Wednesday, March 3, 2010

இடம் சொல் பொருள்

"இங்க உக்காரலாமா?"

"ஓ! தாராளமா?"

"எங்க இறங்கணும்?"

"தாம்பரம்"

"கடைசி தானே."

"ஆமாங்க."

காதில் முணுமுணுத்த எம்.எஸ் இப்போ இன்னும் கொஞ்சம் பலமாய்...

சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்... அதிக‌ம் கூட்ட‌மில்லை. ஒரு வெள்ளிக்கிழ‌மை முன்ப‌க‌ல் நேர‌ம். மாமாவின் நினைவு நாளுக்காக‌ அவ‌ர் குடும்ப‌த்தின‌ர் இருக்கும் ப‌குதிக்கு போய்க்கொண்டிருக்கிறேன். இழப்பின் வழி கண்ணீராய் மாற நேரம் பாத்துக் கிடந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு அகோர கார் விபத்தில் பலியான மாமா எண்ணச் சிதறலாய் என்னை சிதறடித்துக் கொண்டிருந்தார்.

"உங்க‌ள‌ பாத்தா என் தோழி ஞாப‌க‌ம் வ‌ருது."

"என்ன‌? ஒரு நிமிச‌ம் ... கேக்க‌ல‌ ச‌ரியா.", எம்.எஸ் ச‌ன்ன‌மாய் கிசுகிசுக்க‌லானார்.

"இல்ல‌ என் தோழி இற‌ந்து ஒரு மாத‌மாகிறது. அவ‌ உங்க‌ மாதிரியே இருப்பா."

"அப்ப‌டியா! ச்ச்சூ. என்னாச்சுங்க‌?"

"ஒரு விப‌த்து.ம்ம். அது முடிஞ்சு போன‌ க‌தை."

மாம்பலம் வந்தும் அத்தனை கூட்டமில்லை.

"ஏங்க பெரியார் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"என்ன‌ங்க‌? நாமெல்லாம் அவ‌ர‌ விம‌ர்ச்சிக்க‌லாமா? சும்மாவா சொன்னாங்க‌ ப‌குத்தறிவு ப‌க‌ல‌வ‌ன்னு. மூடநம்பிக்கை எனக்குள்ள இல்லாம பண்ணினவராச்சே."

அந்த‌ப் ப‌க்க‌ம் அட‌ர் ம‌வுன‌ம் சில ம‌ணித்துளிக‌ளுக்கு....

"தீயின்னா நாக்கு வெந்துடுமாங்க ?"

"யாரு சொன்னா? நான் இதெல்லாம் நம்புற ஆளு கெடையாதுங்க."

"ஒரு தீயின் வ‌டிவ‌ம் சொல்லுங்க‌ பாப்போம்"

"ம்ம்... விள‌க்குத்திரியில் எரியும் சிறு 'சுட‌ர்' " [க‌விஞ‌ராக்கும்.]

"ஒரு காட்சிய க‌ற்ப‌னை பண்ணிக்குங்க‌. அது உங்க‌ த‌லைக்கு மேலே எரியுது. அதுக்கு அடுத்து ஒரு மூட்டையா நீங்க‌. ஒரு விப‌த்துல‌ நீங்க‌ செத்துட்டீங்க‌" [அடிப்பாவி வெள்ளிக்கிழ‌மை அதுவுமா இப்படி அச்சாணியமா......ஸ்ஸ் பெரியார்..பெரியார்.]

உங்க‌ள‌ச் சுத்தி ஒரே ஒப்பாரி. எல்லாருக்கும் நீங்க வாங்கி வ‌ச்சிட்டு போன‌ க‌ட‌ன் ப‌த்தின ப‌ய‌ம் தான் க‌த‌றலா வ‌ருது. அப்ப‌ நீங்க‌ அனாதையா விட்டுட்டு போன‌ குடும்ப‌த்துக்கிட்ட‌ என்ன‌ சொல்ல‌ நினைப்பீங்க‌?"

"அழ‌ற‌த‌ நிறுத்திட்டு என்னைப் பாருங்க‌. இன்ன‌ம் உசுறு இருக்குன்னு சொல்ல‌ நெனைப்பேன்"

"த‌லையிலேயே நாலு வ‌ச்சேன்னா. நீதான் செத்துட்டீல்ல‌. அப்புற‌ம் எப்ப‌டி? இது வேற." [ஆத்தி. அர‌ லூசோ ? அடிச்சிரும் போல‌ இருக்கு. சூதான‌மா த‌ப்பிக்கோனும்.தாம்ப‌ர‌ம் எப்போ வ‌ரும்? இப்ப‌த்தானா ப‌ர‌ங்கிம‌லை... அய்யோ. யாராவ‌து இடையில‌ பேசி என்ன‌க் காப்பாதுங்க‌ப்பா. ப‌க்க‌த்துல‌ வேற‌..]

