Monday, February 15, 2010

கண்ணால் காதல் பேச வா!

[காத‌ல‌ர் தின‌த்துக்கு எதுவும் எழுத‌லைன்னா எப்ப‌டி? க‌டையில‌ இப்போ கதையும் கீது

வாத்தியாரே! அறிமுக‌ச் சலுகையா படிக்க விலை, வ‌ரி ரெண்டுமே கெடையாது. மெய்யாலுமே இது ப்ரீ தாம்பா. சாப்டு பாத்து அப்பால‌ உப்பு புளி காரம் எல்லாம் கரீட்டான்னு பின்னூட்டம் போடுங்கப்பா.]

*********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 4:15 pm

என்ன பண்ணிக்கிட்டிருக்கே.

சும்மா தான். தனியா உக்காந்து படிச்சிட்டுருக்கேன்.

ஏன் யாருமில்லையா?

ஆமாம். வெளியே போயிருக்காங்க. நான் படிக்கனுமின்னு போகல.

படிக்கறியா. சரி படி. நான் உன்னை இன்னிக்கு வெளிய அழைச்சிட்டுப் போக‌லாம்னு நெனைச்சேன்.

என்ன‌ திடீர்ன்னு?

இன்னிக்கு தாம்பா வீட்டுல‌ இருக்கேன். வேலை எதுவும் கிடையாது. அதான்..

ஓகோ. உங்க‌ளுக்கு வேலை இல்லையின்னா தான் அடுத்தவ‌ங்க‌ள‌ ப‌த்தி நெனைப்பீங்க‌ளோ?

அப்படியில்ல......ச‌ரி. ப‌டி. இன்னொரு நாள் போக‌லாம்.

ப‌ரீட்ச்சைக்கு ஒரு மாச‌மிருக்கு.

அத‌னால‌ என்ன‌? ப‌டி. நீயெல்லாம் இப்போயிருந்து ப‌டிச்சாத்தான் பாஸாவ‌து ஆவே.

யேய்.........

ஜீவ‌னிழ‌ந்த‌து அலைபேசி.

************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 5:30 pm

என்ன‌ ப‌ண்ணிக்கிட்டிருக்கே.

ம்ம். காது குத்திக்கிட்டிருக்கேன்.

உங்கப்பாவுக்கா? அதான் எங்க‌க்கா குத்துறாளே போதாது? நீ வேற‌யா?

திமிரு. ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சு. ச‌ரி தொந்த‌ர‌வு ப‌ண்ணாதீங்க நான் ப‌டிக்க‌ணும்.

ச‌ரி ப‌டி. வாட்ச் மேன் கிட்ட ஒரு கிஃப்ட் த‌ந்திருக்கேன் ம‌ற‌க்காம‌ வாங்கிக்க‌.

வாச‌ல்யா? இவ்வ‌ளவு தூர‌ம் வ‌ந்திட்டு.... இருங்க‌ தோ வ‌ந்துட‌றேன்...

வேணாம் வேணாம் நீ ப‌டி. ப‌ரீட்சை இருக்குல்ல‌.

ப‌ர‌வால்ல‌. பாத்துக்க‌லாம்.

ம்ம்.அப்படீன்னா சரி. வா. சீக்கிர‌ம்.

**********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 5:45 pm

என்ன இத்தன அலங்காரம். வெளிய போறியா?

பெச‌ன்ட் ந‌க‌ர் வ‌ரைக்கும் போக‌லாமா?

நாங் கேட்ட‌துக்கு ப‌டிக்க‌ணும்னு சொன்னே.இப்போ ... எனக்கு வேலையிருக்கே.

முடியுமா? முடியாதா?

ம்ம். ராட்ச‌சி. முடியாதுன்னா விட‌வா போறே. ச‌ரி வா.

***********************

பிப்ர‌வ‌ரி 14,2010, 6:15 pm

என்ன‌ இன்னிக்கு இத்த‌ன‌ கூட்ட‌ம்? ஜோடி ஜோடியா?

