யாரெனக் கேட்கிறார்கள்
யாரெனச் சொல்லட்டும்
யாராவது இருந்தால் தானே!
வெறும் கையில்
பூக்களை அளந்தெடுக்கிறேன்
விற்பனைக்கல்ல
சந்திக்கும் நாளிலென்
விரகத்தின் வீதம் எத்தனையென்று
உன்னிடம் சொல்ல!
=====
கைவளைகளை
ஒட்டிப் பிரித்துக் கொண்டிருந்தேன்
திடுமென உன் நினைவு!
இதழொற்றி
மீண்டதும் ...
சப்தித்தன வளையல்கள்
சிலிர்த்துக் கொண்டேன் நான்
இப்படியாக...
நீயும் நானும்!
=====
பிடித்தவை
வெறுப்பவை
ரசிப்பவை
நீ உவந்து ருசிப்பவை
எல்லாமும்
மனப்பாடம்!
என் விருப்பம் ஏதேனுமொன்று
தெரியுமா உனக்கு?
=====
தினவேறிய தோளோடு
திமிர் தளும்பும் கண்ணோடு
தெளிவான மதியோடு
தெவிட்டாத தமிழோடு....
எல்லாக் கனவும்
பொய்த்தும் கூட
இன்னும்
இயங்கிக் கொண்டிதானிருக்கிறேன்
நீயென்பது கைவரும்
நாளொன்றிற்காய்....
======
காத்திருத்தல்
தவம்
அதன் பின்
பிறவிப் பயனாய்
உன் தரிசனம் கிடைப்பதால்
காத்திருத்தல் தவம்!
=====
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
என்னுலுறையும்
எல்லாமும் நீயென
எப்படிச் சொன்னாலும்
விளங்கவில்லை உனக்கு!
சரி!
இலக்கணம் உடைக்கிறேன்
முத்த வாசகமாவது
புரியுமா உனக்கு!
=====
விண்ணில் நிலவும்
என்னில் நீயும்
தேய்ந்தும் வளரும்
நிரந்தரமென்றாய்!
அதற்குபின்
நானோ
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பயணித்தபடியிருக்கிறேன்
கனவுகளின் ஊடாக!
=====
இதயம் மூளை
இதில் எங்கடி
இருக்கிறாய் நீ!
கேட்டதும்
தீயாய் எரிந்தது
நான் பக்கதிலிருந்தேன்
அப்போது!
=====
கொஞ்சம் இளநரை
தோல் சுருக்கம்
கருவளையம்
முகப்பரு
எல்லாமும்
புலம்பி முடிக்கையில்
மெதுவாய் சொல்கிறாய்
“இருந்தாலும் அழகுடி நீ!”
=====
வருத்தங்களிலென்
தோள் சாய்வாய் நீ!
அப்போதெல்லாம்
வசந்தங்களை
சுவாசிக்கிறேன் நான்!
=====
கண்பார்வையில்
பட்டதை எல்லாம்
கவிதை சமைக்கிறேன்
உன் கண் தொட்டபின்
கல்லாய்
உறைகிறேன்!
=====
வார்த்தைகளெல்லாம்
வலுவிழந்து போயின
உன் மூச்சுக் காற்றின்
ஸ்பரிசத்தில்....
தள்ளி நிலென்று
நீயோ நானோ
சொல்லவேயில்லை
கடைசிவரை!
=====
எனக்குள்
நூறுமுறை
சொல்லிச் சொல்லி
சிலாகித்துக் கொள்கிறேன்
உன் பெயருக்குமுன்
திருமதி சேர்த்து!
=====
எல்லாமும்
எல்லோரும்
எப்போதும்
அழகாய் ....
கண்ணில் நீ
இருப்பதனாலா?
=====
பிரபஞ்ச வெளிச்சம்
புகாத என் மனவறையின்
கதவுகளில் தேவதைகள்
காவல் புரிகிறார்கள்
உள்ளே நீயோ
கொடுவாள் கொண்டு
உன்னை எழுதிக்
கொண்டிருக்கிறாய்!
=====
உன்னைச் சுற்றியே
சுழன்றபடியிருக்கிறது
மனது!
பயமாயிருக்கிறது
சுற்றலின் முடிவில்
சூனியமாகிவிடுமா
என் காதல்!
=====
என்னில்
எல்லாமும் குறை
உனக்கு!
