Saturday, December 3, 2011

நா

கந்தக பிழம்பொன்றின்
செறிந்த துளி
சிந்திய வேகத்தில்
கருகிப் போனது உறவு!

வைரம் பிரசவிக்க
கடவுள் தரும் அழுத்தத்தில்
கொள்கலன் விசும்பலோடும்
புறவிசை நெரிசலோடும்
குமுறியபடி எரியும் மனது!

தளும்பாத கோப்பைகளும்
நிரம்பி வழிகையில்
கட்டுடைந்தது நாக்கு
புலன்வழி அறிவும் சேர
மிருகமானது மனிதம்

நட்டுவாங்கம் இல்லாத
ருத்ர தாண்டவம்

திரண்ட ஒருதுளி கண்ணீரில்
அணைந்தது பிரளய நெருப்பு
ஆவியடங்கி சமவெளி விளங்க
இறுகிப் படிந்தது பாறையாய்...

புல்லோ பூண்டோ
விரவிக் கிடக்கும் சாம்பலில்
பரிணமிக்கும் ஏதோவொன்று
தொடங்க கூடும்
தன் வாழ்க்கையை
மாறும் வானிலைக்கு உகந்தபடி!


8 comments:

மதி said...

மிக ரசித்தேன்.. அருமையான கவிதை... உங்களைச் சில காலமாகவே வாசித்து வருகிறேன்.. மொழியை அற்புதமாகக் கையாண்டு வருகிறீர்கள் . வாழ்த்துகள்...

வைரம் பிரசவித்தல் பற்றின வரிகளும் முடிவும் மிக அருமை

கயல் said...

நன்றி மதி!

உங்கள் புரிதல் மனதுக்கு நிறைவை தருகிறது.

அன்றாட வாழ்க்கையின் அழுத்தில் வெளிப்பட்ட கடுஞ்சொல்லொன்றில் பிரிந்த நட்பின் வலியை மற்றொரு நல்ல நட்பு மாற்றும் என்பதான கருத்து இது. ஆனால் பல்வேறு வடிவங்களில் புரிந்து கொள்ளப்படுகிறது. :(

மீண்டும் ஒருமுறை நன்றி.

மதி said...

:-) அட ! நான் சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறேன் .. ஆனாலும் இரண்டு மூன்று முறை வாசித்துப் பார்க்க வைத்த வரிகள் ! நம் பேனாவின் முனையை விட்டு நீங்கின மறு நொடியிலிருந்து வார்த்தைகள் என்னென்ன அர்த்தக் கோர்வைகளை நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்க முடியும் என்பது எழுதிப் பார்ப்பவர்களுக்கு வாய்க்கும் ஒரு நல்ல அனுபவம். இந்தக் கவிதை அப்படி ஒரு சுவாரசியத்தை உங்களுக்கு நிச்சயம் தந்திருக்க வேண்டும்.. நேரம் கிடைக்கையில் என் வலைப்பதிவைக் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள் ...

Anonymous said...

மிகவும் அருமையான கவிதை...

mohan said...

KAVITHAI PADAIKKA NAAN KAVINJAN ALLA. AANAAL UNGAL KAVITHAIYAI MIGAVUM RASITHEN. KAARANAM PURIYAVILLAI. NALAMUDAN VAZHGA ENA VAAZHTHUGIREN.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

polaichukkuve said...

its simply superb
but to reach all the people
please ezhiya thmilz nadai...
todays pupil and peoples are like that..anyway
iam happy about you
and please continue...
doitinaction@gmail.com

ashik said...

absolutely wonderful. nandru. nadru. vaalthukkal.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!