"என்ன இது? இப்படிப் பார்க்கிறாய்?”
“காதலெனக்கு உன் மீது”
“என்னிடமா?என்னிடம் மட்டுமா?”
“உன்னிடம் அதிகம்?”
“ஏன் அப்படி?
“சில நேரம் நீ மட்டும் இருந்தால் போதுமெனத் தோன்றும்.உலகை வெல்லும் தைரியம் பிறக்கும்.”
“ம்ம்ம்! குருட்டு தைரியம்.உலகில் எத்தனையோ இருக்க, என் மீது மட்டும் ஏன்?”
“அது அப்படித்தான்... ஏன் என்று தெரியவில்லை....”
சில மணித்துளி மௌனம்.
“என்னை நிச்சயம் இருவருக்கு பிடிக்கும். அந்த இருவருமே புறக்காரணிகளை களையெடுக்க நினைப்பவர்கள்.ஒருவன் வீரன், மற்றொருவன் என் தயவில் தன்னை மறைக்கும்/மறக்கும் கோழை. இதில் நீ யார்?”
“போராளி!”
”ஓ!எதைக் குறித்துன் போராட்டம்?”
“ஆதிக்கமும் அடக்குமுறையுமில்லாச் சமுதாயம் வேண்டி ...”
“வெல்வாயா?”
“சத்தியம். துணையாய் நீ என்னுடனிருந்தால்........”
“சம்மதமெனக்கு”
“மகிழ்ச்சி.... மற்றுமொன்று..... உனக்குப் பிடித்தால்.........”
”பிடித்தால்......?”
“உன்னை முத்தமிடவா ஒருமுறை?”
“என்ன......?என்ன கேட்டாய்? பயமில்லையா உனக்கு? எத்தனை துணிச்சல்? நான் முகம் திருப்பிக் கொண்டால் என்னவாகும் தெரியுமா?”
”தெரியும் தெரியும்! சத்தத்திற்கு பதில் இரத்தம்....போராளி நான்! இதற்கெல்லாம் பயந்தால் முடியுமா?”
“முட்டாளே! உன் கை பிடிக்குள் திமிர முடியாமல் இருக்கிறேன் நான்! சம்மதம் கேட்கிறாய் நீ!”
”இசையாத மனதை அசைப்பது கடினம்!சம்மதமா சொல்....”
“நீ வீரன் மட்டுமல்ல! பண்பாளனும் கூட.. ஒருமுறை என்ன? ஆயிரமுறை முத்தமிட்டுக் கொள் என்னை!”
ஒரு வீரனுடன் கூர்வாள் காதல் பேசியதாம் இப்படி.....
************
Showing posts with label சூரமொக்கை. Show all posts

Wednesday, May 26, 2010
Friday, April 2, 2010
என் சமையலறையில் அவள்...
காதல் மனைவி.அழகான மாலை நேரம்.மெல்லப் பேச தொடங்கினான்!
”ஏய் நீ நல்லா சமைப்பியா?”
“ம்ம்!கவிதையா சமைப்பேன்!”
“அய்யோ! அப்போ சாப்பிட்டா வாயிலயிருந்தும் ரத்தம் வருமா? இல்ல உன் கவிதைய கேட்டு காதுலேருந்து ரத்தம் வருதில்ல.... அந்த மாதிரி... அய்யோ ! அய்யோ அடிக்காதடி..”
“போடா! அப்போ ஏன் என்ன மாதிரி பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்ட! நல்ல பைவ் ஸ்டார் ஹோட்டல் சீப் குக்கா பாத்து கட்டிக்கிறது தானே!”
“எல்லாம் விதி! மாத்தவா முடியும்?சே கோவத்துல கூட உன் மூக்குத்தி என்னமா ஜொலிக்குது பாரேன்”
“மொக்க! சமாதானப் படுத்தவாவது தெரியுதா? கல்வச்ச மூக்குத்தி வெளிச்சம் பட்டு ஜொலிக்காம? மூக்குத்திக்கு பதில் மூக்க புகழ்ந்திருந்தா பரவாயில்ல.மன்னிக்கிறத பத்தி யோசிக்கலாம்.வேற வழியே இல்ல. இதுக்கு தண்டணையா இந்த ஒரு மாசம் நீ தான் சமையல்”
“கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வச்சாலும் வச்சாங்க.வெளியில சாப்பிட்டா ஆகலைன்னு வீட்டுல சமைச்சா..ஆபிசுக்கும் போயிட்டு வீட்டுலயும் சமைச்சு..ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா!தாலிகட்டுன ஆம்பளைங்க பாடு.. ம்ம் ... ஊமையின் கதறல் யாருக்கும் கேக்காது!பாருடி சோகத்துல கவிதை எல்லாம் வருது!”
