நீரை விடுத்து பாலை
உறிஞ்சும் அன்னம்
முழுதும் நீரின் கையணைப்பில்!
**********
அலைக்கு போக்கு காட்டும்
அழகான கண்ணாமூச்சி
வளைக்குள் பதுங்கும் நண்டு!
**********
தாலாட்டும் குற்றலைகள்
மேடாகி சமமாகும் நிலவு
அரிசில் சிதற ஆர்ப்பரிக்கும் குழந்தை!
**********
துளைகளின் நடுவில்
சுவாசத்தின் பிரயாணம்
புல்லாங்குழலிசை!
**********
விழுதுகளுக்கு நடுவே
முளைவிட துடிக்கும் விதை
பின்னணியில்லாத அரசியல்வாதி!**********
தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!
**********
Tuesday, June 2, 2009
'நறுக்'கென சில கிறுக்கல்கள்
அடக்கம்::::
ஹைக்கூ
Saturday, April 25, 2009
நல்லதோர் வீணை செய்தே
உன்னோடு சேர்த்தே உன்னாலான
உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்சம் தந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....
தனிமைக்கு பயந்து உனக்குள் சிறைபட்டேன்
வேட்டைக்காரனுக்கு பயந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரியவில்லை எனக்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த
கூரிய கொடுவாள்களுக்கு என் குருதி
இத்தனை பிரியமென்று
கூலிக்கு அதிகமாய் கூவியும்
அற்பமாய் கிடைத்த பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட வேண்டாம்
வேலால் குத்தாமலிருந்தால் சரி
தடவிப் பார்க்கையில்
தழும்பு மட்டும் மிச்சமாய்....
பார்ப்பவர்களுக்கு எப்படி புரியும்
காயம் காய்ந்து வடு வந்த வரலாறு
கேட்டு அழ வேண்டாம்
கேலி செய்யாதிருத்தல் உத்தமம்
பெண்ணீயம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்டவர் அனைவரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்தவள்'
ஒருமித்த குரலில் ஒத்து ஊதுகிறார்
வேடனின் சாமர்த்தியம் உன் கண்ணில்...
வெறுப்பில் கண்ணீர் வந்ததெனக்கு
'இல்லையென்று சொல்லக் கூடாது'
வியாபாரியின் விற்பனைக் கொள்கை போல
'எதற்கும் கண்ணீர் கூடாது'
வஞ்சியென் வாழ்க்கை கொள்கை
மிடறு போல் வேதனை விழுங்குகிறேன்
நவயுக நாகரிகங்கள் எதற்கும்
ஏங்கவுமில்லை ஏற்கவுமில்லை
இயல்பாய் வாழ்வதே இனிப்பாய்.....
வாழ்க்கை விற்று வசதி வாங்கும்
விற்பனை பிரதிநிதி நீ!
மலரின் வாசனை என்றும்
மண் வாசனை என்றும்
தேடி நுகர்வது சாத்தியமில்லை
பணம் பண்ணும் எந்திரம் நீ
பாசத்துக்கு பணிவது சாத்தியமில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
மணித்துளிகளை கணக்கெடுக்கும் உனக்கு
மழையின் பிரவாகத்தினை எப்படி சொல்ல?
யதார்த்தம் பேசுவதாய் சொல்லிக் கொண்டு
எத்தனையோ முறை மிச்சமின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
பதிலேதும் சொல்லாமல் பாவையாய் நான்!
எதுவுமே இல்லை ஆனாலும்
'அரசிளங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் தருகிறேன்
இருந்தும் ஏற்க மறுக்கிறாய்
நானும் சராசரி மனுசியென்று
கனவுகள் தீர்ந்த நரக வாழ்வு
நிதமும் தினுசு தினுசாய்
தன்மான படுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன்
உற்சாகமாய் போலி ஊர்வலம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்
'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்பவில்லை மனது
தானாய் வரைந்த வட்டத்தை
'சிறையென்றா' சொல்வது?
கண்ணாடி வேலி உடைப்பது கடினமில்லை
மனமில்லையென்பதே மகத்தான உண்மை!
மாற்றம் வரும் நம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்தபடி.....
உறவுகளையும் நேசிப்பதால்
வர்த்தியாய் வாழ்வைத் தொலைக்கிறேன் - அவர்
வசிக்க தோதாய் வெளிச்சம் தந்து
சிந்திய வேர்வைத் துளிகள் அத்தனையும்
சிப்பமாய் சேமித்து வைக்கிறேன்
என் சந்ததிகள் படித்துக் கொள்ளட்டுமென்று....
தனிமைக்கு பயந்து உனக்குள் சிறைபட்டேன்
வேட்டைக்காரனுக்கு பயந்து வலை புகும்
முயற்குட்டியின் சாமர்த்தியத்தில்....
தெரியவில்லை எனக்கு அன்று
வீடு முழுக்க வியாபித்திருந்த
கூரிய கொடுவாள்களுக்கு என் குருதி
இத்தனை பிரியமென்று
கூலிக்கு அதிகமாய் கூவியும்
அற்பமாய் கிடைத்த பொருளோடு
கூடு திரும்புகிறேன்
விசிறி விட வேண்டாம்
வேலால் குத்தாமலிருந்தால் சரி
தடவிப் பார்க்கையில்
தழும்பு மட்டும் மிச்சமாய்....
