Monday, February 11, 2013

கவிக் கோர்வை - 03

பிரிவுக்கு முந்திய கணத்தை 
அழித்துவிட முயல்கிறேன் 
சவலையாய் நகர மறுக்கிறது 
அதுதான் காரணமாயிருக்கக் கூடும்
இத்தனை குழப்பத்துக்கும்

தீர்வுகாண்கையில் அதற்கும் முந்திய கணத்தில் 
நின் வருகைக்குக் காத்துக் கிடந்த 
கண்களாவது சாட்சிக்கு வேண்டும் 
கடுஞ்சொல் பொழிவித்த கண்ணீர் 
கரைக்காத காதலை தரிசிக்க....

No comments:

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!