“உன் வாய்க் கொழுப்பால தான் இதெல்லாம்.. அடக்க ஒடுக்கமா ஆம்பளயா லட்டசணமா பேசக் கத்துக்கோ!ஆனா நாக்குக்கு ருசியா சமைச்சு போடுற கணவன் கிடைக்க எத்தனை தவம் செய்தேனோ?”
“இப்படி பேசிப் பேசியே மயக்கிடு!”
*********************
தண்டனை காலம் முடிந்து(சமையல் செய்யுறதிலிருந்து மட்டும் தான்), கவிதாயினி சமையலறையில் பிரவேசிக்கும் முன் ஒரு சின்ன நேர்காணல்.ம்ம் என்னா பாக்குறீங்க சாப்பிட போறது நான் தானே? உங்களுக்கென்ன சிரிச்சிட்டு போயிட்டே இருப்பீங்க... இருங்க என் தர்ம பத்தினியின் சமையல் அறிவு எப்படி இருக்குன்னு பாக்கலாம்.
”ஏய் என்னப்பா சமைக்கப் போற? சாப்பாடா இல்ல ஏதாவது டிபனா?”
“ம்ம்! காலையிலேயே சாப்பாடா? நீ என்ன வயக்காட்டுக்கா போற பசிக்கு தாங்குமான்னு பாக்க!ஆபிசில உக்காந்து கணக்கு தானே எழுதப்போற? பின்ன?”
“சரி! சரி! நீ என்ன சமைச்சாலும் நான் தாங்குவேண்டி செல்லம். சொல்லு சொல்லு எப்படி பண்ணப்போற? என்ன சமைக்கப் போற?”(அப்பத்தானே முன்னெச்சரிக்கையா ஏதாவது மருந்து வாங்கி வச்சுக்கலாம்!)
”தோசையா இட்லியான்னு குழப்பமா இருக்கு டா!”
“ம்ம்! எனக்கு தோசை தான்பா வேணும்”
“அப்பச் சரி!முதல் முதல்ல சமைக்கிறேன்ல அதனால இன்னிக்கு பால் பாயாசம் வைக்கப் போறேன்! அப்புறம் தோசைக்கு சாம்பார் சட்னி.. ஏய்..என்ன குட்டிமா கண்ணெல்லாம் கலங்குது”
“இல்லப்பா!3 வருசமா நானே சமைச்சு நானே சாப்பிட்டு வாழ்ந்த இந்த பிரம்மச்சாரிய வாழ்க்கை எத்தன கொடும தெரியுமா? ஒரு பொண்ணு வந்து அழகா சமைச்சு, அன்பா பரிமாற மாட்டாளான்னு இருக்கும்.அன்னிக்கு உனக்கு சமைக்கத் தெரியுமுன்னு சென்னாருல்ல உங்கப்பா அப்போல இருந்து உன் கையால சாப்பிட தவங்கெடக்குறேன் தெரியுமா? நீ என்னடான்னா எனக்கு தண்டனை கொடுத்து கொடுத்து நானே கரண்டி புடிக்கிறதா இருக்கு!”
“இவளோ ஏக்கமாடா? சே, எனக்கு புரியாம போயிடுச்சே! சரி இன்னிலேர்ந்து நானே.. நானே சமைக்குறேன். ஆனா குறை சொல்லாம சாப்பிடணும் சரியா!குறை ஏதாவது சொன்ன... அப்புறம் நீதான் சமைக்கணும் எப்பவும். சரியா?”
“இல்லடீ நீ சமைக்குறதுக்கு முன்னாடி எப்படி சமைக்கப் போறேன்னு சொன்னா நல்லா இருக்குமுல்ல?”
