தொல்பொருள் கிடங்கில்
பதனிட்ட சவமாய்
அணுவைத் திறக்கும்
அதிசயம் தாங்கிய அற்புதப்பேழை
கனக்கும் கனவுகளை
கருவாய் சுமந்து...
எண்ணக் கருத்தாணிகள்
குத்திக் குத்திச் சீழ்வழி தலையில்
முளைத்தன பிறைச்சந்திரன்கள்
அறிவின் அடையாளமாய்...
எழுத்துச் சித்தனொருவன்
அறிவின் பன்மச் சிதறல்கள்
உதிர்த்த பொறியில்
திறவுச் சூட்சுமக் கபடம் கரைய
உருப்பெற்றன ஒளடத மந்திரங்கள்!
மறை பொருள் ஒளிபெறும் வேளை
நெருக்கும் வறுமை திறன்பளு
நெம்பித்தள்ள அரைப்படி அரிசிக்கு
அஸ்தமித்தன வாலிபக்கனவுகள்
வறுமைக்கோட்டின் எல்லை முடிவில்.
அதோ!
தொல்பொருள் கிடங்கில் திறவாத பேழை
இவன் கனவும் விழுங்கிச் செரித்தபடி...
10 comments:
மூளையை வயிறு
ஜெயிக்கும் இடம் இதுதானோ?
//எண்ணக் கருத்தாணிகள்
குத்திக் குத்திச் சீழ்வழி தலையில்
முளைத்தன பிறைச்சந்திரன்கள்
அறிவின் அடையாளமாய்...//
Nalla irukku kayal.
ரொம்ப நல்லாருக்கு கயல்...
||அரைப்படி அரிசிக்கு
அஸ்தமித்தன வாலிபக்கனவுகள்||
அருமை..
romba nalaiku piragu good one
தனி தனியா படிச்சா புரியுதுங்க...ஆனா எல்லாம் கோர்த்து புடிச்சா மீண்டும் சிதறுதுங்க.
//
Madumitha said...
மூளையை வயிறு
ஜெயிக்கும் இடம் இதுதானோ?
//
ம்ம்! என்ன செய்ய எம் நாட்டில் அறியப்படாத அறிஞர் கூட்டம் எப்போதுமுண்டு!
//
சே.குமார் said...
//எண்ணக் கருத்தாணிகள்
குத்திக் குத்திச் சீழ்வழி தலையில்
முளைத்தன பிறைச்சந்திரன்கள்
அறிவின் அடையாளமாய்...//
Nalla irukku kayal.
//
நன்றி குமார்
//
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு கயல்...
//
நன்றி பிரியா
//
கார்க்கி said...
romba nalaiku piragu good one
//
நன்றி
Post a Comment