காதலாய் நோக்கினான்
குளமாய் கண்ணீர்!
இதழ்களைப் பார்த்தான்
இன்னும் ஈரமாய்...
மருதாணி பாதம்
ஓசை எழுப்பவேயில்லை!
சின்னதொரு நடுக்கத்தில்
சித்திரப்பாவை!
மணமகள் ஒப்பனையெனினும்
உள்ளுக்குள் கொந்தளிப்பாய்...
நான் வரும்வரை
நினைவாய் வைத்துக்கொள்!
நிழற்படங்கள் தந்தான்!
விடைபெற எண்ணி
கைகளை விடுவிக்கையில்
அவள் சிந்திய
இருதுளிக் கண்ணீர்!
வேலை நிமித்தம்
வெயிலில் காய்ந்தாலும்
பொறுப்புகள் சுமந்தாலும்
உள்ளங்கை பிசுபிசுக்கிறது
அவள் நினைவில்...
6 comments:
//உள்ளங்கை பிசுபிசுக்கிறது
அவள் நினைவில்... //
நன்று!
Hello Kayal, Arjun here.
First of all great blog and very good kavithai's. I never knew you would write so many kavithai while at the office, otherwise we could have discussed in person itself. you are saying your blog on the last day, what to do. any way great blog, keep going and reply.
ஜோதிபாரதி said...
//உள்ளங்கை பிசுபிசுக்கிறது
அவள் நினைவில்... //
நன்று!
நன்றி ஜோதிபாரதி!
//
Arjunan Krishnaswami said...
Hello Kayal, Arjun here.
//
வருகைக்கு நன்றி அர்ஜீன்! சந்தித்து பகிர வாய்ப்பில்லை! வேறொன்றும் இல்லை. அடிக்கடி வாங்க ! என் கிறுக்கலை கிண்டலடிச்சுட்டு போங்க!உங்க விமர்சனங்களை நிறைய எதிர்பார்க்கிறேன்! மீண்டும் வருக!
//வெய்யிலில் //
எப்பவும் போல நல்லா இருக்குங்க. வெயிலில்ன்னு எழுதுங்க. வெய்யில்ங்றது புழக்கத்துல இருந்தாலும், வெயில்ங்றதுதான் வேர்.
//
பழமைபேசி said...
//வெய்யிலில் //
எப்பவும் போல நல்லா இருக்குங்க. வெயிலில்ன்னு எழுதுங்க. வெய்யில்ங்றது புழக்கத்துல இருந்தாலும், வெயில்ங்றதுதான் வேர்.
//
திருத்திட்டேனுங்க!
வருகைக்கு நன்றி!!
Post a Comment