மனமெங்கும் நீ
நிறைந்திருப்பதை
அறிந்து சொல்லுமா
உன் கண்கள்?
=====
அனைத்துலக வாத்தியமும்
ஒருங்கே ஓதினாலும
என் மௌனங்களின்
சக்கரவர்த்தி நீ!
=====
நல்லதை நினை
நல்லதை பார்
நல்லதை கேள்
பார்த்துக் கொண்டே
கேட்டபடியிருக்கிறேன்
உன்னையும்
உன்னாலான நினைவுகளையும்!
=====
உலர்ந்த உதடுகளை
ஈரமாக்கினாய்
நனைந்திருந்தேன்
என்னுள் காதல்மழை
15 comments:
class......
aplause.....
aplause.....
aplause.....
aplause.....
aplause.....
aplause.....
aplause.....
aplause.....
புதன்கிழமை காதலிச்சா ஆள் வச்சு அடிப்பீங்களா?
அனைத்தும் வசீகரம் கயல்.
காதல் செவ்வாயிலிருந்து அடுத்த திங்கள்
வரை நீள்கிறது.
அக்காச்சி,
எழுத்து சைஸை NORMAL இல் விட்டிருக்கலாம் தானே,
சிறிய எழுத்துருவாகத் தெரிகிறது.
காதல் செவ்வாய்- காத்திருப்பில் வெற்றி பெற்று, காதல் மழையில் நனையும் ஒரு பெண்ணின் உணர்வுகளை இங்கே அழகாச் சொல்லி நிற்கிறது.
பல மாதங்களாகவே உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவள்..இன்றே பின்னூட்டம் இடுகிறேன். அனைத்தும் அருமை!..அதிலும் "வார்த்தைகளெல்லாம் வலுவிழந்து போயின" என துவங்கும் கவிதை, ஏனோ என் மனதின் நினைவுகளை சிறிது கிளறியது..இதுவே ஒரு நல்ல கவிதைக்கு அடையலாம்..நன்றி கயல்...
good lines and thinking... keep it up...
தங்க மகளுக்கு ஓர் வணக்கம்..
உங்கள் எழுத்துக்கள் அருமை..
//எல்லாமும்
எல்லோரும்
எப்போதும்
அழகாய் ....
கண்ணில் நீ
இருப்பதனாலா? //
ஆகா.. அருமை..
இதற்காகவே காதலிக்கலாம் போல் இருக்கிறதே..
வாழ்த்துக்கள்
கூர்வாள் ஏந்தி வரும் காரிகையே..
வாய்ப்பிருக்கும் போது சிவனடி சிந்திக்க வாருங்கள்.. சிவயசிவ - வில்
http://sivaayasivaa.blogspot.com
அன்பன் சிவ. சி. மா. ஜா
மிகவும் நல்ல கவிதை.அற்புதமான சொல்லாடல்கள். நன்றி.
கயல் ,
வணக்கம்.
என் பெயர் தமயந்தி. நான் சில நாட்களாகவே உங்கள் பக்கங்களை புரட்டி பார்த்து வருகிறேன். உங்கள் எழுத்து நடையும் சிந்தனையும் மிகவும் அருமை. என்னாகும் உங்களை போல் ஒரு பக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இபொழுது தான் உங்களை பார்த்து நானும் ஆரம்பித்து இருக்கிறேன். உங்களின் எழுத்தை என்றும் நிறுத்தி விடாதீர்கள். என்றும் உங்களை தொடர்ந்து வர ஆசைபடுகிறேன்.
நன்றி :) :) :)
அனைவருக்கும் நன்றி!
புதிய நட்புகளுக்கு வணக்கங்களும் நேசமுடன் ஒரு பூங்கொத்தும்!
தவறாமல் வருக என்பதோடும் விமர்சனமும் தவறாமல பின்னூட்டமிடுக என்பதும் அன்புக்கட்டளையாக...
நன்றி!
அத்தனையும் அடுக்கடுக்கான அருமையான வரிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
very good effort....
ஏதோ சொல்ல வேண்டும்
வரிவடிவம் பெறா வார்த்தைகளை
என்னுள் எண்ணங்களாய் நிறுத்திவிட்டு
வாழ்த்துகளில் களிக்கிறேன்
'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்' என்ற டி.ராஜேந்தரின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திய முதல் கவிதையை ரசித்தேன்.
- ஞானசேகர்
Post a Comment