Tuesday, June 2, 2009

'நறுக்'கென சில கிறுக்கல்கள்

நீரை விடுத்து பாலை
உறிஞ்சும் அன்னம்
முழுதும் நீரின் கையணைப்பில்!

**********

அலைக்கு போக்கு காட்டும்
அழகான கண்ணாமூச்சி
வளைக்குள் பதுங்கும் நண்டு!

**********

தாலாட்டும் குற்றலைகள்
மேடாகி சமமாகும் நிலவு
அரிசில் சிதற ஆர்ப்ப‌ரிக்கும் குழந்தை!

**********

துளைகளின் நடுவில்
சுவாசத்தின் பிரயாணம்
புல்லாங்குழலிசை!

**********

விழுதுகளுக்கு நடுவே
முளைவிட துடிக்கும் விதை

பின்னணியில்லாத‌ அரசியல்வாதி!

**********

தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!

**********

12 comments:

தென்னவன். said...

வாங்க வாங்க வாங்க
ரொம்ப நாளா
இருக்குற இடம் தெரியாம
இருந்துட்டு இப்போ
நறுக்குன்னு கொஞ்சம்
கிறுக்கிட்டு
பொறுப்பா வந்திருக்குற மாதிரி தெரியுதே
வார்த்தையில கொஞ்சம்
வாழ்கையின் வெறுப்பு தெரியுதே இம்ம்ம்ம்.......
இருந்தாலும் அந்த
"கடல் நண்டு" மேல நீங்க இவ்வளவு
காண்டாய் ஆகி இருக்க கூடாது..................

சரி அது போகட்டும்

"விழுதுகளுக்கு நடுவே
முளைவிட துடிக்கும் விதை
பிண்ணனியில்லாத அரசியல்வாதி!"

(விழுந்த எடம் சரி இல்ல, வேற ஒன்னும் இல்ல :) )

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்......

நன்றி
தென்னவன் ராமலிங்கம்

கயல் said...

அடடா!!! நமக்கு கூட வரவேற்பு கிடைக்குதுப்பா! நன்றி தென்னவன்!

மயாதி said...

நல்லாருக்கு கயல்...
அதென்ன கண்ணாம்பூச்சி?

vasu balaji said...

/தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!/
நறுக்கா மட்டும் இல்ல மிடுக்காவும் இருக்கு.

கயல் said...

//
மயாதி said...

நல்லாருக்கு கயல்...
அதென்ன கண்ணாம்பூச்சி?
//
ந‌ன்றி மயாதி! திருத்திட்டேனுங்க!

கயல் said...

//
பாலா... said...

/தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!/
நறுக்கா மட்டும் இல்ல மிடுக்காவும் இருக்கு.
//
நன்றி பாலா!

கலகலப்ரியா said...

v.good .. & wb.. after a long break.. mm?

Anonymous said...

4ம்,5ம்.. கவர்திருக்கிறது!

coolzkarthi said...

அக்கா rocking.....

நேசமித்ரன் said...

நல்ல கவிதைகள்
சொற்சிக்கனம்
அருமை ..!

Anonymous said...

தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!
--------------------
சமுதாய அவலங்களை நினைத்து பார்ப்பவனே மனிதன்.
வாழ்த்துகள்
மோகன் இராமசாமி

Anonymous said...

தொட்டால் பார்த்தால் தீட்டு
அவள் தொடுத்த மாலை சாமிக்கு
விதவை பூக்காரி!
------------------------------------
சமுதாய அவலங்களை நினைத்து பார்ப்பவனே மனிதன்.
வாழ்த்துகள்
மோகன் இராமசாமி

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!