்கைக்கு நீர்தெளித்து
சிறகுலர்த்தும் சிறுமைனா
நாரையும் கெழுத்தியும்
நாலாதிசையும் கபடியாட
குற்றலை சகிதம்
குளித்துச் செல்கிறது தென்றல்!
ஆலமர நிழலில் இளைப்பாறி
பழத்தோடு பாசத்தையும் பரிமாறி
குலவிக் களித்தது அணிலிரண்டு!
அள்ளித் தெளித்த மஞ்சளாய்
அங்கங்கே நெருஞ்சி
மிதிக்காதே குத்திடுவேன்
மிரட்டாலாய்ச் சிரித்தது!
எங்கோ ஒரு மரங்கொத்தி
ஊதப்பனை யொன்றை
உக்கிரமாய் கொத்தியது
மாசி மகத்து மாரியம்மன்
முரசாட்டம் ஏதொவொரு தாளம்
இன்னதென்று விளஙகவில்லை!
காத்துல சரசரக்கும்
காய்ந்த பனை ஓலை
இன்னமொரு சங்கதியை
சினேகிதிக்குச் சொல்லுவதாய்....
சந்தடியில்லா மத்தியான வேளைகளில்
நகரத்து நெருக்கடி மறந்து களைப்பாறி
உள்ளொடு கவிதை பரிமாறி
கற்றாழைப் பழத்தோடு
ஈச்சங்காய் கொறித்து
இதுவல்லோ வாழ்க்கையென
இன்புற்று நானிருந்தேன்!
அகலப்படர்ந்திருக்கும் ஆலமரத்தடியில்
அதிசயமாய் முளைவிட்ட
புளியஞ் செடியொன்னு
குறைமாச புள்ள போல
ஊட்டமாய் உணவின்றி
குறுகிச் சிறுத்திருக்க
நெஞ்சம் பதைபதைத்து
பலவாறு புலம்பிற்று!
அப்போது தவறவிட்ட சேதி
இப்போது புத்திக்கு புரிஞ்சிருச்சு!
தன் குடும்பம் தன் சாதி
தன் இனம் தன் மதமென்னும்
சுயநலம் கொழுத்த மனிதம்
தாவர சனத்துக்கும்
தன் விசத்தைப் பரப்பிற்றோ?
எப்படிச் சரி செய்ய?
எதுவரைக்கும் எட்டியதோ
ஆறறறிவின் கயமையெல்லாம்
கள்ளங் கபடமில்லா
ஓரறிவு உயிரிடத்து!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!
16 comments:
ரொம்ப நல்லாருக்கு கயல்... ஸ்டைல் மாறி இருக்கு..
//
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு கயல்... ஸ்டைல் மாறி இருக்கு..
//
நன்றி பிரியா! நமக்கேது தனிப்பட்ட நடை! எல்லா மாதிரியும் எழுதிப் பழக வேண்டியது தான்.
Super .. nalla varuveenga.. mindla vakkirean :))
கவிதை நல்லாருக்கு
கவித கவித!
அருமையான வரிகள்!
சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments
//இன்னதுன்னு //
இன்னதென்று
வாசிப்புத் தட்டுதல்ல?!
//காத்துல சர சரக்கும்//
காற்றில் சரசரக்கும்....
அடுக்கு மொழி அன்று; இரட்டைக் கிளவி!
//அகலப்படர்ந்திருக்கும் ஆலமரத்தடியில்
அதிசயமாய் முளைவிட்ட
புளியஞ் செடியொன்னு
//
செந்தமிழ்க் கவிதைக்கும் நாட்டுப்புறக் கவிதைக்கும்னு கூடு விட்டுக் கூடு பாயுறீங்களே?
//அகலப்படர்ந்திருக்கும் ஆலமரத்தடியில்
அதிசயமாய் முளைவிட்ட
புளியஞ் செடியொன்னு
//
செந்தமிழ்க் கவிதைக்கும் நாட்டுப்புறக் கவிதைக்கும்னு கூடு விட்டுக் கூடு பாயுறீங்களே?
//
பிரியமுடன்...வசந்த் said...
:(
//
நீங்க ஏன் வசந்து இப்படி அழுவுறீங்க?
//
Nallakumar said...
Super .. nalla varuveenga.. mindla vakkirean :))
//
அப்படியா? உங்க ஆசிர்வாதாம்! நல்லானந்தா சுவாமிகளே!
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கவிதை நல்லாருக்கு
//
முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
//
நாமக்கல் சிபி said...
கவித கவித!
அருமையான வரிகள்!
//
அப்படியா சொல்லுறீக? நீங்க சொன்னா கட்டாயம் சரியாத்தான் இருக்கும்!
//
சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments
//
படிச்சோமுங்க! ரொம்ப நல்லாயிருந்தது!
//
பழமைபேசி said...
//அகலப்படர்ந்திருக்கும் ஆலமரத்தடியில்
அதிசயமாய் முளைவிட்ட
புளியஞ் செடியொன்னு
//
செந்தமிழ்க் கவிதைக்கும் நாட்டுப்புறக் கவிதைக்கும்னு கூடு விட்டுக் கூடு பாயுறீங்களே?
//
ரெண்டும் கலந்தா எப்படியிருக்குமுன்னு ஒரு சின்ன முயற்சி... அதான் இஃகி!
Post a Comment