புறம்பேசிப் புறம்பேசி
சுயம் இழந்த கூட்டத்தில்
இறுக்கிப் பிடித்த உயிரோடும்
பாசச் சறுக்கல்களில்
பட்ட அடிகளின் வடுக்களோடும்...
கையறு நிலை வந்தும்
கைபிடித்த தன்மானத்தில்
நாளை விடிந்துவிடும்
அனிச்சையாய் உயிர்த்தெழுந்து...
ஏவல்களை எல்லாம்
இன்பமாய்ச் சுமந்தபடி...
எத்தனை தான் கொட்டினாலும்
இதற்கு உணர்வே வருவதில்லை
ஏமாற்றங்களின் எதிரொலிப்பாய்
முன்னிலும் பலமாய்
பல்முனைத் தாக்குதல்!
உள்ளெழும்பும் 'வளி'யிடத்து
வலுவிழக்கும் நாக்கு - அது
எய்தவன் வீரியத்தில்
இன்னமும் ஆட்டம் போட
சீழ்பிடித்த பற்களினூடே
சீரழியும் தமிழும் - அதன்
சீற்றமிகு வார்த்தைகளும்
வரம்பழிந்த நாற்றங்களும்
'சிவனேயெனச்' சகித்தபடி..
சிதறிய வார்த்தையெல்லாம்
பழிச்சொல்லாய்ப் பரிணமித்தும்
மாசற்ற மனச்சாட்சியின்
மரபு சார்ந்த வழிநடத்தல்!
கண்ணீரில் கரைந்த மனம்
வார்த்தைக் கொப்பரையில்
வழுக்கி விழும்!
விழுந்த வேகத்தில்
துடித்து எழும்
தாக்க வரும் வறுமைக்கு
தோதான பதில் கொடுக்க!
வழக்கம் போல் இப்போதும்
தாய்க்குளவி கொட்ட கொட்ட
விஷம் வாங்கும் சேய்ப்புழுவென
சமுதாய வீதிகளில்
வாழ்க்கை பயிலும்
பாரதியின் புதுமைப்பெண்கள்(!)
ஆணுக்கு நிகராய்
பட்டமும் பதவியும்
அணியாய் கொண்டு!
15 comments:
ரொம்ப நல்லா இருக்குங்க...உண்மையான விசயமும் கூட...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
வார்த்தைகள் பொறியாக தெறிக்கின்றன... வழக்கம் போல அருமை கயல்...
//புறம் பேசி புறம் பேசி //
புறம் பேசிப் புறம் பேசி
//அனிச்சயாய் //
அனிச்சையாய்
//இன்பமாய் சுமந்தபடி//
இன்பமாய்ச் சுமந்தபடி
//எத்தனை தான் //
எத்தனைதான்
//வளியிடத்து //
???
//'சிவனேயென' சகித்தபடி//
'சிவனேயென'ச் சகித்தபடி
//பழிச்சொல்லாய் பரிணமித்தும்//
பழிச்சொல்லாய்ப் பரிணமித்தும்
//வார்த்தை கொப்பரையில் //
வார்த்தைக் கொப்பரையில்
//கொட்ட கொட்ட//
கொட்டக் கொட்ட
//விஷம் வாங்கும் //
நஞ்சு பெறும்
ஏன் இப்படி?
பட் கவிதை நல்லாருக்கு..!
தேடி நிதம் சோறு கவிதையை வாசித்தது போல இருக்கும் வீரமா... நிறைய எழுதுங்க கயல்
//
கமலேஷ் said...
ரொம்ப நல்லா இருக்குங்க...உண்மையான விசயமும் கூட...வாழ்த்துக்கள் தொடருங்கள்...
//
நன்றி! கமலேஷ்!
//
கலகலப்ரியா said...
வார்த்தைகள் பொறியாக தெறிக்கின்றன... வழக்கம் போல அருமை கயல்...
//
நன்றி பிரியா!
//
பழமைபேசி said...
//புறம் பேசி புறம் பேசி //
புறம் பேசிப் புறம் பேசி
//அனிச்சயாய் //
அனிச்சையாய்
//இன்பமாய் சுமந்தபடி//
இன்பமாய்ச் சுமந்தபடி
//எத்தனை தான் //
எத்தனைதான்
//வளியிடத்து //
???
//'சிவனேயென' சகித்தபடி//
'சிவனேயென'ச் சகித்தபடி
//பழிச்சொல்லாய் பரிணமித்தும்//
பழிச்சொல்லாய்ப் பரிணமித்தும்
//வார்த்தை கொப்பரையில் //
வார்த்தைக் கொப்பரையில்
//கொட்ட கொட்ட//
கொட்டக் கொட்ட
//விஷம் வாங்கும் //
நஞ்சு பெறும்
//
வாங்க ஆசானே! திருத்திட்டேன் பாருங்க!! ஆகா! ரொம்ப வேலை வச்சிட்டேன் போல! சரி சரி ! பரவாயில்ல! வாத்தியாருங்க எல்லாம் பொறுமைசாலிங்க! ஆனாலும் இனிமே இத்தன வராம பாத்துக்குறேன்! என்ன ஆசானே! மன்னித்தல் உங்களுக்கு புதுசா என்ன?
//
பிரியமுடன்...வசந்த் said...
ஏன் இப்படி?
பட் கவிதை நல்லாருக்கு..!