பார்ப்பவர்களுக்கு எப்படி புரியும்
காயம் காய்ந்து வடு வந்த வரலாறு
கேட்டு அழ வேண்டாம்
கேலி செய்யாதிருத்தல் உத்தமம்
பெண்ணீயம் பெருமையாய் பேசுகிறாய்
கேட்டவர் அனைவரும் சொக்கிப் போகிறார்
'கொடுத்து வைத்தவள்'
ஒருமித்த குரலில் ஒத்து ஊதுகிறார்
வேடனின் சாமர்த்தியம் உன் கண்ணில்...
வெறுப்பில் கண்ணீர் வந்ததெனக்கு
'இல்லையென்று சொல்லக் கூடாது'
வியாபாரியின் விற்பனைக் கொள்கை போல
'எதற்கும் கண்ணீர் கூடாது'
வஞ்சியென் வாழ்க்கை கொள்கை
மிடறு போல் வேதனை விழுங்குகிறேன்
நவயுக நாகரிகங்கள் எதற்கும்
ஏங்கவுமில்லை ஏற்கவுமில்லை
இயல்பாய் வாழ்வதே இனிப்பாய்.....
வாழ்க்கை விற்று வசதி வாங்கும்
விற்பனை பிரதிநிதி நீ!
மலரின் வாசனை என்றும்
மண் வாசனை என்றும்
தேடி நுகர்வது சாத்தியமில்லை
பணம் பண்ணும் எந்திரம் நீ
பாசத்துக்கு பணிவது சாத்தியமில்லை
உரையாடலுக்கு நடு நடுவே
மணித்துளிகளை கணக்கெடுக்கும் உனக்கு
மழையின் பிரவாகத்தினை எப்படி சொல்ல?
யதார்த்தம் பேசுவதாய் சொல்லிக் கொண்டு
எத்தனையோ முறை மிச்சமின்றி
கொன்றிருக்கிறாய் என்னை
பதிலேதும் சொல்லாமல் பாவையாய் நான்!
எதுவுமே இல்லை ஆனாலும்
'அரசிளங்குமாரி' நான் அப்பாவுக்கு
எல்லாமும் தருகிறேன்
இருந்தும் ஏற்க மறுக்கிறாய்
நானும் சராசரி மனுசியென்று
கனவுகள் தீர்ந்த நரக வாழ்வு
நிதமும் தினுசு தினுசாய்
தன்மான படுகொலைகள்
குற்றுயிராய் குமைந்து மறுகினும்
பொழுது விடிகையில் புத்தம் புதியளாய்
உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன்
உற்சாகமாய் போலி ஊர்வலம்
இயந்திர நாட்டியம் மாதக் கடைசிக்காய்
இவைதாம் நடுத்தரவர்க்கத்து மருமகள்
'தாலிச்சிறை' என்று சொல்ல
ஒப்பவில்லை மனது
தானாய் வரைந்த வட்டத்தை
'சிறையென்றா' சொல்வது?
கண்ணாடி வேலி உடைப்பது கடினமில்லை
மனமில்லையென்பதே மகத்தான உண்மை!
மாற்றம் வரும் நம்பிக்கையில்
புழுதியாயினும் சுகித்தபடி.....
அடக்கம்::::
கவிதைகள்
Tuesday, April 21, 2009
படித்ததில் பிடித்தது
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
-----காசி ஆனந்தன்
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
-----காசி ஆனந்தன்
அடக்கம்::::
படித்ததில் பிடித்தது
Monday, April 20, 2009
ஒளிவரும் நேரங்கள்
ஓய்வு ஒழிச்சலின்றி
உழைத்து விட்டு
உயிருள்ள சவமாய்
படுக்கையில் விழுகிறேன்!
பசியாறச் சொல்லியும்
பாசமாய் தலை தடவியும்
பக்கத்தில் நீ!
தன்மானம் துடித்து விழ
தளர்வாய் துவல்கிறேன்
இயலாமையில் கண்ணீர்
நில்லாமல் ஓட
பதறித் துடிக்கிறாய்
எனக்கே எனக்காய் நீ!
என்னை எடுத்தெறிந்து பேசும்
எல்லார் மத்தியிலும் எனக்காய் பேச
'என்னவன்' என்கிற உரிமையில்
அன்பான ஆதரவாய் நீ!
கால ஓட்டத்தில் கரைந்து போன
கனவுகளை காப்பாற்றி கரையேற்ற
கடவுளாய் நீ!
தனிமையில் பேசுகையில்- நீ
தவறி சொன்ன வார்த்தைகளுக்காய்
வாயாடிச் சிரிக்கையில்
வாரியணைத்து முத்தமிடும் நீ!
களிப்பில் கடமையை மறந்து
குழந்தையாய் மாறி குதூகலிக்கையில்
செல்லமாய் குட்டி பொறுப்புணர்த்தும்
புத்திசாலி போதகனாய் நீ!
தனிமையான நேரங்களில்
தண்மையாய் சொல்கிறாய்
"கலங்காதே! நானிருக்கிறேன்"
துணிவோடு நடக்கிறேன் மீண்டும்!
பகுத்தறிவு வேலை செய்கையில்
புரிகிறது தெளிவாய்!
நீ என்பது என் கனவுகளின்
எச்சம் என்று!
மனதின் உட்சுவரில் பூட்டி வைத்திருந்த
கற்பனை பிம்பம் கட்டுகாவல் தாண்டி
கள்ளனாய் சில நேரம் இப்படி
என்னுடன் உலா வரும் நேரங்கள்
கவலை தோய்ந்த கண்களில்
காதல் "ஒளிவரும் நேரங்கள்"!
அடக்கம்::::
கவிதைகள்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!