“ம்ம்!அப்படிக் கேளு! மாவை எடுத்து ஊத்தி சீரா பரவவிட்டு,பக்குவமா எண்ணெய் தெளிச்சு, ஒட்டாம வாகா திருப்பி, உள்ளும் புறமும் வாட்டி எடுத்தா அது தான் தோசை!”
“ஆகா! கவிதை கவிதை! நாக்குல எச்சில் ஊறுது போ!அப்புறம் பாயாசம்?”
”அதென்ன பிரமாதம்! பாலைக்காய்ச்சி, சவ்வரிசி சேமியா சர்க்கரை இப்படி பங்காளி சகிதம் உள்ளிறக்கி,ஏலம் பொடித்து முந்திரி திராட்சை வறுத்துச் சேர்த்தால் உன் ஆயாசம் மாறி பவ்யமாய் வந்திடுவாய் பாயாசம் பக்கத்தில்!”
“அய்யோ அய்யோ! என் பொண்டாட்டி சொல்லுற கவித மாதிரி அப்துல கலாமே.. சே அவரு விஞ்ஞானி.. அப்துல் ரகுமான் கூட இதுவரைக்கும் எழுதல போங்க!உன்னப் போயி உங்கம்மா லூசுன்னு அன்னிக்கு திட்டுனாங்களேடி! அதான் வருத்தம்.”
”இப்ப எதுக்கு அவங்கெல்லாம்.ஏய் நீ வஞ்சப் புகழ்ச்சி ஏதும் பண்ணலயே?”
”சத்தியமா! நீயும் கவிதை .. உன் சமையலும் கவிதை! சே.. நான் ரொம்ப குடுத்து வச்சவன்! நாளைக்கு ஆபிஸ் போயி ஒரு பத்து பிரம்மச்சாரியாவது வயிறு எரிய இதச் சொல்லி சிரிக்கணும்! அப்புறம்..கல்யாணம் பண்ணி என்னத்தக் கிழிச்சேன்னு வெறுப்பேத்துறாங்க சாமி! இருக்கட்டும் இருக்கட்டும் !”
பேப்பர் படித்தவாறு, தொலைக்காட்சியின் தொல்லைகளை இன்பமாய் உள்வாங்கிக் கொண்டே சமையலறையில் அவள் நடமாடுவதை ரசித்தான். இது தான் காலங்காலமாய் அவன் கனவு கண்ட காட்சி! சே இன்னிக்குத் தாண்டா நாம வாழவே ஆரம்பிக்கிறோம் குடும்பத் தலைவனா!
*******************************
அரைமணி நேரங்கழித்து,அலுவலகம் பற்றிய நினைவு வரவும்....
அடுக்களைக்குள்ளே எட்டிப்பார்த்தான்.
”என்ன சத்தமே இல்ல? என்னம்மா பண்ணிட்டிருக்க? என்ன யோசனையா குழப்பமா இருக்க?”
“இல்லடா! ஒரு சின்ன விசயம்! அடுப்ப எப்படி பத்த வைக்கிறது?”
”என்ன .. என்ன அடுப்ப.. அடுப்ப எப்படி பத்த வைக்கிறதுன்னு தெரியலயா? என்னடீ சொல்லுற?”
“இல்ல எங்க வீட்டுலயெல்லாம் நாங்க தோசைய ஓவன்ல தான் செய்வோமா அதான் அடுப்ப....”
“தோசைய ... அய்யோ.... அப்ப அப்ப உ..உனக்கு....”
“உண்மை என்னன்னா எனக்கு ச..சமைக்கவே தெரியாது. சுடு தண்ணி கூட வச்சதில்ல. ரொம்ப செல்லமா வளந்திட்டேனா...அதான்...”
“உங்கப்பா அன்னிக்கு சொன்னாரே! நீ நல்லா சமைப்பேன்னு...அ..அது எல்லாம் பொய்யா?”
“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணுன்னு சொல்லுவாங்கல்ல!அதான்...”
அவள் பேச பேச, அங்கேயே அவன் எதிர்காலம் தெரிய... மயங்கிச் சரிந்தான் அவன்!