"சரி. நீங்களே சொல்லுங்க‌. அந்த‌ பிண‌ம் என்ன‌ சொல்ல‌ணும்?"

"பிண‌ம்ன்னு சொல்லாதே. அது நீதானே."

வதைக்குறாளே.

"தீயின்னா வாய் வெந்துட‌வா போகுது."

"சூப்ப‌ர்! சூப்ப‌ர்! ந‌ல்லா பேசுற. ஆங் எங்க வுட்டேன்? [அவ்வ்வ்வ்வ்வ்]

க‌வ‌ல‌ப் ப‌டாதீங்க! நான் எல்.ஐ.சி ல‌ 'ஆயுள் காப்பீடு[insurance]' எடுத்திருக்கேன்னு சொல்ல‌ணும்."

"நான் தான் காப்பீடு எடுக்க‌வே இல்லையே. என‌க்கு பொய்யெல்லாம் சொல்ல‌ தெரியாது"

"என்ன‌து? இன்னும் எடுக்க‌வேயில்லையா? உன்ன‌ என்ன‌ செஞ்சா தேவ‌லை? அப்ப‌டியே ர‌யில்ல‌ இருந்து த‌ள்ளிவிட்டுருவேன். பாலிசி எடுக்க‌லேயேன்னு பாக்குறேன். ச‌ரி ச‌ரி அட்ர‌ஸ் சொல்லு." [என்ன மரியாதை எகிறுது.நல்ல வேலை பாலிசி எடுக்கல]

"எ.. எதுக்கு?" [விட‌மாட்டிய்யா நிய்யி. அப்பாடா பல்லாவ‌ர‌ம் வ‌ந்துருச்சு.]

"ஆளுங்க‌ள‌ அனுப்ப‌த்தான்"

"எ.. என்ன‌து? "

"மேலும் விப‌ர‌ங்க‌ள் வேணுமில்ல‌. Mail ID சொல்லு.Test Mail with LIC Agent Membership Details அனுப்புறேன். ஒழுங்கு ம‌ரியாதையா பாலிசி எடுக்குற‌ ச‌ரியா?  "

ப‌ய‌த்தில் உள‌ர‌.. க‌ர்ம‌ சிர‌த்தையாக குறித்துக் கொண்ட‌து.அப்பாடா, தாம்ப‌ர‌ம் வ‌ந்திருச்சு. வேக‌மாய் எழுந்து போனேன்.

"பாத்து எற‌ங்கு. இன்னும் பாலிசி எடுக்க‌ல‌" முதுகில் குத்திய‌ வார்த்தைக‌ள் , துர‌த்தியும் திரும்பாம‌ல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினேன் பாருங்க‌.... வெளியே வ‌ந்து ஆட்டோ வ‌ச்சதும் தான் ந‌டுங்கின‌ குலை மெதுவாய் அட‌ங்கிற்று. என்னையெல்லாம் எத்த‌ன‌ பெரியார் வ‌ந்தாலும் திருத்த‌வே முடியாது.

க‌ருத்து :‍

1.எல்லாரும் ஆயுள் காப்பீடு எடுக்க‌ணும்.

2.பெரியாரை ப‌டிப்ப‌தோடு ம‌ட்டும் நிறுத்தினா இப்ப‌டித்தான். வாழ்க்கையில‌ க‌டைபிடிக்க‌ணும். [எப்புடி நாங்க‌ளும் க‌ருத்து சொல்லுவோமுல்ல‌?]

6 comments:

நசரேயன் said...

கருத்து கயல்ன்னு பேரை மாத்தலாமா?

ப்ரியமுடன் வசந்த் said...

//"தீயின்னா வாய் வெந்துட‌வா போகுது!" //


பல விசமம் நிறைந்த வார்த்தை...!

மேலும் பேசி வாங்கி கட்டி கொள்ள நான் ஆளில்லை மீ த எஸ்கேப்பு...

நசருக்கு ஒரு ரிப்பீட்டேய்...

பழமைபேசி said...

உசுறு?

உசுரு...

கயல் said...

//
நசரேயன் said...
கருத்து கயல்ன்னு பேரை மாத்தலாமா?
//

வேணாம் அண்ணாச்சி! சமாதானமா போயிருவோம்! வருக்கைக்கு நன்றி!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
//"தீயின்னா வாய் வெந்துட‌வா போகுது!" //


பல விசமம் நிறைந்த வார்த்தை...!

மேலும் பேசி வாங்கி கட்டி கொள்ள நான் ஆளில்லை மீ த எஸ்கேப்பு...

நசருக்கு ஒரு ரிப்பீட்டேய்...

//

பயந்த மாதிரியே நடிக்குறது! ம்ம்! நன்றி வசந்து!

கயல் said...

//
பழமைபேசி said...
உசுறு?

உசுரு...
//
குட்டு வாங்க‌லைனா ஒரு நிறைவே வாற‌துல்ல‌ ! அதான்! ந‌ன்றி ஆசானே!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!