காத‌ல‌ர் தின‌ம் அதான்.....

கொஞ்ச தூரம் த‌ண்ணீல‌ கால‌ ந‌னைச்சுக்கிட்டே ந‌ட‌க்க‌லாம்பா

கொஞ்ச‌ம் யோசிச்சுப் பாரு. இப்போ சுனாமி வ‌ந்தா எப்ப‌டியிருக்கும்?

ம்ம்ம். அசிங்க‌மா இருக்கும்.

லூசு. ஒன‌க்கொரு விச‌ய‌ம் தெரியுமா? ந‌ம்ம‌ ம‌துரையில‌ க‌ட‌ல் இருந்துச்சாம்...

லெமூரீயாக் க‌ண்ட‌ம் ..க‌ட‌ற்கோள்.. மெதுமெதுவாய் சிந்து ச‌ம‌வெளி வ‌ரை போன‌வனை எரிப்ப்து போல் பார்த்துவிட்டு...

நாம‌ போக‌லாம். ப‌டிக்க‌ணும் என‌க்கு.

நான் அறிவார்த்த‌மா ஏதாவ‌து பேசுனா உன‌க்கு இப்போல்லாம் பிடிக்கிற‌தேயில்ல. என்ன‌ ப‌ண்ணுற‌து உங்கிட்ட‌ இல்லாத‌ அறிவு என்கிட்ட‌ அடைக்க‌ல‌மாகியிருக்கு. எல்லாம் விதி. கோவ‌ப்ப‌ட‌க்கூடாது.

போதும்.. போதும் உங்க‌ சுய‌விள‌ம்ப‌ர‌ம்.. போக‌லாம்.

************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 6:40 pm

கூட்ட‌த்தைக் க‌ட‌ந்து வ‌ண்டியிருந்த‌ இட‌த்துக்கு வ‌ருவ‌த‌ற்குள் க‌ல‌வையான‌ காட்சிக‌ள்.

வீசும் இள‌மையில் குளிர் காய்ந்த‌ப‌டி ... அனைவரையும் கடந்த போது அவனை கவனித்தாள். செல்ல சிணுங்கல்களையும் , முத்தச் சத்தங்களையும் அலட்சியம் செய்தவாறு அவளை பத்திரமாய் இருப்பிடம் சேர்ப்பதே குறி எனக் கொண்டதாய் பட்டது.

எப்ப‌டிச் சொல்வ‌து...

இந்த‌ ம‌ர‌த்திட‌ம் எப்ப‌டி காத‌லைச் சொல்வது?சொன்னா மட்டும்.... படிக்கிற வயசுல எதுக்கு காதல் கத்திரிக்காயின்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடும்... அம்மா அப்பாகிட்ட.. தாத்தா பாட்டின்னு வீடே நாறிடும் ... வேணாம்...

கொஞ்ச‌மாவ‌து புரியுதா பாரு. நெடு நெடுன்னு வ‌ள‌ந்திருக்கே த‌விர‌ கொஞ்ச‌ங் கூட‌ .....

"ஏய் என்னாச்சு? ஏன் கண்ணெல்லாம் க‌ல‌ங்கியிருக்கு...."

"ஒண்ணுமில்ல‌."

"த‌லைவ‌லிக்குதா? சாப்பிட‌றியா ஏதாவ‌து?"

"ஒண்ணுமில்ல‌. நான் வீட்டுக்கு போக‌னும்"

"ச‌ந்தைக்கு போக‌னும். காசு குடு. ஆத்தா வையும்"

அவ‌ள் ஆற்றாமையை அவ‌ன் கேலியால் கிள‌றிவிட‌வும்.... அட‌க்கி வைத்த‌ க‌ண்ணீர் அருவியாய் ...

