Friday, April 10, 2009

பூங்கொத்து







விடியல்நாளையென்ப‌து விடியுமென்ற‌
ந‌ம்பிக்கையில் இருளின்
ஊர்வ‌ல‌ம் இர‌வுக‌ளில்!


தோற்றப்பிழைஎட்டிக் குதித்து எம்பி பிடித்து
எப்ப‌டியோ தொட்டுவிட்ட‌து பூமி
தொடுவான‌ம்!


நிழல்
த‌னிமையிலும் கூட
தொட்டுத் தொடரும்
இன்னொரு தொல்லை!


ஓவிய‌ம்
வெண்ணிற‌ தாளில்
தூரிகை முத்தம்
அழகான அடையாள‌ம்!


காத‌ல் தீவிர‌வாதி
சாம பேத‌ தான‌ த‌ண்ட‌ம்
ம்ம்ஹீம்! காத‌லியை இருதுளி
க‌ண்ணீர் விட‌ச் சொல்லுங்க‌ள் போதும்!


சேகுவாரா'அட‌ச்சே' அல‌ட்சிய‌ம் இன்றி
அடடே! 'சே' என்கிற‌து நாக்கு - அவன்

பெய‌ரை மொழியும் க‌ர்வ‌த்தில்!


குறிப்பு :-
ஏதோ என‌க்கு தெரிஞ்ச‌ வித‌த்துல‌ கிறுக்கியிருக்கேன்! வ‌ழ‌க்க‌ம் போல‌வே இப்ப‌வும் ம‌ன்னிச்சிடுங்க‌! ஏன்னா இந்த‌ கிறுக்க‌ல் எந்த‌ வித‌ம்னு தெரியாத‌ குழ‌ப்ப‌த்துல‌யே இடுகை போட்டாச்சு! ஆனா வெவ‌ர‌மா க‌விதை , ஹைக்கூ ரெண்டுல‌யும் சேர்த்துட்டேன்! :-‍)
அர‌சிய‌ல்ல‌ இதெல்லாம் ச‌க‌ஜ‌ம்பா!

20 comments:

பழமைபேசி said...

Irul vs Iravu: Good One!

*இயற்கை ராஜி* said...

nalla irukku..yellame:-)

கயல் said...

//
பழமைபேசி said...
Irul vs Iravu: Good One!
//

வாங்க‌ ப‌ழ‌மைபேசி! ந‌ன்றி!

கயல் said...

//
இய‌ற்கை said...
nalla irukku..yellame:-)
//

மிக்க ந‌ன்றிங்க‌!

ஆ.சுதா said...

நிழல்
த‌னிமையிலும் கூட
தொட்டுத் தொடரும்
இன்னொரு தொல்லை!

இது நல்லாயிருக்கு

பழமைபேசி said...

கயல்,

நான் விமானப் பயணத்தில இருந்தேன்...அதான் விபரமா மறுமொழி இட முடியலை.

அதை விடுங்க, ”Haiku”னா என்ன?
5, 7, 5ல அசை வர்ற ஈரடிப்பயனறு கவிதை! பெயர்ச்சொல்ங்ற வகையில, ”கைக்கூ”ன்னு சொல்லலாம். தமிழ்ப்படுத்துறதானா, ஈரடிப்பயனறு குறுங்கவிதை.

இடுக்கை இடுகையாக்கிடுங்களேன்... இஃகிஃகி... ஒரு லொள்ளுதான்!

KarthigaVasudevan said...

//தோற்றப்பிழை

எட்டிக் குதித்து எம்பி பிடித்து
எப்ப‌டியோ தொட்டுவிட்ட‌து பூமி
தொடுவான‌ம்! //


இது நல்லா இருக்கு.

கயல் said...

//
ஆ.முத்துராமலிங்கம் said...
நிழல்
த‌னிமையிலும் கூட
தொட்டுத் தொடரும்
இன்னொரு தொல்லை!

இது நல்லாயிருக்கு
//

ந‌ன்றிங்க‌!

கயல் said...

வாங்க பழமைபேசி!
ஹைக்கூ = ஈரடிப்பயனறு குறுங்கவிதை.ம்ம்! புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்!
ஆகா!அருமையான விளக்கம்.
நன்றி!

கயல் said...

//

மிஸஸ்.தேவ் said...
//தோற்றப்பிழை

எட்டிக் குதித்து எம்பி பிடித்து
எப்ப‌டியோ தொட்டுவிட்ட‌து பூமி
தொடுவான‌ம்! //


இது நல்லா இருக்கு.

//
வாங்க மிஸஸ்.தேவ் ! நன்றி!

Unknown said...

உங்கள் definition கவிதைகள் நல்லா இருக்கு.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

கலகலப்ரியா said...

இங்கயும் ஓட்டு போட்டாச்சு... ஹிஹி

கலகலப்ரியா said...

நிறைய தவற விடுறேன்.. இப்போல்லாம் ஈழத்தில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று மனசு அத சுத்தி சுத்தியே வருது.. பின்னூட்டம் எழுதுறதுக்கு கூட முடியல.. ஆனா தவறாம ஓட்டு போட முயற்சிக்கிறேன்.. :(

கயல் said...

//
Artan said...
Kayal, you are doing a wonderful job, everyday i keep seeing new new kavithai's, good job and continue to do the same.
//
ந‌ன்றிங்க‌!

கயல் said...

//கலகலப்ரியா said...
நிறைய தவற விடுறேன்.. இப்போல்லாம் ஈழத்தில் எந்த நொடி என்ன நடக்குமோ என்று மனசு அத சுத்தி சுத்தியே வருது.. பின்னூட்டம் எழுதுறதுக்கு கூட முடியல.. ஆனா தவறாம ஓட்டு போட முயற்சிக்கிறேன்.. :(
//

ந‌ன்றிங்க‌!
என்ன‌ செய்யுற‌து சொல்லுங்க‌! இங்க‌ ம‌வுனியாவே வாழ்ந்து ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌வ‌ங்க‌ சில‌ பேர், ஆதாய‌த்துக்காக‌ ப‌ழ‌கிக்கொண்ட‌வுங்க‌ சில‌ பேர்!! இது ரெண்டுமா வாழுற‌வுங்க‌ ம‌ட்டுமே உய‌ர் ப‌தவிக‌ள்ல‌! மொத்த‌ இன‌த்தோட‌ பிர‌திநிதியா இவுங்க‌ளே முன்மொழியுறாங்க‌! இதுல‌ பாம‌ர‌ன் ச‌த்த‌ம் எப்ப‌டி கேட்கும்?

manjoorraja said...

//காத‌ல் தீவிர‌வாதி
சாம பேத‌ தான‌ த‌ண்ட‌ம்
ம்ம்ஹீம்! காத‌லியை இருதுளி
க‌ண்ணீர் விட‌ச் சொல்லுங்க‌ள் போதும்!//

நல்லா இருக்கு

கயல் said...

//
மஞ்சூர் ராசா said...
//காத‌ல் தீவிர‌வாதி
சாம பேத‌ தான‌ த‌ண்ட‌ம்
ம்ம்ஹீம்! காத‌லியை இருதுளி
க‌ண்ணீர் விட‌ச் சொல்லுங்க‌ள் போதும்!//
//
நல்லா இருக்கு

வாங்க! நன்றி!

vasu balaji said...

எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

கயல் said...

//
பாலா... said...
எல்லாமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

//
நன்றிங்க!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!