அந்தி சாயும் நேரங்களில்
அமைதியான வீதிகளில்
அவனுடன் அருகாமையில்
அன்பாய் அளவளாவி
அமைதியாய் ஆரவாரமின்றி
நடத்தல் பிடிக்குமெனக்கு!
இருள் கவிழும் நேரத்தில்
மகிழ்வாய் சிரித்துப் பேசி -என்
உளரல்களை எல்லாம் கேலி செய்தும்
உரையாடலை உன்னிப்பாய்
கவனிப்பதான உன் பாவனை -பொய்யென
சொல்லும் உன் காந்த கண்கள்
புரிந்தும் புரியாமலும் நடிக்கும்
என் கண்கள் ஒரு தேர்ந்த
நடிகையைப் போல்...
நின் தோள்களிரண்டும்
எனக்கெனவே தவங்கிடப்பதாய்...
சாய்ந்து கொள்ள சம்மதிப்பாயென்று
பார்வையை பரவ விடுகிறேன்
கண்கள் பரிதவிப்பினும்
வார்த்தைகள் மறுத்தனுப்புகின்றது
பலமுறை உன்னை நான்
சீண்டிப் பார்த்ததுண்டு
பொழுது போக்கிற்காய் அல்ல - நீ
பாறை என்பதில் நான் கொண்ட
கர்வம் பலம் பெறுவதற்காய்..
என் கால்கள் உன் வழி
தொடரும் நிபந்தனையின்றி...
மனம் இடைவெளியை
நிரப்பி விட துடித்திடினும் -என் பெண்மை
நாணமுறுக்கேறி முடங்கி கொள்ளும்
இடறி விழுகையில் தாங்கி கொள்கிறாய்
'இறுதிவரை இப்படியே இருப்பாயா?'
வார்த்தைகளின் ஜனனம் ஓசையின்றி
வெளிவராமலே மடிந்து போகும்
'உன்னைப் போல் பிறரை நேசி'
இயேசுவின் வாக்கு...
என்னிலும் மேலாய் உன்னை
பார்ப்பதாலோ என்னவோ
புரியவைக்க ஏனோ தோன்றவில்லை
இன்று வரை
விடியலுக்கு பின்னே
விலகிப் போகும்
இமைகளின் பிரிவில்
எஞ்சி நிற்கும் உன்பிம்பம்
அங்கொன்றும் இங்கொன்றுமாக....
நிசமாய் நீயருகில்லை என்பது
கண்ணீர் பெருக்க
பிரிவு நிரந்தரமில்லையென்று
நெஞ்சம் உரைக்க
தீர்ப்பாய் கண்ணீர் பிரவாகம்
வார்த்தைகளில் சொன்னதில்லை
வரிகளாய் வடிக்கிறேன்
என் நெஞ்சக் கடலில் - நீ
என்றோ பலமாய்
நங்கூரம் பாய்ச்சி.....
3 comments:
//அந்தி சாயும் நேரங்களில்
அமைதியான வீதிகளில்
அவனுடன் அருகாமையில்
அன்பாய் அளவளாவி
அமைதியாய் ஆரவாரமின்றி
நடத்தல் பிடிக்குமெனக்கு!//
நச்சுனு வரிகள் பேசுகின்றது..
//
ஆ.ஞானசேகரன் said...
//அந்தி சாயும் நேரங்களில்
அமைதியான வீதிகளில்
அவனுடன் அருகாமையில்
அன்பாய் அளவளாவி
அமைதியாய் ஆரவாரமின்றி
நடத்தல் பிடிக்குமெனக்கு!//
நச்சுனு வரிகள் பேசுகின்றது..
//
நன்றி நண்பரே!
Post a Comment