வசந்தம் வர காத்திருந்த மரம்
இன்னொரு இலையுதிர் காலத்தை
ஏக்கத்தோடு எதிர் கொண்டது
காற்றை மட்டுமே உண்டு
வாழக் கற்றுக் கொண்டது - அந்த
பாலை நிலத்து மரம்
தண்ணீர் வெறும்
தீர்த்த துளிகளாய் மட்டும்
எப்போதாவது
சாங்கியம் கருதி
உறிஞ்சிக் கொண்டன
சோர்ந்து கிடந்த வேர்கள்
சாரலோடு ஈரம் மணக்கவே,
நெடுநாள் பசி தீருமென
சுவை அரும்புகளை
தூசி தட்டி
திசுக்களை எல்லாம்
தீண்டி எழுப்பியது
நாளை முதல் தளிர்கள்
துளிர்க்கக் கூடும்
'தயாராயிரு!'
பட்டுப் போனது போக
பச்சை வெட்டிய
கணுக்களுக்கெல்லாம்
மூடப்பட்டிருந்த
'பச்சையத் தொழிற்சாலை'
பகிரங்க அறிவிப்பு செய்தது
தடபுடல் ஏற்பாட்டிற்கிணங்க
மழையும் வந்தது
பேயென பெய்த மழை
பெயர்த்துப் போனது
வேர்களோடு சேர்த்து
கணுக்களின் நம்பிக்கையையும்!
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Tuesday, January 5, 2010
துளிரத் துடித்த மரம்
அடக்கம்::::
தமிழ் ஈழம்
Tuesday, April 7, 2009
காணிக்கை
ஆதிக்கமிகுந்த சமுகத்தில் அடங்க மறுத்து
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை ஆத்திரமாய்
தட்டி கேட்டதே நின் தவறென போயிற்றோ?
வியர்வை சிந்தி வரப்பேற்றி
வயல் உழுது விதையிட்டு
உயிர் கொடுத்து பயிர் வளர்த்து
அறுவடை பார்க்கையில்
அரைப்பிடி நெல்லேயுனக்கு
அதுவும் அடிமையாய் வாங்கிப் போ!
அதிகாரமாய் சொன்னவனை
அனுசரித்து போகாததோ உன்
தப்பென சொல்லுகின்றார்!
நீ தமிழனல்லாவா?
எப்படி பிழைப்பாய் நீ
தன்மானம் விற்று?
உழுதவனுக்கே உழவுநிலம் சொந்தம்
பொதுவுடமைச் சித்தாந்தங்கள்
பெயரளவில் பள்ளிப்பாடமாய் இங்கே!
நெல்மணி எந்தச் செடியில் காய்க்கும்?
பிள்ளையின் கேள்வியை பெருமையாய் பீற்றிக்கொண்டு!
தோளைத் தட்டி முதுகை வளைக்கும் இராஜதந்திரம்
தெரியாமல் காலை தொட்டு சொகுசுக்காய்
தமிழின அடையாளத்தை தொலைத்து விட்டு
பதவிக்காய் நிறமாறும் அரசியல் தலைவர்கள்
இதையுமீறி எழுச்சிக்காய் யாராவது கருகிப்போனாலும் - அது
அன்றைய நாளிதழ் செய்தியாய் மட்டும்....
தமிழா! இவர்களிடமா எதிர்பார்க்கிறாய் தார்மீக ஆதரவை?
வந்தாரை வாழ வைக்குமாம் தமிழகம்
வாழ்க்கை முழுதும் ஈழத்தமிழன் - தன்
விலாசத்தை தேடித் தேடி நாடோடியாய்-எஞ்சியோர்
மண்ணை விட்டு மரணம் தேடிக் கொண்டு!
புத்தனை வணங்கும் கூட்டம்
புத்தநெறி வழுவாதிருத்தல் அவசியமன்றோ?
தீர்வெனச் சொல்லிச் சொல்லி
தீது செய்யும் தீயோர் நடுவில்
தனதுயிரை தானமாய் பெற்று வாழ
தமிழன் ஒருபோதும் தயாரில்லை
தன்மானம் இழக்காதவனை 'தீவிரவாதியென்று'
தனிப்பட்ட தீர்மானத்தை தரணியெங்கும்
நிலையெனப் பரவச்செய்த அரக்கர் கூட்டம்
பொய்மைக்கு கிடைத்த வெற்றியென
புலம் பெயரும் தமிழர் கூட்டம்...
எழில் கொஞ்சும் ஈழத்தீவில்
எழுத்தாணிக்குப் பதில் எந்திர துப்பாக்கி
இடிந்த வீடுகள் தகர்ந்த நிலைப்பாடு
மயானமாகிப் போன கிராமங்கள்
என்றைக்கு வரும் மரணம்
எதிர்பார்ப்பை தாங்கியபடி
தன்மான தமிழனின்று தன்னந்தனியாய்
தனக்கான சரித்திரத்தை எழுத
தன் குருதியில் நனைத்த தூரிகையோடு.....
