Sunday, April 12, 2009

மழை நாட்கள்

அன்று அதிகாலை முத‌லே
அந்திக் க‌ருக்க‌லாய் அடிவான‌ம்
அள‌வில்லா ஆன‌ந்த‌த்தோடு
ஆசையாய் ம‌ழைநாளை
அனுப‌விக்க‌ தயாரானேன்!

அள்ள அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம் - அதீத அழகில்
மிளிரும் மழை குறித்த‌ நினைவுகள்!
அதுவும் கோடையில் மழையெனில்
இன்னும் கொண்டாட்டம் குதூகலம்!

ஆராயும் மனப்பான்மையா?
அனுபவிக்கும் பேராவலா?
எப்படியோ தெரியாது
மழையோடான எனது சந்திப்புகள்
எல்லாமே இடம்பிடித்துவிடும்
மறக்கமுடியாத மகிழ்வான விசயங்களாய்!
உயிர்ப்பான அந்த கணங்களை
உயிரோவியமாய் உருவாக்கிவிடுவதென
எப்போதும் போல் இப்போதும் உறுதியெடுத்தேன்!

இதமான குளிருக்கு ப‌த‌மாய்,
மிதமான‌ சூட்டில் ஒரு கோப்பை தேநீர்
கூடவே கொறிக்க அவித்த வேர்க்கடலை!
நடமாட்டம் இல்லாத என்
வீட்டு மேல் மாடிச் சாளரம்
உற்ற களமென உறுதியாயிற்று!

க‌ம்ப‌ளியின் க‌த‌க‌த‌ப்பிலும் என்
க‌னிவான‌ வ‌ருட‌லிலும்
வசதியாய் ம‌டியிலுற‌ங்கும் என்
செல்ல‌ நாய்க் குட்டி!

ம‌ழையின் தாண்ட‌வ‌த்தினை
அப்படியே படியெடுக்க
காகித‌ கோப்புகளின் மேலே
முத்த‌மிட‌ காத்திருக்கும் என்
எழுத்தாணி!

அவளின்
ஆனந்த நர்த்தனத்தை
உள்ள‌ப‌டி ப‌ட‌ம் பிடிக்க
ஏதுவாய் இன்ன‌ பிற!

இடிமுழக்கம் மின்னல் ஒளிவெட்டென
நிகழ்ச்சி நயமாய் தொடங்கியது!

சின்ன‌தும் பெரிய‌துமான ம‌‌ழைத்துளிகள்
ஒன்றோடொன்று போட்டியிட்டு பூமி தொட‌
என‌னைப் போலே தாக‌ம் கொண்ட‌
ம‌ண்ம‌க‌ளும் மனம் நிறைந்த‌ உற்சாக‌த்தில்....

ம‌ண்ணைத் தொட்டு விடவேண்டுமென
சீரான‌ வேக‌த்தில் மின்ன‌லோடு
சீறி வ‌ந்த‌ மழை ம‌க‌ளும்
செல்ல‌மாய் ச‌ண்டையிட,
இன்ன‌தென்று தெரியாத‌ புதுவித
மயக்கத்தில் நானிருந்தேன்!
வழக்கமான
போட்டிதானென்றாலும்
என்றைக்கும் அலுக்காத காட்சியெனக்கு!

மின்னலின்
வெற்றியை இடியரசன்
சத்தமாய் முழக்கமிட
தோற்றுவிட்ட காரணத்தால்
மழைமக‌ளோ கோப‌த்தில் துவண்டு விழ ‌
வாரியணைத்து உள்ளிளுக்கும் மண்மகளின்
வாஞ்சையிலோ வாடாத தாய்மனசு!

