Sunday, November 20, 2011

போகிற போக்கில்....

பூமி முகம் பார்த்ததும்
சிதைத்து போனது காற்று
”நீர்க்குமிழி”

***

சருகின் மீது பயணிக்கிறது
உயிருள்ள எறும்பு
”கடந்த காலம் ”

***

இருட்டிய வழியில்
நடைபயில்கிறது கைபிடித்த
விளக்கின் ஒளி!

***
இமைகள் இரண்டும்
கட்டிக்கொண்டபின் 
விடுதலையானது
”கண்ணீர்”

***

பூக்களை மிதித்தால்
முட்கள் குத்தும்
”நெருஞ்சிப் பூ”

***

நீர்சூழ் நல்லுலகம்
அதன் நடுவே - மனம்
வறண்ட மனிதர்கள்

***

வெண்ணிற தாள்
ஒற்றைக் கரும்புள்ளி
நிறை மறந்த மனது

***

5 comments:

நாமக்கல் சிபி said...

அனைத்தும் அருமை!

natchiar kothai said...

நறுக்கென்று நல்ல விளக்கம் நன் கவிதையாய்.

manimuthu .s said...

சுய பார்வையில்

நயமான தன் வாழ்நாள்

கண்ட பாதைகள் .

கயல் said...

நன்றி நாச்சியார்!

நன்றி சிபியண்ணா!

Unknown said...

அருமையான சிந்தனை அழகான வரிகளில்...

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!