பல ஆண்டு போராட்டம் - ஆனால்
இன்று,
தன் விரல் கொண்டு
தன் கண்ணைக் குத்தும்
மனிதாபிமான படுகொலை
தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில்...
கருகிச் சாவது அப்பாவி தமிழினம் மட்டுமென்று
உலகம் எப்போது ஏற்கும்?
கடுமையாய் எச்சரித்தாலும்
கண்ணீர் மட்டும் கட்டுகடங்காமல்...
மொழி,இனம்,மதம் கடந்த
இந்தியனாய் இருந்தாலும்
மறத்தமிழா உன் தியாகங்களுக்காய்
என்னால் இயன்ற காணிக்கையாய்
இந்த கண்ணீர் வரிகள்
உன்னை விற்று ஓட்டு வாங்கும்
தரமிழந்த தமிழனுக்கு ஒரு வார்த்தை
பாரதியின் வரிகளில்...
'சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு'
அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை ஆத்திரமாய்
தட்டி கேட்டதே நின் தவறென போயிற்றோ?
வியர்வை சிந்தி வரப்பேற்றி
வயல் உழுது விதையிட்டு
உயிர் கொடுத்து பயிர் வளர்த்து
அறுவடை பார்க்கையில்
அரைப்பிடி நெல்லேயுனக்கு
அதுவும் அடிமையாய் வாங்கிப் போ!
அதிகாரமாய் சொன்னவனை
அனுசரித்து போகாததோ உன்
தப்பென சொல்லுகின்றார்!
நீ தமிழனல்லாவா?
எப்படி பிழைப்பாய் நீ
தன்மானம் விற்று?
உழுதவனுக்கே உழவுநிலம் சொந்தம்
பொதுவுடமைச் சித்தாந்தங்கள்
பெயரளவில் பள்ளிப்பாடமாய் இங்கே!
நெல்மணி எந்தச் செடியில் காய்க்கும்?
பிள்ளையின் கேள்வியை பெருமையாய் பீற்றிக்கொண்டு!
தோளைத் தட்டி முதுகை வளைக்கும் இராஜதந்திரம்
தெரியாமல் காலை தொட்டு சொகுசுக்காய்
தமிழின அடையாளத்தை தொலைத்து விட்டு
பதவிக்காய் நிறமாறும் அரசியல் தலைவர்கள்
இதையுமீறி எழுச்சிக்காய் யாராவது கருகிப்போனாலும் - அது
அன்றைய நாளிதழ் செய்தியாய் மட்டும்....
தமிழா! இவர்களிடமா எதிர்பார்க்கிறாய் தார்மீக ஆதரவை?
வந்தாரை வாழ வைக்குமாம் தமிழகம்
வாழ்க்கை முழுதும் ஈழத்தமிழன் - தன்
விலாசத்தை தேடித் தேடி நாடோடியாய்-எஞ்சியோர்
மண்ணை விட்டு மரணம் தேடிக் கொண்டு!
புத்தனை வணங்கும் கூட்டம்
புத்தநெறி வழுவாதிருத்தல் அவசியமன்றோ?
தீர்வெனச் சொல்லிச் சொல்லி
தீது செய்யும் தீயோர் நடுவில்
தனதுயிரை தானமாய் பெற்று வாழ
தமிழன் ஒருபோதும் தயாரில்லை
தன்மானம் இழக்காதவனை 'தீவிரவாதியென்று'
தனிப்பட்ட தீர்மானத்தை தரணியெங்கும்
நிலையெனப் பரவச்செய்த அரக்கர் கூட்டம்
பொய்மைக்கு கிடைத்த வெற்றியென
புலம் பெயரும் தமிழர் கூட்டம்...
எழில் கொஞ்சும் ஈழத்தீவில்
எழுத்தாணிக்குப் பதில் எந்திர துப்பாக்கி
இடிந்த வீடுகள் தகர்ந்த நிலைப்பாடு
மயானமாகிப் போன கிராமங்கள்
என்றைக்கு வரும் மரணம்
எதிர்பார்ப்பை தாங்கியபடி
தன்மான தமிழனின்று தன்னந்தனியாய்
தனக்கான சரித்திரத்தை எழுத
தன் குருதியில் நனைத்த தூரிகையோடு.....
பல ஆண்டு போராட்டம் - ஆனால்
இன்று,
தன் விரல் கொண்டு
தன் கண்ணைக் குத்தும்
மனிதாபிமான படுகொலை
தீவிரவாத எதிர்ப்பு என்கிற பெயரில்...
