Saturday, August 29, 2009

காதலாகி கண்ணீர் பெருக்கி...

க‌ட்டி வைத்த‌
காத‌லெல்லாம் க‌ரையேற‌
நினைக்கையில்
'ம‌ற‌வாம‌ல் வ‌ந்துவிடு'
அழைப்பிதழோடு
அழ‌காய் சிரிக்கிறாய் நீ!

கைய‌சைத்து
விடைபெறுகிறாய் - நீ
விட்டுப் பிரியும்
வ‌ருத்த‌தில் க‌ல்லென‌
ச‌மைகிறேன் நான்!

இதழ் பிரியாமல்
புன்னகைக்கிறேன்! - நீ
பிரிவதை தடுக்க
இயலாமல்....

இமைகளும் சேர
மறுக்கின்றன
நம் பிரிவின் வலி
கனவுகளால்
புதிப்பிக்கப்படுமெனும்
பயத்தில்..

சொல்ல‌ நினைத்து
சொல்லாம‌ல் விட்ட‌
சொல்லெல்லாம்
இப்போது ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வை
என் அக‌ராதியில்...

என‌க்கென‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌ நீ
பிற‌ர்கென‌ மாறுகையில்
க‌ட‌வுளின் அரசியல்
க‌ண்கூடாய் தெரிகிற‌து!

இருந்தும்,
இய‌லாமையெல்லாம்
இர‌வுக்குள் இளகி
க‌ண்ணீராய் த‌லைய‌ணை
ந‌னைக்கையில் புரிகிற‌து
காத‌லின் வ‌லி!!

நீ வாழ்ந்து போன
என் நேற்றைய நாட்கள்
இனி,
நம் நேசத்தின்
வலியுணர்த்தும்
வடுக்களாய் மட்டும்!

கனவுகள் எல்லாம்

கண்ணீராய் வடிந்தபின்
நினைவு வந்து
உண்மை சுடுகையில்
புரிகிறது!
அய்யோ!அலுவலக பேரூந்து
இன்னும் அரைமணியில்!
வாழ்க்கை ஓட்டத்தில்
பந்தய குதிரையாய்
கண்ணீரை மறந்தபடி!

8 comments:

கலகலப்ரியா said...

ஆஹா.. வாங்க கயல்.. ரொம்ப நாளாச்சு..! ரொம்ப நல்லாருக்கு... பிரிவின் வலி உணர்த்தும் விதம்..! :(

பழமைபேசி said...

இயல்பா உணர்வுப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுது... அனுபவக் கவிதை போல இருக்கே?

பழமைபேசி said...

இவ்வளவு அருமையா, கவிதை வடிக்கிற திறமைய வெச்சிகிட்டு, அடிக்கடிக் காணாமப் போயிடுறீங்களே?

கயல் said...

//
கலகலப்ரியா said...
ஆஹா.. வாங்க கயல்.. ரொம்ப நாளாச்சு..! ரொம்ப நல்லாருக்கு... பிரிவின் வலி உணர்த்தும் விதம்..! :(
//

நன்றிங்க‌!இனிமே அடிக்க‌டி வ‌ர‌லாமின்னு இருக்கேன்!

கயல் said...

//
பழமைபேசி said...
இயல்பா உணர்வுப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடுது... அனுபவக் கவிதை போல இருக்கே?
//

ஆமா! தெரிஞ்ச‌வ‌ங்க‌கிட்ட‌ கொஞ்ச‌ம் அனுப‌வ‌ம் க‌ட‌ன் வாங்கினேன்!இஃகி!

கயல் said...

//
பழமைபேசி said...
இவ்வளவு அருமையா, கவிதை வடிக்கிற திறமைய வெச்சிகிட்டு, அடிக்கடிக் காணாமப் போயிடுறீங்களே?
//
ஆசானே!உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் இல்லாத‌ என‌து ப‌டைப்புக‌ள‌னைத்தும் திருத்த‌ப்ப‌டாத‌ தேர்வுத்தாளாய்! திருத்தி ம‌திப்பிட‌ ம‌ற‌வாதீர்!

நட்புடன்
க‌ய‌ல்

vasu balaji said...

அருமையாய்ச் சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

கயல் said...

//
அருமையாய்ச் சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்.
//
நன்றி! நண்பரே!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!