Thursday, April 2, 2009

என் கிராமத்து கனவு

அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அபுபக்கருக்கு!


குறைந்த‌ப‌ட்ச‌ம்,
அய்யர் வீட்டில்
அவ‌ருக்கு ச‌ம‌மாய்
அம்மாவாசை
சாப்பாடு
அந்த‌ ஊர் த‌லித்துக்கு!

12 comments:

Anonymous said...

என்ன‌ சொல்ல வ‌ரீங்க‌ !
அபு ப‌க்க‌ரும் அந்த‌ த‌லீத்தும் அய்ய‌ர் வீட்டுல‌ சாப்பிட‌ த‌வ‌ங்கெட‌க்குறாங்க‌ன்னா?
அது யாரோட‌ க‌ன‌வு?

கயல் said...

//
Anonymous said...
என்ன‌ சொல்ல வ‌ரீங்க‌ !
அபு ப‌க்க‌ரும் அந்த‌ த‌லீத்தும் அய்ய‌ர் வீட்டுல‌ சாப்பிட‌ த‌வ‌ங்கெட‌க்குறாங்க‌ன்னா?
அது யாரோட‌ க‌ன‌வு?
//

இது என்னோட கனவு!

அய்யர் வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்குறாங்க என்று அர்த்தமில்லை! மதமும் சாதியும் இல்லாத சமுதாயம் எனது கனவு! இது எத்தனை கிராமங்கள்ல சாத்தியம்! சரி, மதத்தை தாண்டி, ஒரு மனிதனை தனக்கு நிகராக, தன் குடும்பத்தில் ஒருத்தனாக பார்ப்பது உடனே நடப்பது சாத்தியமில்லை!
வேதங்கள் படித்ததால் தன்னை பெரிதாக எண்ணிக் கொள்ளும் ஒருவன்,ஆச்சாரங்கள் கடந்து,தனக்கு நிகராக,தன்னுடைய மததிலுள்ளவனை (பெரும்பான்மை தலீத்துக்கள் இந்து மதம் என்பதை மறுக்க மாட்டீகள் என நினைக்கிறேன்) கூட பார்க்க முடியாத எத்தனையோ கோடி பேர் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நகரங்களைக் காட்டிலும் கிராமங்கள் இன்னும் மோசம். சான்றாக என்னால் நிறைய சொல்ல முடியும்! மதமும் சாதியும் இல்லாத, ஆதிக்க உணர்வு இல்லாத சமுதாயம் எனது கனவு! வெளிப்பாடே இந்த கவிதை!

கனவு தானே சார்! சினிமாவுல கூட ஒட்டாத கனவு காட்சிக்கு அத்தன ஆதரவு தர்றீங்க ! ஆனா சமுதாயம் பற்றின என்னோட நல்ல கனவுக்குப் போய்....

அடுத்தமுறை பெயரோடு விமர்சனம் பண்ணுங்க!

வருகைக்கு நன்றி!

தென்னவன். said...

நல்ல சமளிபிகேஷன்.....

தென்னவன். said...

/* நல்ல சமளிபிகேஷன்..... */

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கால ஒடச்சது யாரு..........

(சமாளிபிகேஷனுக்கு ஒரு சமாளிபிகேஷனுக்கு)

கயல் said...

//
தென்னவன். said...
நல்ல சமளிபிகேஷன்.....

//
அது ச‌மாளிபிகேச‌ன் தானே! த‌மிழ் கொலை தான் ப‌ண்ணுறீங்க‌! ஏங்க‌ அதுல‌யும் துடிக்க‌த் துடிக்க‌ கொல்லுறீங்க‌... ஒரேய‌டியாவே!! பாத்து சொல்லுங்க‌ சாமி!

பழமைபேசி said...

கயல் நீந்துகையில்
உச்சப் பாய்ச்சலுங்
கண்டேன்! அதன்
உள்ளொடு நிதர்சனமும்
அறிந்தேன்!!

கயல் said...

//
கயல் நீந்துகையில்
உச்சப் பாய்ச்சலுங்
கண்டேன்! அதன்
உள்ளொடு நிதர்சனமும்
அறிந்தேன்!!
//

நன்றி பழமைபேசி!

வார்த்தையில் நிதானம் அனுபவத்தால வருமுன்னு சொல்லுவாங்க! வலையுலக அனுபவம் ரொம்ப குறைச்சல் இல்லையா அதான் இப்படி! அடுத்தமுறை இன்னொரு நல்ல படைப்போட,விமர்சனத்த எதிர்கொள்ளும் நிதானத்தோட‌ வர்ரேனுங்க!

பழமைபேசி said...

அனாமதேய மறுமொழிகளை மட்டுறுத்துற ஆக்கினையை தெரிவு செய்து விட்டாக்க, அனாமதேய அன்பர்கள் பின்னூட்டம் போட இயலாது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
veeraa said...

ஜாதியையும்,ம‌த‌ங்க‌ளையும் ஒழிக்க‌ புற‌ப்ப‌ட்டிருக்கும் புதுயுக‌ பெண்ணே! உங்க‌ள் ம‌ன‌தின் எண்ண‌ங்க‌ள் நிறைவேறும் நாட்க‌ள் வெகு தொலைவில்லை. தொட‌ர்ந்து எழுத‌ வாழ்த்துகிறேன்.

veeraa said...

ஜாதியையும்,ம‌த‌ங்க‌ளையும் ஒழிக்க‌ புற‌ப்ப‌ட்டிருக்கும் புதுயுக‌ பெண்ணே! உங்க‌ள் ம‌ன‌தின் எண்ண‌ங்க‌ள் நிறைவேறும் நாட்க‌ள் வெகு தொலைவில்லை. தொட‌ர்ந்து எழுத‌ வாழ்த்துகிறேன்.

கயல் said...

வருகைக்கு நன்றி வீரா!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!