அள‌வான‌ அதிர்வுக‌ளில்
அழ‌கான‌ சுருதியோடு
ஜ‌தி பிறழாம‌ல் ச‌திராடி
மெல்ல மெல்ல உச்சம் பெறும்
அவ‌ளின் ஆட்ட‌த்தில் என்
ஐம்புல‌னும் ஐக்கிய‌‌மாகிப் போகும்!
அடித்து ஓய்ந்து
'அப்பாடா' என்றவள் அடங்குகையில்
'அய்யோ' என்று நினைவு வரும்
எப்போதும் இப்ப‌டித் தான்
ஆயிர‌முறை அழகாய் ஆய‌த்த‌ம் செய்தாலும்
ஆட‌ல‌ர‌சி அபிந‌ய‌த்தில் அத்த‌னையும் மற‌ந்துவிடும்!
எத்த‌னை தான் முயன்றாலும்
கட்டி வைக்க முடிவ‌தில்லை
வ‌ஞ்சிய‌வ‌ள் வாச‌னைக்கு
வ‌ச‌மிழ‌க்கும் என் ம‌ன‌தை!
அத்த‌னையும் க‌ட்ட‌விழ்ந்து
க‌ன‌வ‌ல்ல‌ நிச‌மென‌ புரிகையிலோ
எல்லாமும் முடிந்திருக்கும்
எப்ப‌டி நான் ப‌திவு செய்ய‌?
அந்த‌ உயிர்ப்பான த‌ருண‌ங்க‌ளை!



26 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Anonymous said...

arumaiyana varigal.adhilum kurippaaga

//மின்னலின் வெற்றியை இடியரசன்
சத்தமாய் முழக்கமிட
தோற்றுவிட்ட காரணத்தால்
மழைமக‌ளோ கோப‌த்தில் துவண்டு விழ ‌
வாரியணைத்து உள்ளிளுக்கும் மண்மகளின்
வாஞ்சையிலோ வாடாத தாய்மனசு!//

migavum alagana varigal vaarthaigal!!!arumai!!!!

Unknown said...

நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
மரபு,புது ரெண்டு ஜாடையும் அடிக்குது.
Is it plus or minus?

இன்னும் கூட சுருக்கலாம். கவித்துவம் கொஞ்சம் கொண்டு வரலாம்.

நான் எழுதியது:

வானவில் சாட்சியாய்..........

மழை பெய்யும் தருணங்களில்
நீ என் நினைவுகளோடும்
நான் உன் நினைவுகளோடும்
இருந்ததற்கு சாட்சியாய்
தொலை தூரத்தில் வானவில்
எப்பொழுதும் இருபபதில்லை


குடைக்குள் மழை -2

மழைக்கு குடை பிடிக்க
படித்துக் கொணட நான்
இன்னும் படித்துக் கொள்ளவில்லை.
மேல் நோக்கி தோகை விரித்து
குடைக்கு(ள்) மழை பிடித்தாள்
மகள் நித்யகல்யாணி
மழைக்கு குடை பிடிக்க
பிடிக்காமல்.....

Sasirekha Ramachandran said...

ottu pottachu!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

வழக்கம் போல நல்லா இருக்கு கயல்.. அது என்ன தமிழ் மணத்திற்கு அனுப்பறதோட சரியா.. உங்க ஓட்டு அங்க போடுங்கோ.. இதெல்லாம் நாலு பேருக்கு போய் சேரணும்.. :)

கலகலப்ரியா said...

நிறைய தவற விடுறேன்.. இப்போல்லாம் ஈழத்தில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று மனசு அத சுத்தி சுத்தியே வருது.. பின்னூட்டம் எழுதுறதுக்கு கூட முடியல.. ஆனா தவறாம ஓட்டு போட முயற்சிக்கிறேன்.. :(

வல்லிசிம்ஹன் said...

வெகு அழகான கவிதை வரிகள்.
ஒரு முழு மழையும் பார்த்த உணர்சு.
மிக்கவும் ரசித்தேன்.

கயல் said...

//sasipartha said...
arumaiyana varigal.adhilum kurippaaga
.
.
//
உங்கள் ரசனைக்கு நன்றி!
வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி!!