பின்குறிப்பு:-
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்பட்டது இல்லை! அப்படி தவறுதலாய் ஏதேனும் நடந்திருந்தால் தனியாக மின்னஞ்சலில் திட்டவும். தாறுமாறாக பின்னூட்டமிட எத்தனிக்கும் நண்பர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள், மீறினால் இந்த கதாநாயகனைப் போல சபிக்கப்பட நேரும் எனபதை எங்கள் அகில உலக அடாவடி மகளீரணி தெரிவித்துக் கொள்கிறது. நன்றி! மேலும்,பாராட்டுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

அடக்கம்::::
சிறுகதை,
சூரமொக்கை
Saturday, February 13, 2010
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு
எங்க இவர காணோமுன்னு தேடுற நெறய பேருக்கு இவரு காணாம போயிட்டாருங்குறத தெரியப்படுத்துற பதிவு! பாத்து கவனமா படிங்க சாமி!
பெயர் : பசுநேசர் திரு இராமராஜர் அவர்கள்
வயது : நேத்து தான் 16 முடிஞ்சி இன்னிக்கு 17 ஆரம்பிச்சிருக்கு
அடையாளம் : காணாமல் போன அன்று ஒப்பனை இல்லாததால் அடையாளம் காண்பது கடினம்.குத்து மதிப்பாய் இப்படி இருந்தார் எனக் கொள்க!(1/2 அங்குலம் ஒப்பனையோடு கற்பனை செய்துக்கோங்க!)

மேலதிக தகவல் : பாராளு மன்ற உறுப்பினராக இருந்தார் (வயசு(?) எங்கயோ உதைக்குதுல்ல! இவுரு தமிழ் சினிமா பிரபலமுங்கோ!) எனவும், மக்கள் சேவை செய்வதாய் சொல்லி அங்கே போய், மத்தியான நேரங்களில் குறட்டை விட்டு சபையின் செயல்பாட்டை கெடுத்த குற்றத்துக்கு அவைத் தலைவர் பசுநேசர் நடித்து(சொதப்பிய) படங்களை ஆயுள் முழுவதும் பார்க்க கட்டளையிட்டார் எனவும் அறியப்படுகிறது.ஒரு நாள் இரவுக்குள் முழுக்க முழுக்க மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
தனித்திறமைகள் :
1. நடிப்பெனும் பெயரால் இரத்தமின்றி கொலை செய்ய இவரால் மட்டுமே முடியும்
2. சேர்ந்து நடிக்கும் கதாநாயகிக்கும் சேர்த்து தானே நளினத்துடன் நடிக்கத் தகுந்த சிறந்த நடி(கை)கன்.
3. குடுத்த கூலிக்கு மேலாய் கூவுவது இவரது வழக்கம்.
4. கரகாட்டம் கூட சரியா வராதுன்னு கேள்வி!
5. உதட்டுச் சாயம் தயாரிக்கும் நிறுவனங்கள் இவரை அணுகலாம் விளம்பரத்துக்கு!
பின்குறிப்பு:
மொக்கை பதிவு கேட்ட வாசக உள்ளங்களுக்கு சமர்ப்பணம்!!

Wednesday, January 6, 2010
கொலவெறி
"கொஞ்சம் யோசிச்சு பாரு தாயி"
"எல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே, நின்னு - நடந்து - உங்காந்து - பேசி - சிரிச்சு - யோசிச்சாச்சு!"
"ஏந்தாயி!பெத்ததுக்காக ஆயி அப்பன் பொறுத்துக்கலாம்!ஆனா, மத்தவங்க....."
"என்ன மட்டும் சொல்லுறியே! 'அவங்க' யாராவது நிறுத்தினாங்களா? அவங்கள நிறுத்தச் சொல்! நானும் நிறுத்துறேன்! [நாயகன் :) சரீ சரீ] எத்தன தடவ எத்தன பேர ஈவு இரக்கமே இல்லாம கொன்னுருக்காங்க! உன்னப் போல யாராவது தட்டி கேட்டாங்களா? இல்லையே! கூடயிருக்க நீயே இப்படி சொன்னா? நான் என்ன பண்ணுவேன்!எனக்கு மட்டும் ஏன் இப்புடி எல்லாம் நடக்குது?[why me????:=( ]"
"என்ன தான் ஆத்திரமிருந்தாலும் இப்புடி ஒரு முடிவ நீ எடுப்பேன்னு நான் நெசமா நெனைக்கவேயில்ல!"
