கனவுத்தச்சன் ஒருவன்
காலங்காலமாய் கண்ணில்
கருவாக்கிய காவியமது!
களைவெட்டி சுள்ளி சுமந்து
களைப்பில் கண்ணயருமுன்
வரைந்து வைத்த வரலாறு!
வரையறையில்லா நெடுநிலப் பரப்பு
வரம்புகள் தாண்டி வறுமையும் தாண்டி
கேள்வி ஞானம் தந்த தமிழாலே - அது
வைரம் பதித்த காப்பியக் கலசம்!
ஆண்டான் அடிமையெனும்
ஆதிக்கவாத சமுதாயத்தில்
அடக்கி வைத்தான் அத்தனையும்
அவனுக்குள்ளே பொக்கிஷமாய்...
பட்டினத்தார் பாட்டும் பாவைக் கூத்தும்
பலவகை கீதமும் ஒலிக்கையில்
பாடிவைப்பான் இவனும் பாவத்தோடு
கூச்சலினூடே தானும் கவிதை சொல்வான்!
புரியாத மொழிக்கும் பழகாத இசைக்கும்
கைத்தட்டும் மேதாவிக் கூட்டம்
பாமரன் பக்கம் பார்க்கவேயில்லை!
உழவு நட அரைக்காணியில்லை
உண்டுறங்க ஒழுகாத குடிசையில்லை
அடுத்த வேளை உணவுக்கு....
இப்படியே இப்படியே
போராட்டக்களம் நிதமொரு
கத்தியோடு மல்லுக்கு வர
'பார்த்திபன்' கனவாய் மாறிப் போயின
பாமரன் கனவுகளும் பதிக்கத் தவறிய
இலக்கிய முத்திரைகளும்!
பின்னொரு நாள்
அன்பனவன் அவா இனிதே
அரங்கேறியது!
கலைமகளே வந்திவனை
வாழ்த்திவிட்டு
அவசரமாய் அக்காப்பியம் கேட்க
புதைத்து வைத்த புலமையெல்லாம்
அப்படியே ஒப்புவித்தான்
செல்லரித்த சொற்கள் போக
மிச்சமாய் ஏதுமில்லை!
காலம் கடந்து வந்த கடவுளை
குறை சொல்ல யாருமில்லை
கொடுப்பினை இவனுக்கில்லை
குத்தலாய் கேலிகள் பலவும்!
நரம்பில்லா நாக்கின் வழி
எள்ளுவாரெல்லாம் அறிவாரோ
பாமரன் தன் நிகரில்லா புலமைதனை!
12 comments:
என்னா வில்லத்தனம் ?
//
செந்தழல் ரவி said...
என்னா வில்லத்தனம் ?
//
எவ்ளோ நாளு? அப்பாடா! வாங்க வாங்க! வருகைக்கு நன்றி!
கயல்விழி கவிதைன்னா இதுதான் கவிதை நெம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ்
கயலு விளக்குனதுக்கப்புறம் நல்லாவே புரிஞ்சுச்சு
ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்லன்னு நிறைய பேர் இருக்குறதை சொல்லியிருக்கீக...
அருமையான கவிதை!
பாமரப் புலவனின் அங்கலாய்ப்பை அழகாய் வடித்திருக்கிறீர்கள்!
இது வில்லத்தனமேதான்! இஃகிஃகி!!
//கயலு விளக்குனதுக்கப்புறம் நல்லாவே புரிஞ்சுச்சு//
என்னவோ பாத்திரம் விளக்குன மாதிரி சொல்றீங்க வசந்த்?
//இது வில்லத்தனமேதான்! இஃகிஃகி!!//
இலக்கியத்தரம் வாய்ந்த கவிதை இடுகைகளில் இது போன்ற கிண்டல் செய்யும் தொனியில் இடப்படும் பின்னூட்டங்களை
வலிமையாக, வன்மையாக, ஆணித்தரமாக.
.
.
.
.
.
.
.
.
ஹிஹி
வழிமொழிகிறேன்!
//
பிரியமுடன்...வசந்த் said...
கயல்விழி கவிதைன்னா இதுதான் கவிதை நெம்ப நன்னாயிருக்கு பேஷ் பேஷ்
கயலு விளக்குனதுக்கப்புறம் நல்லாவே புரிஞ்சுச்சு
ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்லன்னு நிறைய பேர் இருக்குறதை சொல்லியிருக்கீக...
//
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ! ரொம்பவே முடியல !
//
நாமக்கல் சிபி said...
அருமையான கவிதை!
பாமரப் புலவனின் அங்கலாய்ப்பை அழகாய் வடித்திருக்கிறீர்கள்!
//
ஆரம்பமெல்லாம் அழகாத்தான் இருக்கு ஆனா கடைசில....
இலக்கியதரம் ?
அப்புட்டும் வஞ்ச புகழ்ச்சி!
நீங்க பாண்டிய நாடா ? சோழ நாடா?
//
பழமைபேசி said...
இது வில்லத்தனமேதான்! இஃகிஃகி!!
//
ஊருக்குள்ள அடிக்கிறதுக்கு ஆள் கெடைக்காம ஒரு கூட்டமே சுத்திக் கிட்டு இருக்கு! நீங்க வேற என்னைய காமிச்சுக் குடுத்துறாதீக!
ஏன் கரையான் அரிக்க விடுறீங்க!
பைண்ட் பண்ணி பத்திரமா எடுத்து வைங்க!
//
நாமக்கல் சிபி said...
ஏன் கரையான் அரிக்க விடுறீங்க!
பைண்ட் பண்ணி பத்திரமா எடுத்து வைங்க!
//
அவருக்கு வசதி இல்லீங்க....
Post a Comment