//
கே.ரவிஷங்கர் said...
நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.
மரபு,புது ரெண்டு ஜாடையும் அடிக்குது.
Is it plus or minus?
//

தெரிய‌லேயேப்பா!!!!
வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி!!

//
Sasirekha Ramachandran said...
ottu pottachu!!
//
ரொம்ப ந‌ன்றிங்க‌!

//

T.V.Radhakrishnan said...
நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்
//
ரொம்ப ந‌ன்றிங்க‌! வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி!!

கயல் said...

//
கலகலப்ரியா said...
வழக்கம் போல நல்லா இருக்கு கயல்.. அது என்ன தமிழ் மணத்திற்கு அனுப்பறதோட சரியா.. உங்க ஓட்டு அங்க போடுங்கோ.. இதெல்லாம் நாலு பேருக்கு போய் சேரணும்.. :)
//

வாங்க‌ பிரியா! ஏதோ கிறுக்கிடுறேன்! ம‌ன்னிச்சு இதோட‌ விட்டுட்டாங்க‌! ரொம்ப‌ அவுங்க‌ பொறுமையை சோதிக்க‌க் கூடாது! அதான்.... என் க‌ட‌ன் தமிழை கையாளப் ப‌ழ‌குவ‌தேன்னு இருந்துட‌ வேண்டிய‌து தான்!
ந‌ன்றி!

கயல் said...

//
வல்லிசிம்ஹன் said...
வெகு அழகான கவிதை வரிகள்.
ஒரு முழு மழையும் பார்த்த உணர்சு.
மிக்கவும் ரசித்தேன்.
//

அடிக்க‌டி வாங்க‌! ந‌ன்றி!

பழமைபேசி said...

சிந்தனைத் துளிகள் துளிர்த்திடக் கண்டோம்!
தமிழ்மழை பொழிலாய் பொழியக் கண்டோம்!!
அதன் பலனை நுகர்ந்து மகிழ்ந்து கொண்டோம்!!!

வாழ்த்துகளும், நன்றியும் கவிஞரே!

கயல் said...

//
பழமைபேசி said...
சிந்தனைத் துளிகள் துளிர்த்திடக் கண்டோம்!
தமிழ்மழை பொழிலாய் பொழியக் கண்டோம்!!
அதன் பலனை நுகர்ந்து மகிழ்ந்து கொண்டோம்!!!

வாழ்த்துகளும், நன்றியும் கவிஞரே!
//
நன்றி பாவ‌ல‌ரே!வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும்!!

பழமைபேசி said...

//நன்றி பாவ‌ல‌ரே!வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும்!!//

ஐயோ, தனி இடுகை போட்டு கண்டிச்சும் திருந்தலையா நீங்க?!

கயல் said...

//
பழமைபேசி said...
//நன்றி பாவ‌ல‌ரே!வ‌ருகைக்கும் வாழ்த்துக்கும்!!//

ஐயோ, தனி இடுகை போட்டு கண்டிச்சும் திருந்தலையா நீங்க?!
//
ஒரு பெரிய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்த‌ 'பாவ‌லர்'ன்னு ஒரு வார்த்தையில‌ சொல்லிச் சுருக்கிட‌ கூடாதேன்னு தான் ப‌திவ‌ நீக்கினேன்!இதுவரைக்கும் க‌வியே மொழியாத‌ ஒருத்த‌ர‌ க‌விஞ‌ர்ன்னு சொல்லி சிலேடையில திணறடிச்சிட்டீங்க! குழ‌ந்தை திக்கித்திக்கி பேசுற‌த‌ கேட்க‌ நல்லாயிருக்கும். பாராட்டுத‌லும் புக‌ழுரையும் ந‌ல்லாத்தானிருக்கும் அதுக்கு! ம‌ழ‌லையிலே இல‌க்க‌ண‌ம் தேடுவ‌தும், திணற‌லுக்கு ம‌குட‌ம் சூட்டுவ‌தும் 'குருவியின் த‌லையில் ப‌ன‌ங்காய்' போன்ற‌தான செய‌லேய‌ன்றி வேறொன்றாகாது என்ப‌து இந்த‌ க‌த்துக்குட்டியின் ப‌ரித‌விப்பு! ஒரு த‌மிழ் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌மே ப‌ட்ட‌த்தை ம‌றுத்துரைக்கும் போது அடியாள் எப்ப‌டி ஏற்ப‌து இதை? நான் இன்னும் த‌மிழ் க‌த்துக்க‌வேயில்ல‌ ஆசானே!அதுக்குள்ளே இவ்வ‌ள‌வு பெரிய‌ அங்கீகாரம்(!) குடுத்தா எப்ப‌டி? நீங்க‌ என்ன‌
க‌விஞ‌ர்ன்னு சொல்லாதீங்க‌, நானும் பாவ‌ல‌ர்ன்னு சொல்ல‌ல‌! என்ன டீல் சரிதானே!

