Wednesday, June 1, 2011

இதுவாகவும் கூடுமோ?

இன்னது நிகழ்ந்தால்
இன்னாரெல்லாம்
இகழ்ந்துரைப்பர்!

இவரவரெல்லாம்
யாரோவெனப் போவார்
இனிதாய் ஒலித்தவை
இன்னலாய் மாறக்கூடும்
இவ்விதமானால்
இளக்காரம் நிச்சயம்
இப்படியாக இன்னார்
இச்சேதி தெளிவுற்றால்
இழிந்து உமிழக்கூடும்!

எங்ஙனம்
எவரெவர் வாய்
எப்பொருள்படினும்

உன்னில் நானும்
என்னுள் நீயும்
கருத்தொருமித்தே
காதலானோம்!

சுவாதினமாய் இதழ்
விரியும் மொட்டொன்றாய்
மலர்ந்தது காதல்...

காதலை பேசிப்பேசி
காதலரானோம்

தூற்றலாய்
பிதற்றலாய்
சாபமாய்
கிண்டலாய்
கேலியாய்
ஒதுக்கலாய்

நம்மீது
சொல்லெறியும் நாக்குகள்
எதற்கும் மனவொழுக்கம்
சொந்தமில்லை என்பதறிக!

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வித்தியாசமான பாணியில் அழகிய கவிதை..
வாழ்த்துக்கள்..

Siva said...

மிகவும் அற்புதம்

Madumitha said...

சொல்லெறியும் நாக்குகள்
எதற்கும் மனவொழுக்கம்
சொந்தமில்லை என்பதறிக.

மிகவும் ஆழமான வர்கள்.
வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அதி அற்புதமாய் ஒரு கவிதை! எப்படி இதை மிஸ் பண்ணினேன் இத்தனை நாள்?

rajamelaiyur said...

Super kavithai

Anonymous said...

கொஞ்சம் இளநரை
தோல் சுருக்கம்
கருவளையம்
முகப்பரு
எல்லாமும்
புலம்பி முடிக்கையில்
மெதுவாய் சொல்கிறாய்
“இருந்தாலும் அழகுடி நீ

மறக்க முடியாத வரிகள்
நிச்சயம் கூர் வாள் தான்

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!