"என்ன பண்ணுறது! நானுந்தான் நெனைக்கவேயில்ல! நெலம அப்புடி! வேற வழியில்ல!"
"இம்புட்டு நாளு எங்க போன?பழய ஆளுங்க சரி! வெவரம் புரியாம யாராவது புதுசா வந்துட்டா? அவங்க என்ன பாவம் பண்ணுனாங்க?"
"முடியாது ! முடியாது! நான் சொன்னா சொன்னது தான்! புது வருசத்தன்னிக்கு கொல தெய்வத்துக்கு முன்னாடி சபதம் போட்டுருக்கேன்!கூடவே இருந்த,அப்ப விட்டுட்டு இப்ப குதிக்குற?"
"நீ சொன்ன்துல்ல ஒன்னு கூட உருப்புடுற மாதிரி இல்ல! சரி சமூக கோபம்(!)(ஹீ ஹி ஹி) கொஞ்ச நேரத்துல கொறஞ்சுரும்னு இருந்தேன்!ஆனா ..."
"ஆனா என்ன ஆவன்னா? கலகலப்பிரியாலேர்ந்து கார்க்கி வரைக்கும் யாரு சொன்னாலும் கேட்க மாட்டேன்! கேட்க மாட்டேன்! கேட்க மாட்டேன்!!!!" [யப்பே! இப்பவே கண்ணக் கட்டுதே! உஸ்ஸ்! என்ன விளம்பரமுடா சாமி?]
"ப்பூ!தோபாருடா! அவங்கெல்லாம் ரொம்ப பெரியாளுங்க! நீ கத்தி எடுத்தது தெரிஞ்சாவே ஆள வச்சு தூக்கிருவாங்க! வலையுலகத்து மேல ரொம்ப அக்கற உள்ளவிங்க! சொன்னா கேளு பெரியாளுங்க பொல்லாப்பு வேணாம்! வுட்டுரூரூரூ........"
"அப்புடீங்கிறியா?"
"ஆமா தாயி ! அப்புடித்தான் அப்புடித்தான்! கொஞ்சங்கொஞ்சமா எறங்கி வா! வா!"
"சரி! சரி! என்னய என்ன தான் செய்ய சொல்லுற?"
"நாளொரு பதிவுங்குறத வாரம் ஒரு பதிவுன்னு மாத்தினா போதும்! பல பேரு உசுரு தப்பிரும்! அதயும் ஞாயித்து கெழம போட்டீன்னா ஒனக்கு ரொம்ப நல்லது! "
"ஏன்? ஏன்??? "
"ஒரு தொலை நோக்கு பார்வை தான்!இஃகி!"
[ஆயிரத்தோட ஆயிரத்தொன்னாயிடும் பாருங்க! வெட்டோட ஆழம் கொஞ்சம் கம்மியா தான் படும்!தப்புச்சுருவா!]
"நீ ஏதோ சொல்லுறேன்னு தானே தவிர பயங்கியமெல்லாம் ஒண்ணுங்
கெடையாது!லேசா ஒதறுது!படபடப்பு அம்புட்டு தான் சரியாப்போயிரும்!"
"அப்பாடா! பதிவர்கள் தர்ம அடியிலயிருந்தும் கொலவெறியுல[கவனிக்க] இருந்தும் இவள காப்பாத்துறதுக்குள்ளேயும்!"
"எழுதுறதுக்கு சரக்கு இல்லையின்னு எல்லாம் நெனச்சுக்காத! தெக்கத்தி பொண்ணு தெரியுமுல்ல!"
"ஏய்! உனக்கு அவ்வளவு தான் மரியாத! தூங்கு பேசாம! என்னா சின்ன புள்ள தனம்!@#$%^&*"
"சாமிக் குத்தமாகாது?"
"எழுதினாத்தான் சாமி வந்து குத்தும்!"
"யாரு சொன்னா?"
"சாமி தான்!"
"சாமியே சொல்லிட்டா......ரா......?அப்பச் சரி!!"
பங்கேற்றோர் : கயல் மற்றும் கயலின் மனசாட்சி
குறிப்பு :-
பிரியா & கார்க்கி! ஒரு வீராவேசத்துல உங்களயும் இழுத்துட்டேன்! மன்னிச்சிடுங்க!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!