Wednesday, February 15, 2012

தடுமாற்றம்


இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில்
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

9 comments:

நிரூபன் said...

வணக்கம் கயல்விழி,
அருமையானதோர் கவிதை,
பார்வைகளுக்கு இரையாகித் தடுமாறும் இதயத்தின் உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.

மதி said...

அருமையான கவிதை .. கடைசி வரிகள் கவிதைக்கு உயிரைக் கொடுக்கின்றன. ஒரு குழந்தைத்தனமான காதலின் ஆசை அருமையாக வெளிப்பட்டுள்ளது

Anonymous said...

கவிதை அருமை

ashik said...

beautiful....as usual.

போளூர் தயாநிதி said...

கவிதை அருமை

மதுரை சரவணன் said...

//காதல் துடிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளது கண் துடிப்பு வாழ்த்துக்கள்//

Anonymous said...

''..பத்திரப்படுத்தவா வேண்டாமா...''

கயல்! ஒரு தடவையோ ஏதோ ..பின் தங்களை என் பக்கம் காணோமே! நலமா? கவிதை நன்று. வாழ்த்துகள்.

I came through tamil manam வேதா. இலங்காதிலகம்.

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

மாலதி said...

அருமையானதோர் கவிதை....

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!