"என்ன‌டா செய்யுது?" உண்மையிலே ப‌த‌றிய‌வ‌னாக‌ அவ‌ன் கேட்க‌வும்.

"ஒண்ணுமில்ல‌ மாமா. என்னை வீட்டுல‌ விட்டுடுங்க‌. பிரெண்ட்ஸ் தேடுவாங்க‌. நான் வேற‌ சொல்லாம‌ வ‌ந்துட்டேன் "

"அவ்ளோதானா. நான் வேற‌ ப‌ய‌ந்து போயிட்டேன்."

*************************

எதிர்பார்த்து ஏமாந்து போய்... அந்த‌ ஏமாற்ற‌த்தையும் மூடி ம‌றைக்க‌ ... எத்த‌னை அவ‌ஸ்தை? அவ‌ன் பேசிய‌ எதுவுமே ஏற‌வில்லை மூளைக்குள். எத்த‌னை இய‌ல்பாய் இருக்கிறான். இவ‌னால் எனக்குள் இத்த‌னை மாற்ற‌ம். தெரிந்தால் நிச்ச‌ய‌ம் பார்ப்ப‌து கூட‌ இல்லை என்றாகி விடும். ம‌றைத்திடு ம‌ன‌மே.

அவ‌ள் அவ‌னின் முறைப்பெண். சென்னையில் த‌ங்கி முதுக‌லை இறுதியாண்டு ப‌டிக்கும் மாண‌வி.

அவ‌ன் அவ‌ளின் தாய் மாம‌ன்.அம்மாவின் சித்தப்பா மகன். ஒரு த‌னியார் நிறுவ‌ன‌த்தில் ப‌ணி. எப்போதாவ‌து இவ‌ர்க‌ள‌து ச‌ந்திப்பு நிக‌ழும். அம்மா த‌ந்தனுப்பிய‌ திண்ப‌ண்ட‌ங்க‌ளுக்காக‌வோ, இவளை ஊருக்கு வ‌ழிய‌னுப்புவ‌தின் நிமித்த‌மாக‌வோ நிக‌ழும் ச‌ந்திப்புக்கள் அவன் வரையில் இயல்பாய் இருக்க, ஏனோ இவ‌ளை ம‌ட்டும் அவ‌ன் பால் இழுத்திருந்த‌து.

*************************

பிப்ர‌வ‌ரி 14,2010, 7:10 pm

"சொன்ன‌து எல்லாம் விள‌ங்குச்சா?"

"ம்ம். என்ன சொன்னீங்க?"

"ஆகா. இவ‌ளுக்கு ஏதோ பேய் பிடிச்சிடுச்சு. ஊருக்கு கூட்டி போய் ம‌ந்திரிக்க‌னும். வீடு வ‌ந்திருச்சு இற‌ங்கு"

"ஏய் என்ன‌ ஆச்சு ?"

உலுக்கியவனை பார்த்தாள், அவன் ஏதோ சொல்ல வந்து தடுமாறுவதாய்...

இதாவது சொல்லுறதாவது... அப்படி ஏதாவது நடந்தா உலகம் அழிஞ்சிரும்.

எரிச்ச‌லாய் த‌லை நிமிர்த்திய‌வ‌ள் அவ‌னின் நேரான‌ பார்வையில் சிக்குண்ட‌வ‌ளாய் மீண்டும் த‌ரை நோக்கினாள்.

"ச‌ரி. நான் வ‌ர்றேன்."

"கொஞ்ச‌ம் இரு."

"என‌க்கு பொண்ணு பாக்குறாங்க‌. நான் உங்க‌ப்பா கிட்ட‌ கேக்க‌ போறேன் நீதான் வேணும்னு.நீ என்ன‌ சொல்லுற?" என்றவன் நிறுத்தி, "நீ என்ன‌ சொல்லுவேன்னு தான் தெரியுமே."

நம்ப முடியாமல் "எப்ப‌டி?" என்றாள்.

