Saturday, December 8, 2012

பாமர பக்தி -06


உரிமையுடன் உன்னைக்
கலைத்துப் போடுகிறேன்
கிழித்தெறிகிறேன்
குதறியெடுக்கிறேன்
சபிக்கிறேன்
வசைபாடுகிறேன்
பேசத் திராணியற்று
முடிவிலுன் தோள் சாய்கிறேன்
கோபமேயில்லையா
இன்னுமேன் நீடித்து
இழுத்தடிக்கிறாயென் ஆயுளை?

2 comments:

நிலாமகள் said...

அர்த்தம் புரியாமல் அடம் பண்ணும் குழந்தையை தாய் கொன்று போடுவதில்லையே...!

கயல் said...

:)

நன்றி

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!