Tuesday, August 28, 2012

வேண்டுதல்

உள்ளுணர்வுகள் ஊமையாக்கப்பட்ட
பறவை நான்
எதிர்வரும் இன்னல்கள்
எம் புலன்கள்
முன்னறிந்து சொல்லாது

கண்டம் விட்டு கண்டம்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
இந்தக் கடல் தாண்டும் வரை
பெரும் மழையோ கடும் புயலோ
என் சிறகுகளை
நனைக்காதிருக்கட்டும்...

அங்கொரு கூடுகட்டி
கூரை வேய்ந்ததும்
சொல்லியனுப்புகிறேன்
இயற்கையே!
தருவியும் மழையை
அப்போது.

2 comments:

vimalanperali said...

இங்கு பறவை என்பது ஒரு உவமையாகவே படுகிறது,மனம் தொட்ட கவிதை வாழ்த்துக்கள்.

sundar said...

நல்லாருக்கு கயல்! ரொம்ப நாளாச்சி இந்தப் பக்க்ம வந்து....கண்டம் விட்டு கண்டம்...ஒரு பேச்சுக்கு நீங்க அண்டார்டிகா போறதா வெச்சிக்குவோம்.. இயற்கைக்கே தர்மசங்கடம் தான் அங்கெல்லாம் மழை பெய்விக்க...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!