Monday, September 24, 2012

நிலாச்சோறு


தோட்டத்தில் ஒரு பெட்டைக்கோழி
மண்ணைக் கிளறி
இரை தேடிக்கொண்டிருந்தது
கிடைக்கும் இரையை
அலகால் கொத்துவதும்
அதைப் பொடித்துக் குஞ்சுகளுக்கு
பங்கிடுவதுமாய்...
சட்டென நினைவுக்கு வந்தாள்
மாதக் கடைசிகளில்
நிலாச்சோறூட்டும் அம்மா!

1 comment:

KARTHIK said...

// மாதக் கடைசிகளில்
நிலாச்சோறூட்டும் அம்மா //

நிதர்சனம்...

வீட்டுக்குவீடு வாசப்படி :-)

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!