"உன் க‌ண்க‌ள் பொய் சொல்லாது என்கிட்ட‌."

விட்டுப் பிரிகையில் கைக‌ளை பிடித்திழுத்த‌வ‌ன்....

எதிர்பாராத கணத்தில் க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டு ர‌க‌சிய‌மாய்

" நான் உன்னை காத‌லிப்ப‌தும் என‌க்கு எப்போதோ தெரியும் ... ஆனா இன்னிக்குத் தான் தெரிஞ்சுது நீயும் என்னைக் காத‌லிக்கிறேன்னு.வாட்ச் மேன் கிட்ட இருக்க பரிச பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும். அதுக்குள்ளேயும் ..." கிசுகிசுப்பாய் சொல்லி விட்டு கிள‌ம்பிப் போனான்.

அவ‌ச‌ர‌ க‌தியில் நிக‌ழ்ந்த‌ மாற்ற‌ங்க‌ள் க‌ன‌வ‌ல்ல‌ நிச‌மென‌ புரிய‌ மீண்டும் அழுதாள்.இம்முறை பெருகிற்று ஆன‌ந்த‌ க‌ண்ணீர் காத‌லோடு.

10 comments:

பழமைபேசி said...

ம்ம்...பல திறமைகளும் இப்பதான் வருது.... சபாசு!

கலகலப்ரியா said...

ஜில்லுன்னு இருக்கு கயல்... =)).. உப்பில்ல... புளி இல்ல... காரமும் இல்ல... பாயாசம் கொடுத்துட்டு உப்பு புளி பத்தி கேட்டா நியாயமா... தித்திப்பா இருக்கு கண்ணு... =))

கயல் said...

//
பழமைபேசி said...
ம்ம்...பல திறமைகளும் இப்பதான் வருது.... சபாசு!
//
நன்றி ஆசானே! மொழிக்கலப்பு இருக்கே நீங்க ஏதாச்சும் சொல்லுவீங்களேன்னு பயந்த்திட்டிருந்தேன்! நீங்களே சபாசுன்னு சொல்லிட்டீங்களா எனக்கு தலைகால் புரியல!

கயல் said...

//
கலகலப்ரியா said...
ஜில்லுன்னு இருக்கு கயல்... =)).. உப்பில்ல... புளி இல்ல... காரமும் இல்ல... பாயாசம் கொடுத்துட்டு உப்பு புளி பத்தி கேட்டா நியாயமா... தித்திப்பா இருக்கு கண்ணு... =))
//
வாங்க பிரியா! பாயாசமுன்னா சொல்லுறீக! சந்தோசமா இருக்குப்பா! ஆதரவுக்கு நன்றி!

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சூப்பர்

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப பிடிச்சுருக்கு கயலு...

கதாசிரியர் ஆயிட்டீங்க வாழ்த்துகள்!

கயல் said...

//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
சூப்பர்
//
ந‌ன்றிங்க‌! முத‌ல் முத‌லா வ‌ந்திருகீங்க‌! அடிக்க‌டி வாங்க‌!

கயல் said...

//
பிரியமுடன்...வசந்த் said...
ரொம்ப பிடிச்சுருக்கு கயலு...

கதாசிரியர் ஆயிட்டீங்க வாழ்த்துகள்!
//
நன்றி வசந்த்!

நாமக்கல் சிபி said...

கடைசி வரைக்கும் சொல்லாம இருப்பானோன்னு டென்ஷன் பண்ணிட்டீங்க!

கயல் said...

//
நாமக்கல் சிபி said...
கடைசி வரைக்கும் சொல்லாம இருப்பானோன்னு டென்ஷன் பண்ணிட்டீங்க!

//
ஆகா! நம்ம கதைக்குள்ளேயும் ஏதோ இருக்குப்பா!நம்ம சிபி சாரே சொல்லுறாரே! நன்றி சிபி, முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!