குறிப்பு:‍‍

எதுனாலும் பேசி தீத்துக்குவோம்! த‌னி இடுகையில்லாம் வேணாம் ஆமா சொல்லிப்புட்டேன்!

லதானந்த் said...

கவிதை நன்றாக இருக்கிறது.
ஏற்கனவே இதே பெயரில் சிலர் எழுதுகிறார்கள்.
நீங்கள் வேறு பெயரில் எழுதலாமே - குழப்பத்தைத் தவிர்க்க.

கயல் said...

//
லதானந்த் said...
கவிதை நன்றாக இருக்கிறது.
ஏற்கனவே இதே பெயரில் சிலர் எழுதுகிறார்கள்.
நீங்கள் வேறு பெயரில் எழுதலாமே - குழப்பத்தைத் தவிர்க்க.
//
வாங்க! நன்றி!

vasu balaji said...

மழையுணர்ந்தேன். வாழ்த்துக்கள்

கயல் said...

வாங்க 'நறுக்குக்கவி' பாலா அவர்களே!வருகைக்கு மிக்க நன்றி!!

லதானந்த் said...

வரவேற்பு நன்றியெல்லாம் சரிதான். பெயர் மாற்றம் தொடர்பான வேண்டுகோளுக்கு என்ன பதில்?
லதானந்த்

கயல் said...

//
லதானந்த் said...
வரவேற்பு நன்றியெல்லாம் சரிதான். பெயர் மாற்றம் தொடர்பான வேண்டுகோளுக்கு என்ன பதில்?
லதானந்த்
//
வாங்க லதானந்த்! சொந்தப் பேரு அதான்... இருங்க யோசிச்சு சொல்லுறேன்!!

சென்ஷி said...

:-))

நல்லாருக்குது

கயல் said...

//
சென்ஷி said...
:-))

நல்லாருக்குது
//
ரொம்ப நன்றிங்கோ! அடிக்கடி வாங்க! என் கிறுக்கல்களை கிண்டலடிச்சிட்டு போங்க!

நட்புடன் ஜமால் said...

\\அந்திக் க‌ருக்க‌லாய் அடிவான‌ம்\\

அருமையான வார்த்தை

சற்றே அவ்விடத்தில் நிறுத்தி பார்க்க இயலுகிறது

கயல் said...

//நட்புடன் ஜமால் said...
\\அந்திக் க‌ருக்க‌லாய் அடிவான‌ம்\\

அருமையான வார்த்தை

சற்றே அவ்விடத்தில் நிறுத்தி பார்க்க இயலுகிறது
//
வாங்க ஜமால்! நன்றி!!

நாமக்கல் சிபி said...

அழகான மழை நாள்! அருமை!

ஒரு கையில் காப்பி கோப்பை! மறு கையில் கொறிக்க அவித்த வேர்க்கடலை! மடியில் செல்ல நாய்க்குட்டி! எப்படி மாடி ஏறினீர்கள் மேடம்?>

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!