Tuesday, April 21, 2009

படித்ததில் பிடித்தது

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

-----காசி ஆன‌ந்த‌ன்


14 comments:

Sasirekha Ramachandran said...

eppodhumpol ippavum kalakkitteenga...but thooya tamil ini nam navil varuvadhu kadinamdhan!!!:(

கயல் said...
This comment has been removed by the author.
கயல் said...

நறுக்கென தைக்கும் வார்த்தைகள் தானே காசி ஆனந்தனின் கவிதைகளின் அடையாளம்!அவரைப் பற்றி மேலும் மேலும் அறிய தூண்டிய இந்த வரிகள் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு வழிகாட்டியாய்....படித்ததில் பிடித்த இந்த வரிகள் உங்களின் பார்வைக்கும்!! பேச்சுத் தமிழ் சுத்தமாய் இல்லாது போனாலும் எழுத்துத் தமிழாவது.... முயல்வோமாக!

கயல் said...

//
Sasirekha Ramachandran said...
eppodhumpol ippavum kalakkitteenga...but thooya tamil ini nam navil varuvadhu kadinamdhan!!!:(
//
வாங்க சகோதரி! வருகைக்கு நன்றி!!

vasu balaji said...

நல்ல தேர்வு. நன்றிங்க கயல்.

கயல் said...

//
பாலா... said...
நல்ல தேர்வு. நன்றிங்க கயல்.
//
வாங்க பாலா! நன்றி!!!

கலகலப்ரியா said...

"தந்தையை டாடி என்றழைத்தாய்.. தமிழை டமிலில் குலைத்தாய்" ஹாஹா.. ச்சும்மா.. எங்கயோ எப்பவோ.. பீச்செங்கிறார்கள் கடற்கரையை என்று யாரோ இப்படிப் புலம்பியது படித்த ஞாபகம்..
துரதிஷ்டவசமாக.. நானும் ஒரு குற்றவாளி இங்கு.. :(.. கவிதை வழக்கம் போல கலக்கல்..!

கலகலப்ரியா said...

அதாவது தேர்வு கலக்கல்.. =)

பழமைபேசி said...

இயக்கம்: உணர்ர்சிக் கவி
பாடியது: தேனிசைச் செல்லப்பா

இஃகிஃகி!

கயல் said...
This comment has been removed by the author.
கயல் said...

//
பழமைபேசி said...
இயக்கம்: உணர்ர்சிக் கவி
பாடியது: தேனிசைச் செல்லப்பா

இஃகிஃகி!
//

ம்ம்! மேலதிக தகவல்!!! நன்றி!!!

Tamilar said...

ஹைக்கூ என்பதை தமிழில் எழுதுங்குளேன்

सुREஷ் कुMAர் said...

நீங்க போட்டி தட்டுறது எந்த மொழியில..?

கயல் said...

//
Tamilar said...
ஹைக்கூ என்பதை தமிழில் எழுதுங்குளேன்
//
ஹை! 'ஆப்பிள்' பழம் தமிழ்ல சொல்லுங்க பாக்கலாம்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!