கருகிச் சாவது அப்பாவி தமிழினம் மட்டுமென்று
உலகம் எப்போது ஏற்கும்?
கடுமையாய் எச்சரித்தாலும்
கண்ணீர் மட்டும் கட்டுகடங்காமல்...
மொழி,இனம்,மதம் கடந்த
இந்தியனாய் இருந்தாலும்
மறத்தமிழா உன் தியாகங்களுக்காய்
என்னால் இயன்ற காணிக்கையாய்
இந்த கண்ணீர் வரிகள்
உன்னை விற்று ஓட்டு வாங்கும்
தரமிழந்த தமிழனுக்கு ஒரு வார்த்தை
பாரதியின் வரிகளில்...
'சீச்சீ! நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு'
அடக்கம்::::
தமிழ் ஈழம்
Wednesday, April 1, 2009
கண்ணீரோவியம்
பாலுண்ணும் குழந்தை
பசியாற்றும் தாய்..
பகைவனின் தோட்டா
புறமுதுகைத் துளைத்திடினும்,
தாய்மையின் பெருமிதத்தில்
பசியாற்றும் தாய்..
பாலுண்ணும் குழந்தை!
[நிஜமாய் இப்படி ஒரு ஓவியம் பார்த்தேன்! கண்ணீர் வரிகள் கவிதையாய்....]
பசியாற்றும் தாய்..
பகைவனின் தோட்டா
புறமுதுகைத் துளைத்திடினும்,
தாய்மையின் பெருமிதத்தில்
பசியாற்றும் தாய்..
பாலுண்ணும் குழந்தை!
[நிஜமாய் இப்படி ஒரு ஓவியம் பார்த்தேன்! கண்ணீர் வரிகள் கவிதையாய்....]
அடக்கம்::::
தமிழ் ஈழம்
Saturday, March 28, 2009
"எப்போது?"
எங்கள்
கண்ணீர் கதையை
வார்த்தையாய் சுருக்கினேன்
வலியின் சுமை
வார்த்தையில்...
புரட்சிக்கவி என்றார்கள்
இளமை தீருமட்டும்
சிறைவாசம்
இன்று விடுதலை எனக்கு மட்டும்,
எப்போது என் நாட்டுக்கு?
கண்ணீர் கதையை
வார்த்தையாய் சுருக்கினேன்
வலியின் சுமை
வார்த்தையில்...
புரட்சிக்கவி என்றார்கள்
இளமை தீருமட்டும்
சிறைவாசம்
இன்று விடுதலை எனக்கு மட்டும்,
எப்போது என் நாட்டுக்கு?
அடக்கம்::::
தமிழ் ஈழம்
Monday, March 23, 2009
"இரண்டாம் உயிர்"
துப்பாக்கி முனையில்
என் குடும்பம் ....
மரணம் பெரிதா?
மானம் பெரிதா?
தன்னை தந்து - எம்மை
காத்தாள் என் சகோதரி!!
அந்நியன் தீண்டிய தேகம்
துறந்து ஆவியானாள்-அந்த
தன்மான தமிழச்சி !!
எங்கள் தேசத்தில்
எதுவும் நிலையில்லை
சுவாசம் உட்பட....
சூறையாடப்படுவது
உடமைகள் மட்டுமல்ல
எங்கள் பெண்டுகளும் தான்...
ஒவ்வொரு முறையும்
கண்ணீர் மட்டுமே
சாத்தியமாகிறது
என் சிதறிய குடும்பத்தை
நினைக்கையில்....
இன்றா? நாளையா?
என் மக்கள்
வாழும் நாள் யாவும்
மரண பயத்தில் ...
அந்நிய தேசத்தில் அகதியாய்
இனமானம் காக்க
அவள் தந்த 'இரண்டாம் உயிர்' ....
என் குடும்பம் ....
மரணம் பெரிதா?
மானம் பெரிதா?
தன்னை தந்து - எம்மை
காத்தாள் என் சகோதரி!!
அந்நியன் தீண்டிய தேகம்
துறந்து ஆவியானாள்-அந்த
தன்மான தமிழச்சி !!
எங்கள் தேசத்தில்
எதுவும் நிலையில்லை
சுவாசம் உட்பட....
சூறையாடப்படுவது
உடமைகள் மட்டுமல்ல
எங்கள் பெண்டுகளும் தான்...
ஒவ்வொரு முறையும்
கண்ணீர் மட்டுமே
சாத்தியமாகிறது
என் சிதறிய குடும்பத்தை
நினைக்கையில்....
இன்றா? நாளையா?
என் மக்கள்
வாழும் நாள் யாவும்
மரண பயத்தில் ...
அந்நிய தேசத்தில் அகதியாய்
இனமானம் காக்க
அவள் தந்த 'இரண்டாம் உயிர்' ....
அடக்கம்::::
தமிழ் ஈழம்
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!