Tuesday, March 2, 2010

வேடதாரி


மறைநூல் மன்னுவன் ஓதிய ம‌றைபொருள்
சிறும‌தி சேவி உள‌மொரு தாளமிட்டு
நாணம் மேவுறும் அடக்கம் த‌தும்ப‌
க‌ருத்தினை அட‌க்கி முன்ன‌து பிற‌ழா
காரிருள் தட‌வி முறுக்கிட்ட‌ ம‌ட‌மையில்
விசித்து அர‌ற்றி ஒளிவாள் கருமணி
ஒய்யாரமாய் அன்னநடை பேணுங்கால்,
அதிராம‌ல் வந்த‌னன்; ஏந்திழை இள‌கிட‌
ஏற்புடை மாண்ப‌து எடுத்திய‌ம்பின‌ன்
சொல்லிடை தழுவிய சிருங்காரச் சேதி
எச்சமாய் ஈறுகளில் தடம்மாறி..
குருதிபடிந்த‌ கீழுதடு கண்ணுற
பற்றினானதை பற்றில்லா வேடதாரி!

8 comments:

பழமைபேசி said...

பயிற்சிக் கவிதைகள், நவீன ஓவியம், கர்நாடக சங்கீதம் இதுகெல்ல எல்லாம் நாம.... இஃகிஃகி!

பித்தனின் வாக்கு said...

ஆகா எதே புரிஞ்ச மாதிரிதான் இருக்கு.

கமலேஷ் said...

தமில தலைகீழா கரைச்சி குடிச்சி இருப்பீங்க போல...மரபு தமிழ் தெரிக்குது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்....

கயல் said...

//
பழமைபேசி said...
பயிற்சிக் கவிதைகள், நவீன ஓவியம், கர்நாடக சங்கீதம் இதுகெல்ல எல்லாம் நாம.... இஃகிஃகி!
//
புதுசா என்ன வந்தாலும் நாங்களும் அதுல முன்னேற முயலுவோமுல்ல! தெரியாத வரைக்கும் புரியாத ஒண்ணு பழகிட்டா அதுவும் பத்தோட பதினொண்ணு! என்ன ஆசானே கத்துக்குட்டி வாழ்க்கைத் தத்துவம் சரியா? பயிற்சி கவிதைகள்னு தலைப்பு போட்ட பின்னாலேயும் நக்கலு ம்ம்ம்? திருத்துறத விட்டுட்டு ...இருக்கட்டு இருக்கட்டு!

கயல் said...

//
பித்தனின் வாக்கு said...
ஆகா எதே புரிஞ்ச மாதிரிதான் இருக்கு.
//
ஆகா!
எழுதுன எனக்கே புரியாத விசயம் உங்களுக்கு புரியுதுன்னா! நீங்க..நீங்க... தான் தமிழுலகம் தேடுற அந்த மகானுபாவான்! அடிக்கடி வாங்க .. என் கிறுக்கல்களை 'பயப்படாம' கிண்டலடிச்சிட்டு போங்க! வருகைக்கு நன்றி!!

கயல் said...

//
கமலேஷ் said...
தமில தலைகீழா கரைச்சி குடிச்சி இருப்பீங்க போல...மரபு தமிழ் தெரிக்குது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்....
//
பாருங்கப்பா! இவரு தான் சொல்லுறாரு நான் சொல்லல! தமிழ் எப்படி இருந்தாலும் அழகு கவிஞரே! பிச்சு பிரித்து ஒட்டினாலும் அங்கங்கே சிரிக்கும் மழலையின் கனிவில் எப்போதும் எல்லா வடிவிலும் தமிழ் அழகு!

ப்ரியமுடன் வசந்த் said...

//குருதிபடிந்த‌ கீழுதடு//

இதான் மேட்டர்...

நல்லாருக்குங்க கவிஞர் கயல்

கயல் said...

நன்றி வசந்து!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!