உரையின் உட்கருத்து மெதுவாய் உள்வாங்க
கருத்தின் செறிவில் தாக்குண்ட நெஞ்சம்
கன்னக் கதுப்பில் செந்நீர் பிரவாகம்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்....
நட்பில் கூடவா நல்லதும் தீயதும்?
எதிரியிடம் எச்சரிக்கை அவசியம்
தகைசால் நட்பிலும் நஞ்சு கலக்குமா?
பலமுறை பட்டாலும் புத்திக்கு வருவதில்லை
நண்பனெனும் பாத்திரத்தை யாரோவென்று பார்க்க.....
11 comments:
நம்பிக்கைதானே வாழ்க்கை?
யாரோவெனப் பார்க்கின்
தெரிந்தது தொலைவில்
ஒற்றைமரம் தன்னந்தனியாய்!
//எதிரியிடம் எச்சரிக்கை அவசியம் //
கண்டிப்பா..
<<
தகைசால் நட்பிலும் நஞ்சு கலக்குமா?<<
இது நட்பு மாதிரி ... ஒரு மாதிரி... நஞ்சுகளுடன்... நட்புக் கொள்ள முடிவதில்லை...
பார்த்துக்குங்க... :)
ஆமாம் இந்த விஷயத்திலும் ஏமாறும் போது நம்மை நினைத்து நாமே வெட்கப்படனும்..ஒரு நல்ல நட்பை தேர்ந்தெடுக்க தெரியாமல் போனதற்கு...
//
பழமைபேசி said...
நம்பிக்கைதானே வாழ்க்கை?
யாரோவெனப் பார்க்கின்
தெரிந்தது தொலைவில்
ஒற்றைமரம் தன்னந்தனியாய்!
//
ஆமாங்க! ஆனா இந்த கட்டாயத்தின் பேரில் காதல் கூட வரலாம் உளம்கனிந்த நட்பு....?
//
பிரியமுடன்...வசந்த் said...
//எதிரியிடம் எச்சரிக்கை அவசியம் //
கண்டிப்பா..
//
நட்பு பூசிய எதிரியிடம்...
//
கலகலப்ரியா said...
<<
தகைசால் நட்பிலும் நஞ்சு கலக்குமா?<<
இது நட்பு மாதிரி ... ஒரு மாதிரி... நஞ்சுகளுடன்... நட்புக் கொள்ள முடிவதில்லை...
//
அது என்னமோ பிரியலப்பா...
//
கலகலப்ரியா said...
பார்த்துக்குங்க... :)
//
சரிங்க!
:))
//
தமிழரசி said...
ஆமாம் இந்த விஷயத்திலும் ஏமாறும் போது நம்மை நினைத்து நாமே வெட்கப்படனும்..ஒரு நல்ல நட்பை தேர்ந்தெடுக்க தெரியாமல் போனதற்கு...
//
எல்லா தோல்வியிலும் படிக்கத் தான் முடிகிறதே தவிர.... தோற்பதை தவிர்க்க முடிவதில்லை..!
//
எல்லா தோல்வியிலும் படிக்கத் தான் முடிகிறதே தவிர.... தோற்பதை தவிர்க்க முடிவதில்லை..!//
அடப் பாவமே!
பிட் அடிக்கக் கத்துக்குங்க!
//
நாமக்கல் சிபி said...
//
எல்லா தோல்வியிலும் படிக்கத் தான் முடிகிறதே தவிர.... தோற்பதை தவிர்க்க முடிவதில்லை..!//
அடப் பாவமே!
பிட் அடிக்கக் கத்துக்குங்க!
//
:))
Post a Comment