//
ம்க்கூம் இப்படிக் கேட்டா நான் எதையுன்னு எடுத்துக்குறது? எதுக்குன்னு பதில் சொல்லுறது?
நம்ம வசந்துக்கு என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியலேயேப்பா..........
பிழைகளைச் சொன்னீகன்னா கொறச்சுக்குறேன் அப்பு! தூக்க கலக்கத்துல கிறுக்குனது! அதேன்......
//
உயிரோடை said...
தேடி நிதம் சோறு கவிதையை வாசித்தது போல இருக்கும் வீரமா... நிறைய எழுதுங்க கயல்
//
நன்றிங்க முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!
ஆத்தா கயலு பிழை சொல்ற அளவுக்கு நான் வளரல தாயீ...
//வழக்கம் போல் இப்போதும்
தாய்க்குளவி கொட்ட கொட்ட
விஷம் வாங்கும் சேய்ப்புழுவென
சமுதாய வீதிகளில்
வாழ்க்கை பயிலும்
பாரதியின் புதுமைப்பெண்கள்(!)
ஆணுக்கு நிகராய்
பட்டமும் பதவியும்
அணியாய் கொண்டு!//
இந்த வரிகளில் ஆண் வர்க்கத்தை குத்தி காட்டுறமாரி இருந்துச்சு அதான் கேட்டேன் இதுக்கு போயிட்டு கோச்சுகிறீகளே...
வாங்க வசந்து!
//
பிரியமுடன்...வசந்த் said...
ஆத்தா கயலு பிழை சொல்ற அளவுக்கு நான் வளரல தாயீ...
//
தன்னடக்கம்? இருக்கட்டும் இருக்கட்டும்!!
போன தலைமுறை வரைக்கும் பாரதியை படித்தவர்கள், இந்த தலைமுறையில் அவன் கனவு கண்டது போல வாழுகிறார்கள்! அதற்கேற்பவே அவமானங்களும்.. பொய்யில்லை... உண்மை!
குளவி கொட்டி கொட்டி தன் சேய்ப்புழுவுக்கு விசம் ஏத்துமாம்! எதிர்காலத்துல பெரிய எதிரி வந்தா தன் அளவுக்கு தன் சேயும் தாக்குப் பிடிக்க!
அந்த மாதிரி இந்த கால கட்டத்துல வீட்டை தாண்டி வந்து பெண்கள் படுற ஒவ்வொரு அடியும் பாடமா எடுத்துக்கிட்டு முன்னேறுறாங்க பெண்கள் அப்படீங்கிற மாதிரி தானே தவிர குறை ஏதும் சொல்லப்பா!
ஒரு புழுவின் வளர் நிலையோடு இந்த தலைமுறை பெண்களின் முன்னேற்றத்தையும் ஒப்புமை படுத்தி சொல்லுற முயற்சி! ஆனா அம்புட்டு அம்சமா வரல நான் நெனச்ச அளவுக்கு! நல்லதும் கெட்டதும் தானே சமுதாயம்... வளரத் துடிக்கிற பெண்களை ஆண்கள் குறை சொல்லுறத காட்டிலும் பெண்களே சொல்லுறாங்க!எல்லாரும் நல்லவுகளாவே இருக்க ஆசை வேணா படலாம். ஆனா நடக்குமா? சில காயங்கள் சில வெறுப்புகள் இல்லாம போயிடுமா என்ன? அதான் ...
மணிரத்தினம் படம் மாதிரி ஒத்த வார்த்தயில கேட்டா விட்டுடுவமா என்ன?இம்பூபூட்டு பெரீ.........ய்ய பதில் சொல்லுவோமுல்ல! :))
காதுல ரத்தம் வந்தா நான் பொறுப்பில்ல சாமி!
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவிதான......அப்படின்னு அவுங்க நினைக்கிறதா நீங்க நினைக்ககிறீங்க....பொறுத்தி்டுங்க..காலம் மாறுது.. அவுங்க கவிதை எழுதற மாதிரி பண்ணிப் போடலாம் தாயீ.
//
தாராபுரத்தான் said...
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவிதான......அப்படின்னு அவுங்க நினைக்கிறதா நீங்க நினைக்ககிறீங்க....பொறுத்தி்டுங்க..காலம் மாறுது.. அவுங்க கவிதை எழுதற மாதிரி பண்ணிப் போடலாம் தாயீ.
//
ஆமாங்கய்யா! இறக்கை இருக்கு,உடல் திறனும் இருக்கு! ஆனா 'முடியாது' அப்படீங்கிற எண்ணத்தில் ஊறிட்டாக்க எங்கே பறக்குறது? இந்த முடக்கி போடுற வேலையை சமூகம் செய்யுது! பெரும்பாலும் ஆண்கள், சில பெண்களும் செய்யுறாங்க! மனிதன் என்பவன் சமூக பிராணி தானே!சூழ்நிலைக்காரணிகள் பாதிக்காமல் இருக்குமா என்ன? அந்தநிலை மாறி சம அந்தஸ்துள்ள சகஜீவியா பெண் மதிக்கப்படனும்! அதுவே என் போன்ற வளரத் துடிப்பவர்களின் கனவு! நன்றி!!
kayal..... thodar idugai azhaippu... (vera vazhi illa thaayee...).. eluthunga... =))
Post a Comment