Tuesday, April 7, 2009

ஞாபகமாய்..














ஒன்றோடொன்று உரசி
உராய்ந்து ஓசையிடும்
கண்ணாடி வளை சுமந்த கரங்கள்
இத்துடன் முடிவதில்லையெனும்
அறிவிப்போடு நீண்டு தொடரும்
உள்ளங்கைகளில்
மருதாணி ஓவியம்
மகுடமாய் வர்ணம்
பூசிய நகங்கள்

முக‌ம் பார்த்த‌லைக் காட்டிலும்
கை பார்க்கும் இய‌ல்பாய் என் க‌ண்க‌ள்
க‌ண்ணாடியில்

சில்லறைக்காக கை நீட்டுகையில்
நடத்துனரின் பார்வை ....
தோழிகளின் பிரம்மித்த பாராட்டில்
சொல்லொணா ஆனந்தம்
வழக்கத்துக்கு மாறாய்
கைகளின் உபயோகம் கொஞ்சம்
அதிகமாய் உரையாடலில்....
கர்வமாய் த‌லையை
சிலுப்பிக் கொள்ளும் மனம்
'அலட்டல்' என்று குற்றஞ்சாட்டும்
அனைவருக்கும் பதிலாய்
சிறு புன்ன‌கை மட்டும்

எப்ப‌டி தெரியும் அவர்க‌ளுக்கு?
நன்றி சொல்லி பிரிகையில்
அவனின் கைரேகை பதிந்த
என் கரங்களை இப்படி
கவுரவிக்கிறேனென்று
எப்ப‌டி புரிய வைப்பேன் அவர்க‌ளுக்கு?

10 comments:

பழமைபேசி said...

இயல்பான நடை!
தொய்வுக்குத் தடை!!

எழுத்து நடையில், கவி நடை போடுவதினால்,
கடை வரியில் வர வேண்டியது ‘வைப்பது’!!!

ஆ.சுதா said...

நன்றாக உள்ளது

ச.பிரேம்குமார் said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள்

கயல் said...

//
பழமைபேசி said...
இயல்பான நடை!
தொய்வுக்குத் தடை!!

எழுத்து நடையில், கவி நடை போடுவதினால்,
கடை வரியில் வர வேண்டியது ‘வைப்பது’!!!

//
ம்ம்!! அப்படியும் இருந்திருக்கலாம்! வருகைக்கு நன்றி!!

கயல் said...

//
ஆ.முத்துராமலிங்கம் said...
நன்றாக உள்ளது
//

நன்றிங்க!

கயல் said...

//
பிரேம்குமார் said...
நல்ல முயற்சி. வாழ்த்துகள்
//
நன்றிங்க!

M.Rishan Shareef said...

அழகான கவிதை !

கயல் said...

//

எம்.ரிஷான் ஷெரீப் said...
அழகான கவிதை !
//
வருகைக்கு நன்றி!!

புதியவன் said...

தெளிந்த நீரோடை போல் அழகிய கவிதை...

கயல் said...

வாங்க புதியவன்! ந‌ன்றி!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!